Search This Blog

Jul 7, 2021

முத்தத் திருநாள்

முத்தத் திருநாள்

நேற்று அனைத்துலக முத்தத் திருநாள் - International Kissing Day!

ஒருநாள் தாமதமாக எழுதிப்  பதிக்கிறேன்!

ஆனால் என்ன? முத்தம் இனிக்காமலா போகும்?

அன்புடன் 

ரமேஷ் 


முத்தத் திருநாள் 





மொத்தஉலக நாடுகளுமே முத்ததினம் கொண்டா  டிய நாள் 

நேற்றுதான் என்பதை நானும்   இன்றுதான்  நினைவில் கொண்டேன்.

மெத்தனமாய் இருந்த தாலே  மொத்தமாய் மறந்து போனேன்.


முத்தங்கள் பற்பல வகையாம்; அளிப்பதே தனியோர் கலையாம்!

அத்தனை பற்றியும் நானே அறிகிலேன் எனினும் கூட 

எத்தனம் இங்கு செய்வேன் அவைகளைப் பட்டிய  லிடவே!


சத்தமே சற்றும் இன்றி கன்னத்தில் இதழைப் பதித்து 

மற்றவர் அறியா வண்ணம் அளித்திடும் முத்தம் ஒன்று!

இச்சையை எவர்க்கும் இங்கே மறைக்காது கன்னக் கதுப்பில் 

இச்சென்ற சத்தத்தோடு பதித்திடும் முத்தம் ஒன்று!

ஒத்தை ரோசா மலரை காதலியின் கூந்தலில்  சூட்டி 

பத்துப் பதினோரு முத்தம் பதிப்பதும் இதழில் உண்டு!


அன்புடன் தலையை வருடி பெற்றவர் பாசத்தோடு 

சென்னியை முகர்ந்தளிக்கும் உன்னத முத்தம் ஒன்று !

என்றுமே நம்மைப் பிரியா திணைந்துநடை போடும் இல்லாள் 

நெற்றியை நுகர்ந்து நாமும் அளித்திடும் முத்தம் ஒன்று!

பேரனை பெயர்த்தி களையும் சேர்த்தணைத்துக் கரங்களில் எடுத்து 

ஈரத்தில் கண்கள் நனைய இட்டிடும் முத்தம் ஒன்று!


எவ்வகையைச் சார்ந்தது எனினும் ஏதோவொரு வகையின் முத்தம்  

செவ்வையாய் பிறருக் களித்து முத்தநாள் கொண்டா டிடுவோம்!

முத்தநாள் முந்தைய நாளே  முடிந்தே போனால் என்ன?

முதலோடு வட்டியும் சேர்த்து இதமாக அளிப்போம் இன்றே!





7 comments:

  1. ஆஹா, தெரியாமல் போய்விட்டதே! குறிப்பிட்ட எல்லா முத்தவகைகளைக்காட்டிலும் எவருக்கும் தெரியாமல் காதலிக்கு கொடுத்து அனுபவித்த முதல் முத்த்திற்கு ஈடு இணையில்லை!

    ReplyDelete
  2. Very sure none would have fathomed deep the variants of kissing ,as you have done Ramesh! Beautifully penned!!

    ReplyDelete
  3. Not sure if anyone has fathomed the kissing variants as you have ,Ramesh! Beautifully penned!! Sharing

    ReplyDelete
  4. இந்த முதுமயிலும் முத்தத்தின் மேல் இச்சை தாத்தாவின் சித்ததை விட்டு போக வில்லை போலும்! அல்லது முத்ததினால் வந்த உன்மத்தம் ரத்தத்தில் உறைந்ததோ!

    ReplyDelete
  5. In this pandemic times உதடுகளை பதிக்க முகமூடி குறுக்கே நிர்குதே என்று தவிக்காமல்! எச்சிலை தவிர்க்கமுடியாத இந்த இச்சயை இனி மறந்திட வேண்டும் என்ற நிலயில் சர்வதேச தினம் கொண்டாட்டம் வேற தேவையா?

    ReplyDelete
  6. பல வித முத்தங்கள் . நல்ல விளக்கம். நன்றி
    SKM

    ReplyDelete
  7. Very nicely analysed the variety of kisses. I particularly liked the one about the kiss received from the grandchild. Well written Ramesh

    ReplyDelete