பிரதோஷப் பாடல் - 46
இன்றைய பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வணங்கி ஒரு பாடல் .
அன்புடன்
ரமேஷ்
ஓடிஓடி பாடுபட்டு பொன்பொருளைச் சேர்த்தபின்
தேடித்தேடி தேடித்தேடி இன்பமுழுதும் துய்த்தபின்
ஆடிஆடி ஆட்டமாடி வாழ்வைவீ ணடித்தபின்
கூடுவிட்டு சீவன்போகும் வேளைநாளை வருகையில்
நிம்மதியைத் தேடுகின்ற கேடுகெட்ட மாந்தரே
தும்பைவிட்டு வாலினைப் பிடிக்கஓடல் என்கொலோ?
அம்புலியைச் சிரத்திலேந்தும் அர்த்தநாரி ஈசனை
நம்பிநாளும் காலைமாலை நயந்துவேண்டிக் கும்பிடின்
இம்மைமறுமை முன்மைஎன்னும் முப்பிறவியின் வினையெலாம்
நம்மைவிட்டு நீங்கிடும் நண்மைவந்து சேருமே!
Have you become another Pattinathar?
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteகூடு விட்டு கூடு மாறும் அருணகிரியாரோ என்று கேட்க தோன்றுகிறது. கொட்டி தீர்த்து விட்டீர்.அருமை.
ReplyDeleteநம்மை என்று இருக்க வேண்டும். நன்மை சரியா? ராஜ்மோகன்
ReplyDelete