Search This Blog

Sep 20, 2016

வாழ்வில் ஆனந்தம் பகுதி - 1- தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்

வாழ்வில் ஆனந்தம் பகுதி - 1-  தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்

இப்போது நான் சென்னை விடுத்து என் மூத்த மகனின் குடும்பத்துடன் சில நாட்களைக் கழிக்க அமெரிக்கா  வந்திருக்கிறேன். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் இங்கு தங்கியிருக்கையில்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன் என்பதை நினைவு கூறுகிறேன்.

அப்போது , என் பேத்தியுடன் கழித்த இனிய பொழுதுகளை பற்றியம் , மற்றவற்றைப் பற்றியும்  ஒரு கவிதை எழுதினேன். சில நண்பர்களுடனும், உறவினர்களிடமும் பகிர்ந்துகொண்டேன்.

அந்தக் கவிதையை இப்போது இரண்டு பாகங்களாகப்  பதிவு செய்கிறேன். 

முதல் பகுதி என் பேத்தியுடன் கழித்த நேரங்களை பற்றியது. குறிப்பாக, அதிதி என்று அவள் பெயரை உள்ளிருத்தி  அப்போது எழுதிய அந்தக் கவிதையை இப்போது பொதுவாக எல்லாப் பேத்திகளுக்கும்  பொருத்தும்படி மாற்றியிருக்கிறேன்.

எல்லாத் தாத்தாக்களுக்கும்  சமர்ப்பணம்


வாழ்வில் ஆனந்தம் பகுதி - 1-  தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்


முதுகினில் பேத்தியை  ஏற்றியே மூட்டைபோல்
சுமந்தவளை  ஓடுதல் ஆனந்தமே.
மடிதனிலி ருத்தியவள் மழலையைத் திருத்தியே 
தமிழ்தனைக்  கற்பித்தல் ஆனந்தமே.

கைவிரல் களைக்கோர்த்து  கால்நடைப் பாதையில்
கூட்டியே  செல்லுதல் ஆனந்தமே.
ஐவிரல் விரித்தவள்தன்  கைகளை உயர்த்துகையில் 
ஹய் பய்* அடித்தலும்  ஆனந்தமே.   * high five

துள்ளித்   துள்ளியே  முன்னால் அவள்ஓட
பின்னால்நான் ஓடுதல் ஆனந்தமே.
தள்ளுவண்டியி லவளை  அமர்த்தியதன் பின்னாலே
தள்ளியே  செல்லுதல் ஆனந்தமே.

சக்கர வண்டியில் அவள்செல்லப் பின்னாலே 
மூச்சிரைத் தோடலோர்   ஆனந்தமே.
பக்கத்திலே  இருத்தி புத்தகங்கள்  விரித்து
பல கதைகள்  சொல்லுதல் ஆனந்தமே.

தொலைக்  காட்சிபெட்டியில் பாட்டுகளைப்  போட்டுப்பின் 
கைகோர்த்து  ஆடுதல் ஆனந்தமே.
வேலைகள் வேறின்றி  அவளது  குறும்புகளை
வார்த்தையி லேவடித்தல் ஆனந்தமே.

பூங்காவனம்  சென்று ஊஞ்சலிலே அமர்த்தி
முன்பின் ஆட்டு்தல் ஆனந்தமே.
பாங்காகச்  சருக்குமரப் படிகளில்   ஏறிஅவள்
சருக்குதலை   நோக்குதல் ஆனந்தமே . 

மாதங்கள் மூன்றுமகன். மருமகள்  பேத்தியுடன்  
கழித்திட்ட நாள்முழுதும்  ஆனந்தமே.
தேதிகள் கிழமைகள் வாரங்கள் தெரியாமல்
நேரங்கள் போனதே ஆனந்தமே.



7 comments:

  1. பலசமயங்களில் அவன்/அவள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவிப்பதும் ஒரு சுகமே

    ReplyDelete
  2. Replies
    1. Thank you. I am reliving this with my second grand daughter.

      Delete
  3. Bhanu appreciates the poem and the comment posted by Mr. Iyer!

    ReplyDelete
  4. Well said , Ramaswamy . In my case it is slightly different. My grand daughter has all the answers and claims that there is nothing she does not know!

    ReplyDelete
  5. Thanks. You have some way to go before experiencing it. At that time hope you will recall this !

    ReplyDelete