Search This Blog
Mar 16, 2020
Mar 13, 2020
கரோனா பாடல்- 2
கரோனா பாடல்- 2
உலகெங்கும் கரோனா கிருமியின் தாக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
இதன் தாக்குதலிலிருந்து தப்பிக்க முக்கியமான இரண்டு யுக்திகள் -
1. கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்; மற்றவரோடு கையை
குலுக்காதீர்கள்;கைகளால் முகத்தை தொடுவதை தவிருங்கள்.
குலுக்காதீர்கள்;கைகளால் முகத்தை தொடுவதை தவிருங்கள்.
2. மற்றவர்களின் இருமல், தும்மல் இவைகளின்போது வெளிவரும் கிருமிகளைத் தவிர்க்க , வாய், மூக்கு இவற்றை மறைக்கும் முகமூடியை அணியுங்கள்
என்பதாகும்.
இவற்றை வற்புறுத்தும் கருத்தூது ஒரு வெண்பா.
அன்புடன்
ரமேஷ்
கொரானா கிருமிக் குழுமத்தின் தாக்கம்
வராமல் இருக்க வழியுண்டு - ஆட்டக்கை *
நீட்டாம லேயிருந்து மூடி முகமறைத்தால்
வாட்டாது நோயென் றறி.
*ஆட்டக்கை= கையை ஆட்ட, கையை குலுக்க எனப் பொருள் கொள்க
வராமல் இருக்க வழியுண்டு - ஆட்டக்கை *
நீட்டாம லேயிருந்து மூடி முகமறைத்தால்
வாட்டாது நோயென் றறி.
*ஆட்டக்கை= கையை ஆட்ட, கையை குலுக்க எனப் பொருள் கொள்க
** மூடி முகமறைத்தால் = முகமூடி (mask ) அணிந்தால்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
கரோனா பாடல்- 1
கரோனா பாடல்- 1
அன்புடன்
ரமேஷ்
சீனாவில் செய்த மலிவுவிலைப் பண்டத்தை
சீனாவில் இருந்து பலவிதமான பொருள்கள் அடிமாட்டுவிலைக்கு இந்தியச் சந்தையிலும், உலகச் சந்தைகளிலும் விற்கப்பட்டுவரும் இந்த நேரத்தில், அங்கிருந்து வரும் இன்னொரு வேண்டாத ஏற்றுமதி இந்த கரோனா நோய்க்கிருமி!
முன்னதை வரவேற்றுப் பயனடைந்தோறும், பின்னதை ஏற்பதில்லை!
இரண்டும் இந்திய பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை!
இது பற்றி ஒரு வெண்பா .
ரமேஷ்
சீனாவில் செய்த மலிவுவிலைப் பண்டத்தை
நீ-நான் எனமுந்தி ஓடிப்போய் வாங்கியவர்
யூகானில் உற்பத்தி ஆன பொருள்*மட்டும்
ஆகாது என்கிறார் இன்று !
* யூகானில் உற்பத்தி ஆன பொருள்= கரோனா நோய்க்கிருமி
* யூகானில் உற்பத்தி ஆன பொருள்= கரோனா நோய்க்கிருமி
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
Mar 7, 2020
பிரதோஷப் பாடல் - 33
பிரதோஷப் பாடல் - 33
ரமேஷ்
தோல் மருத்துவர் முல்லைவன நாதர்
ஈசனார் உறையும் முல்லைத்
-----திருத்தலக் கோயில் சென்று
பூசனை பலவும் செய்து
-----பக்தியுடன் அவனைத் துதித்து
வாசனைப் புனுகுச் சட்டம்
-----பூசியபி ஷேகம் செய்தால்
மாசுற்ற தோற்குறை நீங்கி
-----தேசுற்றுப் பொலியும் தேகம் .
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
என் முந்தைய பதிவுகளில் கூறியிருந்த படி, திருக்கருகாவூர் முல்லைவனநாதர் மூலவர் உருவம் கல்லால் ஆனதல்ல - புற்று மணலால் ஆனது. அதனால் , அந்த மூலவருக்கு பால், நீர் முதலிய திரவப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. புனுகுச் சாந்தைச் சாத்தி மட்டும் அபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு செய்து வேண்டிக்கொள்பவர்களின் சரும நோய் அகலும் என்பது ஐதீகம்
இந்தக் கோவிலை கட்டிய கிள்ளிவளவனும் அவனைப் பிடித்திருந்த சரும நோய் முற்றும் விலகப் பெற்றான் என்பது வரலாறு.
இந்தப் பிரதோஷ தினத்தன்று இந்தத் தல வரலாறைப் பற்றி ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
தோல் மருத்துவர் முல்லைவன நாதர்
ஈசனார் உறையும் முல்லைத்
-----திருத்தலக் கோயில் சென்று
பூசனை பலவும் செய்து
-----பக்தியுடன் அவனைத் துதித்து
வாசனைப் புனுகுச் சட்டம்
-----பூசியபி ஷேகம் செய்தால்
மாசுற்ற தோற்குறை நீங்கி
-----தேசுற்றுப் பொலியும் தேகம் .
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
Mar 4, 2020
காத்திருப்பு
யாணர் என்ற கவிதைத் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்திற்கு ஏற்ப நான் எழுதி அந்தத் தளத்தில் பதித்த ஒரு பாடல்!
அன்புடன்
ரமேஷ்
காத்திருப்பு
ஒருகை நீட்டி சிறிதே திறந்து
ஒருக் களித்த கதவின் வழியே
ஒருகரு விழியால் வரும்வழி நோக்கி
சிறிதாய் ஏக்கம் அதனுள் தேக்கி
ஒருபா திமுகம் மட்டும் காட்டி
தன்மறு பாதித் தலைவனின் வருகை
எதிர்பார்த் திருக்கும் ஏந்திழை இவளே!
Mar 2, 2020
குறுந்தொகை - 279
குறுந்தொகை - 279
இந்தக்கால இளம் பெண் ஒருத்தியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவளது பெற்றோர்
வெளியே சென்றிருக்கிறார்கள்,
,அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள்.
அப்போது அவள் தன் தோழியை தொலைபேசியில் அழைத்து -
" என் பெற்றோர் வீட்டில் இல்லை. திரும்பி வர நேரம் ஆகும். நீ வேகமாகப் போய் என் காதலனை
என் வீட்டுக்கு உடனே வரச் சொல். வந்தால் நாங்கள் இருவரும் சற்று "ஜாலியாக" இருக்கலாம் "
என்று கூறுகிறாள்.
இதை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
'என்ன பெண் இவள்? காலம் கெட்டுப் போச்சு! என்ன இருந்தாலும் அந்த காலப் பெண்களுடைய
அடக்கம் இந்தக் காலத்துப் பெண்களுக்கு இல்லவே இல்லை! " என்றுதானே?
"அந்தக் " காலப் பெண்கள் என்ன செய்தார்கள் என்று சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்போமா-
இந்த குறுந்தொகைப் பாடல் வழியே?
குறுந்தொகைப் பாடல் 279
சேயாறு சென்று, துனை பரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்று, மற்றில்ல,
வயச்சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல நிறப் பெருங்கடல் புக்கனன், யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள், இதனால்,
பனியிரும் பரப்பில் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே.
என்ன புரியவில்லையா?
இதன் பொருள் :
உசாவுநர்ப் பெறினே நன்று, மற்றில்ல,
வயச்சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல நிறப் பெருங்கடல் புக்கனன், யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள், இதனால்,
பனியிரும் பரப்பில் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே.
என்ன புரியவில்லையா?
இதன் பொருள் :
நெடுவழியில் சென்று சென்ற வேகத்தில் இந்தப் பொருத்தமான நேரம் பற்றி அவருக்கு யாராவது சொன்னால் நல்லது.
சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு மாறி வர உப்பங்கழனிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம்.
அந்தக் காலப் பெண்கள் நல்ல " விவரமானவர்கள்" தான்!
இதையே நான் ஒரு சிறு கவிதையாக இதோ தருகிறேன் - !ஒரு வெண்டுறை வடிவில் !
படகேறிச் சென்றுளான் என்தந்தை ; தாயும்
கடைவீதி சென்றாளே தோழி - உடனே
வரச்சொல்லென் காதலனை விரைந்து ; அவன்வரினே
பெறலாம் இனிதாய் எனை!
இதே பாடல் ஒரு லிமெரிக் (limerick )* வடிவத்தில் :
என் பெற்றோர்கள் போனார் வெகுதூரம்
என் பெற்றோர்கள் போனார் வெகுதூரம்
அவங்க திரும்பிவர ஆகும் ரொம்ப நேரம்
என் காதலனை நானும்
பார்த்துப் பேச வேணும் -
அவன் வந்தாதான் அடங்கும் எந்தன் தாகம்
இந்தக் கருதோடு ஒரு சினிமாப் பாடல் கூட இருப்பதாக நினைவு !
ஞாபகம் வரவில்லை!
யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!
அன்புடன்
ரமேஷ்
பி.கு : இதற்கு முன்னே, "ஊதா கலர் ரிப்ப" னோடு இணைந்த ஒரு நற்றிணைப் பாடல் பற்றி
எழுதியிருந்த பதிவை இந்த இணைப்பில் பார்க்கலாம்!
https://kanithottam.blogspot.com/2016/12/blog-post.html
Update :
இந்தப் பதிவைப் படித்த நண்பர் வரதராஜன் , இதே கருத்தோடு எழுப்பட்டிருந்த
சினிமாப் பாடலை நினைவு படுத்தினார் - " மம்மி டாடி வீட்டில் இல்லை " என்ற பாடல் .
இதைப் படித்தல் இந்தக் காலப் பெண்கள் ஒரு படி என்று தோன்றுகிறது!
இதோ அந்தப் பாடல் :
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்... கேளேண்டா மாமூ... இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
டாடி மம்மி... டாடி மம்மி...
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
இந்தக் கருதோடு ஒரு சினிமாப் பாடல் கூட இருப்பதாக நினைவு !
ஞாபகம் வரவில்லை!
யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!
அன்புடன்
ரமேஷ்
பி.கு : இதற்கு முன்னே, "ஊதா கலர் ரிப்ப" னோடு இணைந்த ஒரு நற்றிணைப் பாடல் பற்றி
எழுதியிருந்த பதிவை இந்த இணைப்பில் பார்க்கலாம்!
https://kanithottam.blogspot.com/2016/12/blog-post.html
Update :
இந்தப் பதிவைப் படித்த நண்பர் வரதராஜன் , இதே கருத்தோடு எழுப்பட்டிருந்த
சினிமாப் பாடலை நினைவு படுத்தினார் - " மம்மி டாடி வீட்டில் இல்லை " என்ற பாடல் .
இதைப் படித்தல் இந்தக் காலப் பெண்கள் ஒரு படி என்று தோன்றுகிறது!
இதோ அந்தப் பாடல் :
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்... கேளேண்டா மாமூ... இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
டாடி மம்மி... டாடி மம்மி...
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
Feb 27, 2020
எது கவிதை?
எது கவிதை?
எதுகையும் மோனையும் , பிற இலக்கண லட்சணங்களும் இருப்பதுதான் கவிதையா?
இது பற்றி நான் எழுதி என் கல்லூரி நண்பர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
எது கவிதை? யார் கவிஞர்?
பதுங்கிப் பலநாள் மனதின் உள்ளே புதைந்த கருத்துக்கள்
மிதந்து வெளியே வார்த்தை வடிவில் வருவது கவியாகும்.
எதுகைமோனை தளை கள் இவைகள் இருக்கும் சிலவற்றில்.
அதுஇல்லாமல் தளைகளை உடைத்து எழுவதும் கவிதைதான்.
படிப்போருக்கு படைப்பவன் கருத்து போயடையும் வரையில்
துடிக்கும் சொற்கள் கருத்துகளுக்கு உயிரூட்டும் வகையில்
வடிக்கும் எல்லாப் படைப்பு களுமே கவிதை வடிவம்தான்.
அடித்துச் சொல்வேன் அப்படி எழுதும் அனைவரும் கவிஞர்களே.
அன்புடன்
ரமேஷ்
Subscribe to:
Posts (Atom)

