தாய்மைத் திருநாள்- அன்னையர் தினம்
இன்று அன்னையர் தினம்.
முற்றும் துறந்த முனிவர் எனினும் தாய்ப்பாசத்தை துறக்க முடியாது.
ஆதிசங்கரர் தன் தாயைப் போற்றிப் பாடிய பாடல் தொகுப்பின் முதலாவது பாடலை மொழிபெயர்த்து இந்த தாய்மைத் திருநாளன்று பதித்து மகிழ்கிறேன்!
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் .
அன்புடன்
ரமேஷ்
1st sloka of the Matru Panchagam by the Great Sage AdiShankara
आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा
नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी।
एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः
दातुं निष्कृतिमुन्नतोऽपि तनयस्तस्यै जनन्यै नमः ॥
Meaning In English
The unbearable pain endured by the mother at the time of my delivery, the lack-lustre feeling and the emaciation of the body during pregnancy, the year long sharing of the bed dirtied by my faeces and urine when I was a baby, O’ Mother, none of these sufferings borne by you because of my birth can be compensated by me in the least, however great I may be. My Namaskaram to you O ‘ Mother!
இனி என் பாடல்
பெறுகையில் எனைநீ பெரும்பா டுற்றாய்
கருவைச் சுமக்கையில் களைத்தாய் இளைத்தாய்
சிறுகுழ வியாய்நான் இருக்கையில் எந்தன்
சிறுநீர் நனைத்த படுக்கையில் படுத்தாய்
பெரிதாய் வளர்ந்துநான் பெரும்புகழ் பெறினும்
சிறிதும் என்னால் நீயுற்ற துயரை
சரியீ டுசெயல் அரிதினும் அரிதே !