இன்று அக்ஷய திருதி.
இந்த நாளன்று பிறர்க்கு நாம் செய்யும் நற்செயல்கள் பன்மடங்கு பலன் அளிக்கும் என்பது ஐதீகம்.
நாமும் பல நற்செயல்கள் செய்து பலனுறுவோம்.
இது குறித்து இரு சிறு பாடல்கள்-
அன்புடன்
ரமேஷ்.
பாடல் 1
அட்சய திருதியின்று நம்மில் நலிந்தோர்க்கு
தட்சிணை* யளித்துதவி செய்தால் - **யியட்சிணி
லட்சிமி ஆகியோர் கடைக்கணருட் பார்வை
நிச்சயம் கிட்டும் நமக்கு
(வெண்டுறை)
*தட்சிணை = நல் உதவி, donation
** யியட்சிணி= குபேரனின் மனைவி
பாடல் 2
இங்கோடி அங்கோடி அட்சய திருதியன்று
தங்கம் வாங்குதல் தவிர்த்து - இங்குள்ள
ஏழை பாழைகட்கு நாம்செய்யும் உதவிகள்
ஊழ்ப்பீழை* வெல்லும் வழி.
(வெண்டுறை)
* ஊழ்ப்பீழை= விதியால் விளையும் கேடுகள்
*ஊழ்ப்பீழை=விதியால் விளையும் கேடுகள்
Super sir. Yes this is the day of giving and not buying gold.
ReplyDeleteThank you very much for your appreciation !
Deleteமிக அற்புதமான விளக்கம். இல்லாதவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாத உதவி செய்தால் அதுவே போதும் என்பதை நன்கு சொல்லி இருக்கிறாய், நண்பனே.
ReplyDeleteமிக்க நன்றி, ராம்கி.
Deleteஅங்கத்தை தங்கத்தினால் அலங்கரிக்காமல் அக்ஷை ய த்ரிதியா அன்று மனசை திருத்தி கூழை குடிக்கும் ஏழைகளுக்கு வாரி வழங்குவோம்.
ReplyDeleteமிக்க நன்றி, வெங்கட்!
Deleteஅருமை, உண்மை சார்
ReplyDeleteThanks!
ReplyDelete