திருமால் பெருமை
ஓரங்கம் தலைதாங்க ஓர்பக்கம் ஒருக்களித்து
பேரரவின் மேலேறிப் படுத்துறங்கும் போதிலுமே
பேரண்டம் முழுவதையும் பாரிக்கும் பெருஞ்செயலை
சீரங்கத் தீவிலுறை சாரங்கன் செய்வானே !
அன்புடன்
ரமேஷ்
திருமால் பெருமை
ஓரங்கம் தலைதாங்க ஓர்பக்கம் ஒருக்களித்து
பேரரவின் மேலேறிப் படுத்துறங்கும் போதிலுமே
பேரண்டம் முழுவதையும் பாரிக்கும் பெருஞ்செயலை
சீரங்கத் தீவிலுறை சாரங்கன் செய்வானே !
அன்புடன்
ரமேஷ்
நதி
தாகத்தைத் தீர்த்துக்கொள்ள
வேகமாக ஓடுகிறது நதி -
கடலை நோக்கி!
பாவம்!
அதற்குத் தெரியாது -------
கடல் நீர் உப்புக் கரிக்கும் என்று!
அன்புடன்
ரமேஷ்
The Thirsty River rushes towards the sea
Seeking to Quench its Thirst.
Alas!
But little does it know that
The sea water is Salty!
ஜெப் பீசோசின் விண்வெளிப் பயணம்
இரண்டு செய்தித் துணுக்குகள்-
1. அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப் பீசோஸ் தனது நியூ ஷெப்பர்ட் என்ற ஏவுகணை ஊர்தியில் புவியீர்ப்பை கடந்து விண்வெளியில் பயணித்தார். இதற்காக அவர் செய்த செலவு 5.5 பில்லியன் டாலர்கள்.
2. 2020 ம் ஆண்டு அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதற்காக அவர் செய்த செலவு 38 பில்லியன் டாலர்கள்!
இது பற்றிய செய்திப் பரிமாற்றங்களின்போது என் நண்பர் அரவிந்த் "மனைவியிடமிருந்த தப்பிக்க அவர் செய்த செலவு, புவியீர்ப்பிலுருந்து தப்பிக்கச் செய்த செலவை விட அதிகமா இருக்கிறதே!" என்று வியந்தார்.
இது குறித்து நான் எழுதிய ஒரு நகைச்சுவை தமிழ் லிமெரிக், இதோ !
அன்புடன்
ரமேஷ்
புவியீர்ப்பு விசை மீற நாட்டம் !
அண்டத்தை ஆராயத் தேட்டம்!* *தேட்டம் = தேடல்
------பெண்டாட்டி தொல்லை
------இவருக்கோ இல்லை!
எனினும் ஏன் உலகைவிட்டு ஓட்டம்?
இவரது வாள்வீச்சுப் பயிற்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் , சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள ஒரு பள்ளி என்பது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் ஓர் செய்தி.
அவர் பல வெற்றிமாலைகளை வென்று சூட நமது வாழ்த்துக்கள்!
அன்புடன்
ரமேஷ்
வாய்ச்சண்டை ஓயாமல் போடுகின் றோரிடையே
வாள்சண்டை கற்றதிலே* தேர்ந்திட்ட காரிகையே * கற்று அதிலே
நீள்வாள் களத்தில் முதலிடத்தைப் பெற்றேநீ
மீள்வாய் பதக்கத் துடன்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
Many of us excel in oral word-fight
But you chose to excel in the sport of sword-fight
May you return with a medal 'round your neck
As a just reward for'ur* years of long trek *for your
Types of Kisses - there are many
And I'm not an expert in those any
But let me have my little say
On this Special World Kissing Day!
Some are given in the dark
Behind the bushes in the park.
Though these kisses are clandestine
In spirit and deed pure and pristine.
Some kisses make nary a sound
Still make your hearts go 'pound -pound -pound' !
Some do make a lot of noise- Well
To Each and every one his choice
Some say it with a flower single
With Kisses that make your lips tingle
Some Kisses are techtonic
While some others are Platonic!
The Kiss on the head your parents plant
Putting a price on it? No, You can"t !
The kiss you plant on your wife's forehead
Brings memories of the days courted!
The Kisses you give your children Grand
They sure belong to a different brand.
Hugging them with moist eyes
Can life give you a better prize?
Lovers, parents and friends for long
To whichever group you may belong
Blow them a Kiss and have your say
On Inter National Kissing Day.
முத்தத் திருநாள்
நேற்று அனைத்துலக முத்தத் திருநாள் - International Kissing Day!
ஒருநாள் தாமதமாக எழுதிப் பதிக்கிறேன்!
ஆனால் என்ன? முத்தம் இனிக்காமலா போகும்?
அன்புடன்
ரமேஷ்
முத்தத் திருநாள்
நேற்றுதான் என்பதை நானும் இன்றுதான் நினைவில் கொண்டேன்.
மெத்தனமாய் இருந்த தாலே மொத்தமாய் மறந்து போனேன்.
முத்தங்கள் பற்பல வகையாம்; அளிப்பதே தனியோர் கலையாம்!
அத்தனை பற்றியும் நானே அறிகிலேன் எனினும் கூட
எத்தனம் இங்கு செய்வேன் அவைகளைப் பட்டிய லிடவே!
சத்தமே சற்றும் இன்றி கன்னத்தில் இதழைப் பதித்து
மற்றவர் அறியா வண்ணம் அளித்திடும் முத்தம் ஒன்று!
இச்சையை எவர்க்கும் இங்கே மறைக்காது கன்னக் கதுப்பில்
இச்சென்ற சத்தத்தோடு பதித்திடும் முத்தம் ஒன்று!
ஒத்தை ரோசா மலரை காதலியின் கூந்தலில் சூட்டி
பத்துப் பதினோரு முத்தம் பதிப்பதும் இதழில் உண்டு!
அன்புடன் தலையை வருடி பெற்றவர் பாசத்தோடு
சென்னியை முகர்ந்தளிக்கும் உன்னத முத்தம் ஒன்று !
என்றுமே நம்மைப் பிரியா திணைந்துநடை போடும் இல்லாள்
நெற்றியை நுகர்ந்து நாமும் அளித்திடும் முத்தம் ஒன்று!
பேரனை பெயர்த்தி களையும் சேர்த்தணைத்துக் கரங்களில் எடுத்து
ஈரத்தில் கண்கள் நனைய இட்டிடும் முத்தம் ஒன்று!
எவ்வகையைச் சார்ந்தது எனினும் ஏதோவொரு வகையின் முத்தம்
செவ்வையாய் பிறருக் களித்து முத்தநாள் கொண்டா டிடுவோம்!
முத்தநாள் முந்தைய நாளே முடிந்தே போனால் என்ன?
முதலோடு வட்டியும் சேர்த்து இதமாக அளிப்போம் இன்றே!
பிரதோஷப் பாடல் - 40
இன்றைய பிரதோஷப் பாடலுடன் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தலத்தைப் பற்றிய வரலாறையும் கொடுத்திருக்கிறேன்.
அன்புடன்
இரமேஷ்
ஏமகூட* மேருமலையை வில்லாய் வளைத்தவன்
வாமபாக தேகமீதில் தேவியைத் தரித்தவன்
காமநாசன் ஆமிரேசன்** பேரைப்பாடி வணங்கிடும்
பாமரற்கும் சேமகாலம் ஆமளவும்*** அளிப்பனே
* ஏமகூடம்= மேருமலை
** ஆமிரேசன்= மாமரத்தினடியில் அமர்ந்துள்ள ஈசன்
*** ஆமளவும் = எப்பொதும் , கூடிய விரைவில்
"eka" means one and "amaram" means mangoe tree. Legend has it that Parvathi was sitting under the mangoe tree in the temple and was performing penance. Wanting to test her, Lord shiva, directed fire at her. Parvathi took the help of Vishnu, who colled the fire using the rays of the moon. Then Shiva sent the river Ganga but Parvathi convinced her that both of them were sisters and that she should not disturb her penance. After completing her penance, Parvathi was united with Shiva.
தங்க மங்கை
SPIC நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிந்த திரு. அமானுல்லா பதித்த ஒரு காணொளிப் பதிவிலுருந்து எடுக்கப்பட்ட படம் இது!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் எடுக்கப்பட்டது.
இதைப் பற்றி ஒரு கவிதை - அவர் கேட்டுக்கொண்டபடி !
அன்புடன்
ரமேஷ்