எந்தன் மகனேகோவிந்தா - 4
கோவிந்தனும் அவன் தந்தையும் பேசுவது போல் அமைக்கப்பட்ட பாடல் வரிசையில் இது நான்காவது. இந்தப் பதிவில் , இன்றைய தமிழ் நாட்டின் அரசியல் நிலைமையைப் பற்றி, கோவிந்தனின் கேள்விகளுக்கு தந்தை பதில் அளிக்கிறார். மேலே படியுங்கள்.
அன்புடன்
ரமேஷ்
முந்தைய "கோவிந்தா" பதிவுகள் படிக்க --
http://kanithottam.blogspot.in/2016/05/blog-post_15.html
http://kanithottam.blogspot.in/2016/10/2.html
http://kanithottam.blogspot.in/2016/12/3.html
எந்தன் மகனே கோவிந்தா
என்ன கவலை இன்றுனக்கு?
உந்தன் அகண்ட நெற்றியிலே
சிந்தனைக் கோடுகள் காண்கின்றேன்.
கோவிந்தன் :
நாட்டு நடப்பைப் பற்றித்தான்
நாளும் கவலைப் படுகின்றேன்
கேட்பேன் கேள்விகள் அப்பாவே
பதில்நீ கூறணும் இப்போவே
அ.தி மு.க ஆட்சியுமே
கவிழப் போகுது என்கின்றார்
அதிகம் ஓரிரு மாதங்களே - இதன்
ஆயுசு என்பது சரிதானா?
தந்தை :
ஒட்டுப் போட்ட மக்களுக்கு
பட்டு வாடா செய்தபணம்
மீட்க இன்னும் மாதம்பல
ஆகும் என்ற காரணத்தால்
ஆட்சி கவிழ விடமாட்டார்
ஆனால் தமிழகம் கவிழ்ந்து விடும்.
கோவிந்தன் :
கோடி கோடியாய் பணம்கொடுத்து
குதிரைப் பேரம் செய்தசெய்தி
ஊடகங்களை நிறைக்கிறதே - அதைப்
பார்க்கும் மக்கள் என்னசெய்வார்?
அடுத்த தேர்தல் வருகையிலே
அநியா யத்தை செய்தவரை
அடித்து விரட்டி விடுவாரா?
ஜனநா யகத்தைக் காப்பாரா?
தந்தை :
கோடி கோடியாய் பணம்பெற்ற
கூவத் தூரின் கும்பலையும்
வாரிவாரி அதை வள்ளல்போல்
வழங்கிய கட்சித் தலைமையையும்
நிச்சயம் சும்மா விடமாட்டார்
நீதியைக் கேட்டு பொங்கிடுவார்!
"எம்எல் ஏ-க்கு கோடிகளா?
எமக்குக் கேவலம் ஆயிரமோ ?
திருமங் கலத்தில் தொடங்கியது
அரவங் குறிச்சியில் அதிகரித்து
இராதா கிருஷ்ணன் நகரினிலே
இரண்டு மடங்காய் உயர்ந்தாலும்
இன்று எமக்குக் கிடைத்தபணம்
நாலே நாலு ஆயிரமே!
வரட்டும் அடுத்த தேர்தலுமே!
வாங்குவோம் வட்டியும் முதலு"மென
உரத்து உரைத்து இருக்கின்றார்.
பொறுத்து இருந்து நாம்பார்ப்போம்!
கோவிந்தனும் அவன் தந்தையும் பேசுவது போல் அமைக்கப்பட்ட பாடல் வரிசையில் இது நான்காவது. இந்தப் பதிவில் , இன்றைய தமிழ் நாட்டின் அரசியல் நிலைமையைப் பற்றி, கோவிந்தனின் கேள்விகளுக்கு தந்தை பதில் அளிக்கிறார். மேலே படியுங்கள்.
அன்புடன்
ரமேஷ்
முந்தைய "கோவிந்தா" பதிவுகள் படிக்க --
http://kanithottam.blogspot.in/2016/05/blog-post_15.html
http://kanithottam.blogspot.in/2016/10/2.html
http://kanithottam.blogspot.in/2016/12/3.html
எந்தன் மகனேகோவிந்தா-4
தந்தை :எந்தன் மகனே கோவிந்தா
என்ன கவலை இன்றுனக்கு?
உந்தன் அகண்ட நெற்றியிலே
சிந்தனைக் கோடுகள் காண்கின்றேன்.
கோவிந்தன் :
நாட்டு நடப்பைப் பற்றித்தான்
நாளும் கவலைப் படுகின்றேன்
கேட்பேன் கேள்விகள் அப்பாவே
பதில்நீ கூறணும் இப்போவே
அ.தி மு.க ஆட்சியுமே
கவிழப் போகுது என்கின்றார்
அதிகம் ஓரிரு மாதங்களே - இதன்
ஆயுசு என்பது சரிதானா?
தந்தை :
ஒட்டுப் போட்ட மக்களுக்கு
பட்டு வாடா செய்தபணம்
மீட்க இன்னும் மாதம்பல
ஆகும் என்ற காரணத்தால்
ஆட்சி கவிழ விடமாட்டார்
ஆனால் தமிழகம் கவிழ்ந்து விடும்.
கோவிந்தன் :
கோடி கோடியாய் பணம்கொடுத்து
குதிரைப் பேரம் செய்தசெய்தி
ஊடகங்களை நிறைக்கிறதே - அதைப்
பார்க்கும் மக்கள் என்னசெய்வார்?
அடுத்த தேர்தல் வருகையிலே
அநியா யத்தை செய்தவரை
அடித்து விரட்டி விடுவாரா?
ஜனநா யகத்தைக் காப்பாரா?
தந்தை :
கோடி கோடியாய் பணம்பெற்ற
கூவத் தூரின் கும்பலையும்
வாரிவாரி அதை வள்ளல்போல்
வழங்கிய கட்சித் தலைமையையும்
நிச்சயம் சும்மா விடமாட்டார்
நீதியைக் கேட்டு பொங்கிடுவார்!
"எம்எல் ஏ-க்கு கோடிகளா?
எமக்குக் கேவலம் ஆயிரமோ ?
திருமங் கலத்தில் தொடங்கியது
அரவங் குறிச்சியில் அதிகரித்து
இராதா கிருஷ்ணன் நகரினிலே
இரண்டு மடங்காய் உயர்ந்தாலும்
இன்று எமக்குக் கிடைத்தபணம்
நாலே நாலு ஆயிரமே!
வரட்டும் அடுத்த தேர்தலுமே!
வாங்குவோம் வட்டியும் முதலு"மென
உரத்து உரைத்து இருக்கின்றார்.
பொறுத்து இருந்து நாம்பார்ப்போம்!
Aha, arpudam, pramadham
ReplyDeleteThanks, Raman. Both for your appreciation as well as for using this comments option.
ReplyDelete