Search This Blog

Oct 1, 2022

நவராத்திரி - துர்க்கையின் போர்க்கோலம்

நவராத்திரி - துர்க்கையின் போர்க்கோலம் 

சென்ற பதிப்பில் துர்க்கையின் அவதாரத்தைப் பார்த்தோம். இந்தப் பதிவில் வெவ்வேறு கடவுளர்களும், தேவர்களும் துர்க்கைக்கு பல்வேறு ஆயுதங்களை அளிக்க, அவவற்றைப் பூண்டு மகிஷாசுரனுடன் போர்புரிய  துர்க்கை தயாரான காட்சியைக் காண்போம்- ஒரு பாடல் வடிவில்!

அன்புடன் 

ரமேஷ்  


DURGA’S ARMOURY

 

Now, it was the turn of every God to bestow her with divine gifts and weapons. In the process, Shiva gave away a trident to her while Vishnu gave her a discus similar to the one he possesses. Varun or the Rain God gave her a conch shell, the Fire God gave her power, the Wind God presented her with bow and arrows, Indra offered his thunderbolt and the bell taken off from the mighty Airawat elephant. Yamraj rendered kaldand, Prajapati gifted her Sphatik (snow rock crystal) necklace and Bramha handed out a kamandal. The King of mountains - Himalaya – gave her a Lion which became her vehicl



துர்க்கையின் படைக்கோலம்

திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே  

திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே 

இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்

தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே

வாயுதே வன்தந்த  வில்லம்புகள்

ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 

பிரமனின் கமண்டலம் ஒரு கையிலே- விசுவ

கருமனின் கோடாலி ஒரு கையிலே

காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்

சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.


உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்

செங்கதிரோன் சீற்றமதைக் கண்களில் ஏற்றினள்

சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைக்கவே

இமயவான் அளித்தஅரி மாமீது ஏறினள்


3 comments:

  1. படித்தேன் உங்கள்
    பாசுரத்தை,
    மெச்சினேன் அந்த நவர சத்தை. மாசு படைத்த நம் உள்ளங்களை நாசமாக்க அந்த துர்க்கை எதை கையிலேந்தி ஆயுத்தமாவாளோ?

    பின் குறும்பு :
    தங்கள் இல்லாள் வர்த்தினி ஒரு கரண்டியய் மட்டும் ஓங்கினால் போதுமே அரண்டு ஓடுவீர்கள் நீங்கள்!!

    அன்புள்ள
    வெங்கட்

    ReplyDelete