நேற்று அயோத்தியாவில் நடைபெற்ற பூமி பூஜையை ஒட்டி இரு சிறு பாடல்கள்.
அன்புடன்
ரமேஷ்
அயோத்யா
பாடல் 1
புதையுண்டு பூமியிலே பலகாலம் கிடந்தாலும்
கதையாய்க் காவியமாய் பக்தர்கள் மனதினிலே
வதையுண்டு போகாமல் விதையாய் உயிர்வாழ்ந்து
சிதையாமல் சிதறாமல் விருட்சமாய் வளருதிங்கு !
பாடல் 2
இலக்குமியின் மலர்க்கரம் பற்றி அவள் இடப்புறம்.
இளையநம்பி இலக்குவன் இருப்பதவன் வலப்புறம்.
இலக்கென்றும் இழக்காத கோதண்டம் தோளிலே.
இலங்கையை எரித்திட்ட அனுமந்தன் தாளிலே.
வலக்கையை உயர்த்தியே வரங்கள் வழங்குவான் !
கலக்கங்கள் விலக்கிடும் ஸ்ரீராமன் தரிசனம்.
இளையநம்பி இலக்குவன் இருப்பதவன் வலப்புறம்.
இலக்கென்றும் இழக்காத கோதண்டம் தோளிலே.
இலங்கையை எரித்திட்ட அனுமந்தன் தாளிலே.
வலக்கையை உயர்த்தியே வரங்கள் வழங்குவான் !
கலக்கங்கள் விலக்கிடும் ஸ்ரீராமன் தரிசனம்.