Search This Blog

Oct 26, 2022

குறள் மேல்வைப்பு வெண்பா 22

குறள் மேல்வைப்பு வெண்பா 22


திருக்குறள் 62-ஆம் அத்தியாயத்தில் (ஆள்வினை உடைமை) வரும் 619-ஆம் குறள் இது 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்!

இதன் பொருள் :

ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

என்றைக்கும் பொருந்தும் இந்தக் குறளின் ஒரு இன்றைய எடுத்துக்காட்டு ,ரிஷி சுனக்  தான் முதல் முறை அடைந்த தோல்வியால் தளராமல் மீண்டும் போட்டியிட்டு பிரிட்டனின் பிரதமர் ஆன செயல்!

இக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சுத்தானந்த பாரதியின் சொற்களில்>

Though Fate is against fulfilment

Hard Labour has ready payment

இக்குறளை  ஈற்றடியாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு குறள்  மேல்வைப்பு வெண்பா , கீழே!

அன்புடன் 

ரமேஷ் 



சென்றமுறை தோற்றாலும் சோர்ந்து சுணங்காமல் 

நின்றே மறுமுறையும்  வென்றான் சுனக்ரிஷியே* !         * Rishi Sunak

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்! 

9 comments:

  1. எல்லாம் கர்மா படிதான் நடக்கும் நம்பிக்கை தான் வாழ்க்கை

    ReplyDelete
  2. Superb Ramesh. Identifying the right Thirukkural and the fitting example UK Prime Minister

    ReplyDelete
  3. That was apt and very nice Ramesh

    ReplyDelete
  4. முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.
    இப்படியும் கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. சரியே! நான் குறிப்புட்டுள்ள குறள் நேர்மறை. முயற்சி வீண் போகாது என்று கூறுவது! நீ குறிப்புட்டுள்ள குறள் நேர்மறையையும் எதிர்மறையையும் குறிக்கிறது!

      Delete