Search This Blog

Sep 23, 2016

மனீஷ பஞ்சக ஸ்தோத்ரம்.-2



MANEESHA PANCHAGAM -2 


Thanks for the good reception  for the first part of the Manisha Panchagam. Actually , that was the prologue , in which the question posed by the Lord , coming in the form of a chandaala  , to Adi Sankara triggers Sankara's realisation which he propounds in the form of Five slokas. 

In this blog I will cover the first two slokas. I am giving the Sanskrit version first  , followed by the English translation   and the Tamil poem composed by me in which i try to capture the spirit of the sloka , sticking to the original version as much as possible , with some poetic licence. 

Before going into the slokas, a few clarifications - 
1. The Sanskrit version in the Tamil manuscript,   may not reflect correctly the phonetics of the original  sloka. Pardon me for this limitation.
2. For the translations in English and Tamil , I have  depended on/ reproduced from  the following texts : 
    1.  Shanthi Paadaas  compiled by Swami Guruparaananda and published by Sanatana Publications 
    2.  The website sanskritdocuments.org.

 

கேள்வி கேட்ட புலையன் சிவபெருமானே என்று உணர்ந்த சங்கரர் துதித்துப் பாடிய
 மனீஷ பஞ்சக ஸ்தோத்ரம்.


ஜாக்ரத்ஸ்வப்ன சுஷுப்திஷீ ஸ்புடதராயா சம்விதுஜ்ஜ்ரும்பதே 
யா ப்ரஹ்மாதிபீலிகாந்ததனுஷு ப்ரோதாஜகத்சாக்ஷிணீ
சைவாகன் ந சா த்ருச்யவஸ்த்விதி த்ருப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத் 
சாண்டாளோஅஸ்து து த்விஜோஅஸ்து குருரித்யேஷா மனீஷா மம II

one who  is convinced firmly, that he is that very Soul which manifests itself in all the conditions of sleep, wakefulness and dream, in all the objects  from the great  Brahma (thecreator) to the tiny ant and which is also the vibrant, but invisible, witnesser of all, then as per my clear conclusion, he is the great teacher/preceptor, be he a twiceborn (i.e higher castes) or an outcaste. 




விழிப்பிலும்,         கனவிலும்,      உறக்கத்திலும்
அழியா                   திருந்திடும்     அறிவெதுவோ ,
பிரம்மனி               லும்புழு            பூச்சியிலும்
நிறைந்து                விளங்கும்       அறிவெதுவோ ,
உள்ளுறை              அத்தகு              அறிவேநான் !
வெளியே                காணும்             பொருளல்ல.!

இத்தகு                     ஞானம்             எவர்க்குண்டோ
அந்தணர் ,              புலையர் ,         எவரேனும்                  
அத்தகை                 யார் என்            குருவாவார்
இதுவே                     உறுதியெனச்   சொல்வேன்.       


ப்ரஹ்மை வாஹமிதம் ஜகச்ச சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணயா ஸேசம் மயா கல்பிதம் I
இத்தம் யஸ்ய த்ருபா மதி: சுகதரே நித்யே  பரே நிர்மலே
சாண்டாளோஅஸ்து து த்விஜோஅஸ்து குருரித்யேஷா மனீஷா மம II 
 
I am quite convinced that he is the great Master, be he a Brahmin or an outcaste, who, dwelling on the pure and infinite Brahman thinks of himself as that very Brahman, of whose manifestation the whole Universe is,though apparently the Universe is assumed to consist of different things,due to ignorance and the three Gunas(Satva,Rajasand Tamas)

நானும்                          பிரம்மனின்           ஓர்வடிவம் .
காணும்                        பிரபஞ்சப்               பொருளனைத்தும் .
எதுவும்                         அவனது                   வடிவம்தான்.
மதியை                        மயக்கும்                 முக்குணத்தால்            

உலகப்                          பொருளை              அவனின்று

விலக்கிப்                      பார்த்தல்                 தவறாகும் 

 


இத்தகு                     ஞானம்               எவர்க்குண்டோ

அந்தணர் ,              புலையர் ,          எவரேனும்                  

அத்தகை                 யார் என்            குருவாவார்

இதுவே                     உறுதியெனச்   சொல்வேன்.      





 

Sep 20, 2016

வாழ்வில் ஆனந்தம் பகுதி - 1- தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்

வாழ்வில் ஆனந்தம் பகுதி - 1-  தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்

இப்போது நான் சென்னை விடுத்து என் மூத்த மகனின் குடும்பத்துடன் சில நாட்களைக் கழிக்க அமெரிக்கா  வந்திருக்கிறேன். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் இங்கு தங்கியிருக்கையில்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன் என்பதை நினைவு கூறுகிறேன்.

அப்போது , என் பேத்தியுடன் கழித்த இனிய பொழுதுகளை பற்றியம் , மற்றவற்றைப் பற்றியும்  ஒரு கவிதை எழுதினேன். சில நண்பர்களுடனும், உறவினர்களிடமும் பகிர்ந்துகொண்டேன்.

அந்தக் கவிதையை இப்போது இரண்டு பாகங்களாகப்  பதிவு செய்கிறேன். 

முதல் பகுதி என் பேத்தியுடன் கழித்த நேரங்களை பற்றியது. குறிப்பாக, அதிதி என்று அவள் பெயரை உள்ளிருத்தி  அப்போது எழுதிய அந்தக் கவிதையை இப்போது பொதுவாக எல்லாப் பேத்திகளுக்கும்  பொருத்தும்படி மாற்றியிருக்கிறேன்.

எல்லாத் தாத்தாக்களுக்கும்  சமர்ப்பணம்


வாழ்வில் ஆனந்தம் பகுதி - 1-  தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்


முதுகினில் பேத்தியை  ஏற்றியே மூட்டைபோல்
சுமந்தவளை  ஓடுதல் ஆனந்தமே.
மடிதனிலி ருத்தியவள் மழலையைத் திருத்தியே 
தமிழ்தனைக்  கற்பித்தல் ஆனந்தமே.

கைவிரல் களைக்கோர்த்து  கால்நடைப் பாதையில்
கூட்டியே  செல்லுதல் ஆனந்தமே.
ஐவிரல் விரித்தவள்தன்  கைகளை உயர்த்துகையில் 
ஹய் பய்* அடித்தலும்  ஆனந்தமே.   * high five

துள்ளித்   துள்ளியே  முன்னால் அவள்ஓட
பின்னால்நான் ஓடுதல் ஆனந்தமே.
தள்ளுவண்டியி லவளை  அமர்த்தியதன் பின்னாலே
தள்ளியே  செல்லுதல் ஆனந்தமே.

சக்கர வண்டியில் அவள்செல்லப் பின்னாலே 
மூச்சிரைத் தோடலோர்   ஆனந்தமே.
பக்கத்திலே  இருத்தி புத்தகங்கள்  விரித்து
பல கதைகள்  சொல்லுதல் ஆனந்தமே.

தொலைக்  காட்சிபெட்டியில் பாட்டுகளைப்  போட்டுப்பின் 
கைகோர்த்து  ஆடுதல் ஆனந்தமே.
வேலைகள் வேறின்றி  அவளது  குறும்புகளை
வார்த்தையி லேவடித்தல் ஆனந்தமே.

பூங்காவனம்  சென்று ஊஞ்சலிலே அமர்த்தி
முன்பின் ஆட்டு்தல் ஆனந்தமே.
பாங்காகச்  சருக்குமரப் படிகளில்   ஏறிஅவள்
சருக்குதலை   நோக்குதல் ஆனந்தமே . 

மாதங்கள் மூன்றுமகன். மருமகள்  பேத்தியுடன்  
கழித்திட்ட நாள்முழுதும்  ஆனந்தமே.
தேதிகள் கிழமைகள் வாரங்கள் தெரியாமல்
நேரங்கள் போனதே ஆனந்தமே.



Sep 17, 2016

மனீஷ பஞ்சகம் -1


மனீஷ பஞ்சகம் - 1

 Manisha panchakam is one of the great compositions of Adi Shankara  in which he expounds his Advaita philosophy in all its glory . Advaita, the nondualistic philosophy propounded by  Adi Shankara, does not recognize differences between people based on caste, creed, religion, gender etc since we are all the manifestations of the same Brahman.

Adi ShankarAcharya,  was on the way to the temple after finishing his bath in the Ganges at  Varanasi, the ancient sacred city of India, and the home to the famous Kashi Visvanatha temple.  Suddenly he saw a Chandala (an outcaste), on the way, and beckons to him to keep a distance, as per the practice and custom in those days, without realising that the  outcast is none other than the Lord Shiva Himself!  At such beckoning, the Lord , who is in the guise of Chandala , addresses his devotee  as under:

  O great ascetic! Tell me . Do you want me to keep a distance from you, by uttering ’go away’ ’go away’ taking me to be an outcaste ? Is it addressed from one body made of food to another body made of food, or is it consciousness from consciousness — which, O, the best among ascetics, you wish should go away, by saying “ Go away, go away”? Do tell me.

 

அன்னமயாத் அன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத் I 
யதிவர தூரிகர்த்தும் வாஞ்சசீ கிம் ப்ருஹீ கச்ச கச்சேதி II 

ப்ரக்யக்வ்ஸத்துனி  நிஸ்தரங்க சகஜானந்தாவ போதாம்புதௌ 
விப்ரோயம் ஸ்வபசோ (அ)யமித்யபி மஹான் கோ(அ)யம் விபேதப்ரம (ஹ) I 
கிம் கங்காம்புனி பிம்பிதே (அ)ம்பரமனொவ் சாண்டாள  வீதிபய(ஹ )
பூரே வாந்தரமஸ்தி காஞ்சுகனகடீ ம்ருத்கும்பயோர்வா(அ)ம்பரே  II 


This question in the first two stanzas of the  Manisha Panchagam forms the prologue .


This question , is  set in in a poetic form in Tamil, ( Vanji Viruththam )  ,  by me.

Hope you like it.

V.Ramesh  ( Kanithottam )

PS : Adi Shankara realises his folly and his response forms the  next five stanzas ( panchagam )  of this composition. These will follow , with their Tamil versions , in due course!






தவம்செயும்   துறவியில்     சிறந்தவரே!
எவரை   எதைப்போ எனவுரைத்தீர் ?
உடலி     லிருந்து    உடலினையா?
உள்ளுறை  அறிவை  அதனின்றா ?


ஆன்மா  ஒன்றாய்    இருக்கையிலே
அந்தணன்     புலையன்      எனவுண்டோ ?
ஆதவன்    பிரதிபலிப்    பொன்றேதான்
கவின்கங்கை  யிலும்கழிக்   குட்டையிலும் !

மண்ணால்    செய்த      பானையுள்ளும் ,
பொன்னால்     செய்த   பானையுள்ளும் ,
விண்ணாய்    இருந்து    நிரப்புவது
ஒன்றே   என்று  அறியாயோ ?     (வஞ்சி விருத்தம்)

ஆதி சங்கரர் தன தவறை உணர்ந்து இறைவனைத் துதித்து அளித்த பதில் அடுத்தடுத்த பதிவுகளில். !

அன்புடன்
ரமேஷ்
 
 


Sep 12, 2016

குறள் மேல்வைப்பு வெண்பா - 8


Image result for images of bhagirata penance standing on one leg

குறள் மேல்வைப்பு வெண்பா - 8

After some interval , here is a Kural Mel Vaippu Venbaa, the eighth in the series , again.

I have composed a poem in the Venba format , in four lines. One  Kural , in its original form , is reproduced in the third and fourth lines , while in the first two lines ,  I relate a well known story  which brings out the essence of the Kural.

Also appended is an English version of the Kural ,  in poetic form, written by Rev. Pope and others.


The Kural is from the Chapter titled   " Manly  Effort " { ஆள்வினையுடைமை }

The story referred to is the famous story of how King Bagiratha undertook a long penance, standing on one leg for thousands of years, praying to Lord Shiva, to bring the Holy Ganges to the plains from the Himalayaas. (Ofcourse, the full story has its beginning much before his penance started  and you may refer to the link below to get the complete story). The moral of the story is that if you persist in your efforts , the desired results will follow!
Read on now, for the Mel Vaippu Venbaa and the English versions of the Kural.

This is a small effort from my side to (re)expose  readers to the beauty and brevity of the Tamil Marai along with the morals it teaches.

Please share it with your friends so that they may also get reacquainted with the Tamil classic.


Ramesh ( Kanithottam)






சிறிது இடைவேளைக்குப் பிறகு , மீண்டும் ஒரு குறள்  மேல்வைப்பு வெண்பா-

ஒருகாலில் ஓர்ஆயி ரம்ஆண்டு நின்றே
வருந்தித் தவம்செய்து கங்கை கொணர்ந்தான்*
அருமை உடைத்தென்(று) அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

* பகீரதன் 

(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)


Rev. Pope"s tenglish version :

Say Not "Tis hard, in weak, desponding hour,
For streneous effort gives prevailing power.

Suddhaanandha Barathiyaar"s version 

Feel not frustrate saying "Tis hard". 611
Who tries attains striving's reward.


The Meaning :

Yield not to the feebleness which says " This is too difficult to be done " ; Labour will give the greatness (of mind)  which is necessary to do it.

 

Sep 4, 2016

இன்று விநாயக சதுர்த்தி

இன்று விநாயக சதுர்த்தி 
 


அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
 
நாம் இன்று தொடங்கும் காரியம் அனைத்தும் விக்கினங்கள் ஏதும் இன்றி வெற்றி பெற விநாயகப்பெருமான் அருள் வேண்டி , இந்தப் பாடலைச் சமர்ப்பிக்கிறேன்.
 
அன்புடன் 
 
ரமேஷ் 
 
வினைகளெதையும்  தொடங்குமுன்னே  வேழமுக     வாரணன்
விநாயகனை வினயத்துடன் வணங்கியே  தொடங்கினால்
வினாஅகத்தில் ஏதுமெழா !  விக்கினங்கள் விலகிடும் !
அனேகநன்மை கிட்டிடும் ! ஐயமொன்றும் இல்லையே!

Sep 3, 2016

கவிஞனும் ஒரு தாயே


கவிஞனும் ஒரு தாயே




ஒரு கவிதை பிறக்கும்போது ஒரு கவிஞன் அடையும்  மகிழ்ச்சி ஒரு தாய் குழந்தையைப் பெற்றவுடன் அடையும் மகிழ்ச்சிக்கு ஒப்பு. அந்த வகையில் கவிஞனும் ஒரு தாய்க்கு நிகர்தான்.
கவிஞன் ஒரு  தாயானால், அந்த கவிதைக்கு தந்தை யார்?
வேறு யார் ?  தமிழ்தான்!
இப்படி உருவகித்து ஒரு கவிதை.!
அன்புடன்
ரமேஷ்


தமிழுக்குத் தலையை நீட்டி தாலியை வாங்கிக் கொண்டு
அமிழ்தினும் இனிதாம் சுவையைத் தினம்தினம் சுவைக்கும் கலைஞன்
பழந்தமிழ் இலக்கி யங்கள் பலபடித் துணரும் சுகமும்
புழங்கிடும் புதிய கவிதை படித்ததைப் புணரும் சுகமும்
நிதமந்த " இல்லற " சுகத்தை நன்கனுப விப்பான்  எனினும்
பதமாயொரு சொந்தக் கவிதை கருவிலுரு வாகும் வரையில்
மணமுடித்த பின்னும் தானோர் மகவுபெறா தாயை ஓப்பான்.
தனதான சொந்தக் கவிதை தோன்றவே தவமி ருப்பான்,


மண்துகள் சிப்பிக் குள்ளே  முத்தொன்றின்  கருவா வதுபோல்
மனதுக்குள் புகுந்த கருத்தே கவிதையின் கருவாய் ஆகும்.
பெண்கரு வுற்றே மகவைச் சுமந்ததன்  பின்னர் உடனே 
தானொரு தாயே யென்னும் தகுதியை அடைதல் போல
கவிதையின் கருவைச் சுமந்து  பாடலொன்  றுருவாகும் வரையில்
அவதியில் உழலும்  கவிஞன்  சூலுற்ற தாய்க்கு ஒப்பே!
கருவது உருப்பெறும் வரையில் தாய்படும்  பாடுகள் எல்லாம்
கவிதையுரு வாகும் வரையில் தான்படும் கவிஞனும் தாயே!



 

Sep 1, 2016

வலஞ்சுழி விநாயகர்

வலஞ்சுழி விநாயகர்




என்னுடைய 101-ம் பதிவை ஒரு விநாயகர் துதியோடு துவங்குகிறேன்.
இந்தத்  துதி , வலஞ்சுழி விநாயகருக்கு!
சாதாரணமாக , பிள்ளையார் சிலைகளில் அவரது தும்பிக்கை இடது  பக்கம் வளைந்திருக்கும்.
ஆனால் சில பிள்ளையார் சிலைகளில் தும்பிக்கை வலது பக்கம் வளைந்திருக்கும். இப்படி வலப்பக்கம் வளைந்த துதிக்கை உடையவர் வலஞ்சுழி விநாயகர்.
இது பற்றிய முழு விவரங்களை அறிய விரும்புபவர்கள்  , இந்தப் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள தொடர்புக்குச் செல்லவும்!
இப்போது எனது விநாயகர் துதி

அன்புடன்

ரமேஷ்

வலம்வளைத்த துதிக்கையனை வலஞ்சுழி  விநாயகனை
விளம்பரிய சோதியனை வேழமுக  வேதியனை
உலகத்து மாந்தருக்கு நலம்புரியும் நாயகனை
வலம்புரிந்து உளமுருக வாழ்த்திப் பணிவோம்.


http://temple.dinamalar.com/New.php?id=664