இதழ் விரிக்கும் மலர் மொட்டு
என்னுடைய கல்லூரி நண்பர் வரதராஜன் அனுப்பிய ஒரு ஆங்கிலக் கவிதையை மொழி பெயர்த்து நான் எழுதியது இந்தக் கவிதை.
மூலம் - சுபி கவிஞர் ஜலாலுதீன் ருமி.
படம்: Getty Images யிலுருந்து , நன்றியுடன்
அன்புடன்
ரமேஷ்
இதழ் விரிக்கும் மலர் மொட்டு
கடவுள் படைத்த ரோஜா மொட்டை
எடுத்துக் கையில் அன்புடன் அணைத்து
தடவிக் கொடுத்து இதழைப் பிரிக்க
முயன்றேன் ஆனால் முடிய வில்லையே!
மெதுவாய்ப் பதமாய் தொட்ட போதிலும்
இதழ்கள் கீழே உதிர்ந்து விழுந்தன!
மொட்டின் மலரிதழ் விரியச் செய்யும்
மருமம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!
மொட்டின் இதழை விரிக்கும் செயலே
என்னால் இங்கு இயலா திருக்கையில் ,
முன்னால் விரியுமென் வாழ்க்கையின் மருமம்
ஆராய்ந் தறிதல் எங்கனம் இயலும்?
ஒட்டி இருந்த மொட்டின் இதழ்களின்
கட்டை அவிழ்த்து மலரச் செய்தவன்
வருகிற வாழ்க்கைத் தருண மனைத்தையும்
பிரித்துப் பின்னே மலரச் செய்வான்
கண்முன் தெரியும் வாழ்க்கைப் பாதையின்
மருமம் அனைத்தும் அறிந்தவன் அவனே!
நண்பனாய் அவனை நம்பி நடந்தால்
நலனே என்றும் நடக்கும் என்றறிவோம்.
Great analogy to understand that our future is decided by Him and we should not try to second guess it on fast forward, just as we should not try to open the petals of a Rose and destroy it in the process. Very true. Perhaps there are exceptions here. The Queen of Flowers - Lotus - defies this concept since it is possible (necessary?) to open the Lotus Bud and arrange the petals beautifully, to give pleasure to the onlookers for an extended period. (https://orchidclub.us/blogs/information/lotus-care-when-received) Same way, there are some Enlightened Souls (Gnyanis) in this world, who know their Destiny and formulate their lives accordingly, for the benefit of the society. Question is - Do we belong to that Enlightened group??!!
ReplyDeleteThanks for the thoughtful comment and feedback. Never thought about the Lotus!Has set me thinking now.
Deleteஅன்புள்ள அருமை நண்பா ,
Deleteஉன் கவிதை "இதழ் விரிக்கும் மலர் மொட்டு"
என் அறிவை விரிவாக்கும் சிந்தனை சொட்டு
கடவுள் உள்ளார் எனும் நம்பிக்கையை
மீண்டும் செய்துவிட்டாய் என்னை சிந்திக்க .
என்றும் உன் நண்பன் ராம்மோகன்
Good Message .Thanks .SKM
ReplyDeleteமுற்றிலும் உண்மை.அனைத்தும் அவன் செயல்.
ReplyDeleteரோஜா இதழ்களின் மொட்டையே புரிந்து கொள்ள முடியாவிடில் வாழ்க்கை எனும் ரோஜாவை எப்படி புரிந்துகொள்ள முடியும் என்ற தத்துவம் மிக யதார்த்தம்.
ReplyDeleteஅருமையான கவிதை.
மிருதுவாக இருக்கும் இதழ்களை
ReplyDeleteமெதுவாக தடவினாலும் அதுவாக மலர்ந்தால்தான் வழி என்பது போல், மனக்கதவு தானாக திறக்க பொதுவாக சாந்தம் வேண்டும்!
எதுகை ஏதுவாக பயன் படுத்தவில்லை- வெங்கட்