இந்தியர்களும் நாய்களும் -----
என் கருத்து , சில பாடல்கள் வடிவில்!
முதலாவது விருத்தப் பாடல்.
இரண்டாவது தமிழில் ஒரு லிமெரிக்-குறும்புக் கவிதை- சற்று "மெட்ராஸ் ஸ்லாங் " (madras slang ) கலந்து!
மூன்றாவதாக - போனஸ் - ஒரு ஆங்கில லிமெரிக்கும் கூட!
படித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் !
அன்புடன்
ரமேஷ்
பாடல் 1
இந்தியர்க்கும் நாய்க்கும் இடமில்லை என்று
வந்தன்று வெள்ளையன் சொன்னநிலை மாறி
இன்றந்த இருவினமும் டௌனிங்கு தெருவின்
எண்பத்து* வீட்டில் கோலோச்ச லாச்சே! *பத்தாம் எண்
(கலி விருத்தம்)
பாடல் 2
டௌனிங்கு தெரு நம்பர் பத்து!
சுனக்கு ரிஷியோட கெத்து^ ! ^ கெத்து =கெட்டிக்காரத்தனம் , தந்திரம்
-----கையோட நாயி
-----இஸ்துகினு* போயி * இழுத்துக்கொண்டு - இதன் மெட்றாஸ் பாஷை மருவூ
உட்டாண்டா மூஞ்சியிலே குத்து!
பாடல் -3 - An English Limerik
To Downing Street Our Sunakji went
House No 10 was there for rent
----- With a Dog in Hand
----- And a marching Band
Reversing history and its trend!