Search This Blog

Nov 9, 2022

இந்தியர்களும் நாய்களும் -----

 இந்தியர்களும் நாய்களும் -----



ஸ்பிக் நிறுவனத்தில் என்னுடன் வேலைசெய்த நண்பர் ரவிச்சந்திர ராவ் பதிவு செய்த  ஒரு படம் இது.  இது குறித்து  பார்ப்பவர்களின் கருத்தை அவர் கேட்டிருந்தார். 

என் கருத்து , சில பாடல்கள் வடிவில்!

முதலாவது விருத்தப் பாடல். 

இரண்டாவது தமிழில் ஒரு லிமெரிக்-குறும்புக் கவிதை- சற்று "மெட்ராஸ் ஸ்லாங் " (madras slang ) கலந்து!

மூன்றாவதாக - போனஸ் - ஒரு ஆங்கில லிமெரிக்கும் கூட!

படித்து கருத்துக்களைப்  பதிவு செய்யுங்கள் !

அன்புடன் 

ரமேஷ் 


பாடல் 1 

இந்தியர்க்கும் நாய்க்கும் இடமில்லை என்று 

வந்தன்று  வெள்ளையன் சொன்னநிலை மாறி   

இன்றந்த இருவினமும் டௌனிங்கு தெருவின் 

எண்பத்து* வீட்டில் கோலோச்ச லாச்சே!            *பத்தாம் எண்         

(கலி விருத்தம்)

பாடல் 2

டௌனிங்கு தெரு நம்பர் பத்து!

சுனக்கு ரிஷியோட கெத்து^ !    ^ கெத்து =கெட்டிக்காரத்தனம் , தந்திரம்          

-----கையோட நாயி  

-----இஸ்துகினு* போயி                 * இழுத்துக்கொண்டு - இதன் மெட்றாஸ் பாஷை மருவூ 

உட்டாண்டா மூஞ்சியிலே குத்து!

பாடல் -3 - An English Limerik

To Downing Street Our Sunakji went

 House No 10 was there for rent

----- With a Dog in Hand

----- And a marching Band

Reversing history and its trend!




19 comments:

  1. அண்ணா கலக்கிட்டீங்க

    ReplyDelete
  2. இந்த அறிவை நம் நாட்டில் உபயோகப்படுத்தினால் நம் நாடு முன்னேறும் ஆனால் அதற்கு இங்கு போராட வேண்டும் அங்கு திறமை மட்டுமே வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆம்! இந்தப் போராட்டத்தைத் தவிர்க்கவே பல இளைய சமுதாயத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

      Delete
  3. கலக்கிட்டே நயினா!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப டேங்சு, வாத்யாரே!

      Delete
  4. பாட்டு எகிறுது

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப டேங்சு, வாத்யாரே!

      Delete
  5. All good especially the Madras slang... topping it all

    ReplyDelete
  6. Wonderful - both the Tamil ones. Perhaps the English one needs a little polish - Sunder

    ReplyDelete
    Replies
    1. Yes. I also felt the same! but wanted to publish it when the issue was topical.

      Delete
  7. Excellent Ramesh. I am in agreement the tamil slang and the one in English are tops. Really appreciate your imagination in thinking of topical issues. Keep it up. ST

    ReplyDelete
  8. Excellent Ramesh . Tamil Chennai slag superb

    ReplyDelete
  9. How I wish I should have learnt Tamil to enjoy your kavidhai.

    ReplyDelete