Search This Blog

Oct 24, 2022

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

 தீபத்திருநாள் வாழ்த்துக்கள் 



அன்புடன் 

ரமேஷ் 



நரகாசுரனை கிருட்டிணன் கொன்று 

-----உலகோர் மகிழ்ந்தது  இந்நாளோ? 

இரகுகுல ராமன் சீதையை மீட்டு  

-----அயோத்தி மீண்ட நன்னாளோ?

 

என்னா ளாயினும் இல்லந்தோறும்

-----தீபங்கள்  ஏற்றித் துதிக்கின்ற 

இந்நா ளில்லெல் லோர்க்கும் எந்தன் 

-----தீபத்  திருநாள் வாழ்த்துக்கள்  


மாசுபடுத்தா வண்ணம் வெடிக்கும் *             * Green crackers

-----வெடிகளை வாங்கிட வாழ்த்துக்கள்

காசு கொடுத்து வாங்கிய வெடிகள் 

-----காதைப் பிளந்ததிட  வாழ்த்துக்கள் 


 

வீட்டில் பட்சணம் செய்ய முயன்ற 

-----முயற்சிகள் வென்றிட வாழ்த்துக்கள் 

வெளியில் வாங்கி விழுங்கிய பட்சணம் 

-----வயிறோ டுடன்பட வாழ்த்துக்கள் 


பலமணி நேரம் பார்த்து எடுத்த 

-----லேட்டஸ்ட் பேஷன் புடைவைகளை 

பக்கத்து பிலாட்டு பாமா முந்தியே 

-----வாங்கா திருக்க வாழ்த்துக்கள் 


மனதிருள் நீங்கி ஒளிபெற் றுள்ளம்  

-----துலங்கி மிளிர்ந்திட வாழ்த்துக்கள்

கனவுகள் பலித்து  அனுபவம் இனித்து 

-----மனையறம் சிறந்திட வாழ்த்துக்கள் 


  

 


6 comments:

  1. Super sir. விழுங்கிய பட்சணம்

    -----வயிறோ டுடன்பட வாழ்த்துக்கள் super line for all senior citizens.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! அளவுக்கு மிஞ்ஞினால்-------

      Delete
  2. எப்போதும் போல் இப்போதும் அசத்திய உங்கள் கவிதைத் திறமைக்கு வாழ்த்துக்கள் - சுந்தர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, சுந்தர்!

      Delete
  3. காலந் தாழ்த்தி உம்மை வாழ்த்திய மைக்கு பொறுத்தருள்க.

    ReplyDelete
    Replies
    1. Thanks a Lot. Your appreciation means a lot and keeps me going!

      Delete