Search This Blog

Jul 5, 2021

தங்க மங்கை


தங்க மங்கை 

SPIC நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிந்த திரு. அமானுல்லா பதித்த ஒரு காணொளிப் பதிவிலுருந்து எடுக்கப்பட்ட படம் இது!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் எடுக்கப்பட்டது.

இதைப் பற்றி ஒரு கவிதை - அவர்  கேட்டுக்கொண்டபடி !

அன்புடன் 

ரமேஷ் 




தங்கச் சுரங்கம் ஒன்றைத் 
-----தேடியே  வெட்டி எடுத்து 
துங்கம்* செய்த தங்கத்தில்                              
-----அங்கியொன்றை அழகாய்ச் செய்து 
தொங்கலுடன்** தலையில் தொப்பி             
-----முன்கைக்கோர் காப்புறை என்று 
அங்கங்கே அங்கங்கள் மேலே 
----ஆபரண மணிந்தாள் மங்கை!

அங்கங்கள் முழுதும் அவளே 
-----தங்கத்தால் மறைத்திருந் தாலும் 
தங்கத்தை மிஞ்சும் அவளின் 
-----முழுமுகச் சிரிப்பே ஒளிரும்!
மங்கிடும் தங்கத்  தொளியும்  
-----மெருகேற்ற வில்லை என்றால்! 
மங்காது இவள்முகத் தொளியே! 
-----இங்கிதற் கிணையும் இலையே !! 

*துங்கம்=பரிசுத்தம்
** தொங்கல் = காதில் அணியும் அணி 

11 comments:

  1. அருமை, அருமை, கவிஞரே!

    ReplyDelete
  2. மெருகேற்றாமலே ஜொலிக்கிறது உன் கவிதை !!

    ReplyDelete
    Replies
    1. உன் தமிழிலும் நல்ல மெருகேரிக் கொண்டிருப்பதைப் பார்க்கிரேன்!

      Delete
  3. அங்கத்திலே உள்ள குறை பாடுகளை தங்கத்தினால் மூடி மறைக்கலாம், ஆனால் அந்த சுங்க அதிகாரிகள் இந்த நங்கயை விந்தகத்தில் விட்டு விடுவார்களா? அல்லது தங்கள் பங்கை கேட்பார்களா? கூறும் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வேண்டிய விஷயம்!

      Delete
    2. குந்தகத்தில் ஏன்பதிர்க்கு பதிலாக விந்தகத்தில் என்று எழுதியதிர்க்கு மன்னிக்கவும்!

      Delete
  4. தங்க மங்கைக்குக் கவிதை அருமை. புன்னகை பற்றிக் கூறியதும் உண்மை.

    ReplyDelete
  5. தங்கமான கவிதையில் மங்கை தங்கத்தைவிட ஜொலிக்கிறாள்.

    ReplyDelete