Search This Blog

May 8, 2022

தாய்மைத் திருநாள்-அன்னையர் தினம்

தாய்மைத் திருநாள்- அன்னையர் தினம் 

இன்று அன்னையர் தினம்.

முற்றும் துறந்த முனிவர் எனினும் தாய்ப்பாசத்தை துறக்க முடியாது.

ஆதிசங்கரர் தன் தாயைப் போற்றிப் பாடிய பாடல் தொகுப்பின் முதலாவது பாடலை மொழிபெயர்த்து  இந்த தாய்மைத்  திருநாளன்று பதித்து மகிழ்கிறேன்!

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் .

அன்புடன் 

ரமேஷ் 





1st sloka of the Matru Panchagam by the Great Sage AdiShankara

आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा

नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी।

एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः

दातुं निष्कृतिमुन्नतोऽपि तनयस्तस्यै जनन्यै नमः ॥ 

Meaning In English

The unbearable pain endured by the mother at the time of  my delivery, the lack-lustre feeling and the emaciation of the body during pregnancy, the year long sharing of the bed dirtied by my faeces and urine  when I was a baby,   O’ Mother, none of these sufferings borne by you because of my birth can be compensated by me in the least, however great I may be.  My Namaskaram to you O ‘ Mother!

இனி என் பாடல் 

பெறுகையில் எனைநீ பெரும்பா டுற்றாய்

கருவைச் சுமக்கையில்   களைத்தாய் இளைத்தாய் 

சிறுகுழ வியாய்நான் இருக்கையில் எந்தன் 

சிறுநீர் நனைத்த படுக்கையில் படுத்தாய்  

பெரிதாய் வளர்ந்துநான்   பெரும்புகழ் பெறினும் 

சிறிதும் என்னால் நீயுற்ற துயரை 

சரியீ டுசெயல் அரிதினும் அரிதே !


11 comments:

  1. அருமை . வாழ்த்துக்கள் . தொடரட்டும் தங்கள் கவிதைகள்

    ReplyDelete
  2. ஆதி சங்கரர் தான் பெரிதாக வருவேன் என்று உணர்ந்த போதும் சன்யாசிகளுக்கே உள்ள கடமையிலிருந்து விலகி தன் தாயை தானே தகனம் செய்தது தன் தாயின் மேல் உள்ள பாசத்தை அல்லவா காட்டுகிறது.
    உன் பாடலும் அதை மெய்ப்பிக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Nice translation and a wonderful tribute to the greatest Saint!

    ReplyDelete
  4. Very appropriate Tamil rendering !

    ReplyDelete
  5. Very nice translation and Tamil poem👌🏾🙏🏻😊

    ReplyDelete

  6. தங்களுடைய மொழிபெயர்பு அருமை. கவிதையை படித்தபின் தாய்ப்பாசம் பன்மடங்காயிற்று. 🙏🏼

    ReplyDelete
  7. Excellent translation Ramesh ! I wish you translate “ Matrukashtakam” also !
    This will bring tears in the eyes of every children of a mother.

    ReplyDelete