Search This Blog

Aug 1, 2020

பிரதோஷப் பாடல் -35


பிரதோஷப் பாடல் -35

இன்றைய பிரதோஷப் பாடல் சிவபெருமானின் அறுபத்திநான்கு  திருவிளையாடல்களில் ஒன்று. 
வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தை திருவிடைமருதூர்த் தலத்தில் இறைவன் போக்கியது பற்றியும், பின்பு அவனுக்கு சிவலோக தரிசனம் தந்து அருளியதைப் பற்றியும் இந்தப் பாடலில் கூறியுள்ளேன்.

அன்புடன் 

ரமேஷ் 

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் 



அறியாம லேயோர் அந்தணனைக் கொன்றதால் 
--------- பிடித்ததோர்  தோஷத் தினை  
சரிசெய்யும் வழிகாட்டி வரகுண வழுதிக்கு 
----------திருவிடை மருதூர்த் தலப் 
புரியிலே அருள்செய்து சிவலோக தரிசனம் 
----------காட்டியே மீட்டுவந் தான். 
திரிபுர மெரித்தவன் விரிசடை வேதியன் 
----------திருவிளை யாடலிது வாம்   

பாடற்பொருள் :

வரகுணபாண்டியன் காட்டில் வேட்டையாடித் திரும்புகையில் அறியாமல் அவனது குதிரையின் காலில் மிதிபட்டு ஓர் அந்தணன்  இறந்ததால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அந்த தோஷம் இறைவனருளால்   திருவிடைமருதூர்த் தலத்தில் வழிபட்டதும் விலகியது. அதன்பின், சிவலோக தரிசனம் செய்ய விரும்பி வேண்டிய  பாண்டியனுக்கு, இறைவன் அவ்வாறே அத்தரிசனம் கிடைக்குமாறு  அருளினான். 

The story in English :

Varaguna pandian , the Pandiya King, was returning after a hunting trip. At that time, his horse unknowingly trod on a Brahmin who was lying down by the road side and the Brahmin lost his life. Unaware of this the King returned to his palace.  Because of this the King became afflicted with Brahmahaththi dosham (curse). The next day, when the King came to know of this, he was stricken with sorrow.  He donated lot of wealth to the relatives of the deceased and also performed various religious rites as enjoined in the scriptures. But still the curse could not be neutralised and the King was subjected to mental torture. As advised by the learned elders, he went around the temple of Lord Somasekarar  a thousand times for ten days. Upon completion,  he was accosted by a celestial voice which said "Soon there will be a battle between you and the Chola King during the course of which you will defeat and chase the Chola King  and will reach Thiruvidaimaruthoor. There you will have the Darshan of the deity and your curse  will leave you". The events unfolded as described by the celestial voice. Varagunapandian chased the Cholan and reached Thiruvidaimaruthoor and entered the temple through the eastern gate. The Brahmahaththi could not enter the holy site and was left standing outside the gate. The Lord blessed the King and advised him to leave the temple through the western gate, leaving the Brahmahaththi waiting at the eastern gate! The King did as he was told and got cured of the curse. Later he felt an urge to have the darshan of the Lord at His celestial seat. The Lord granted his wish by bringing the Sivalokam down to Madurai  briefly and enabled the King to have a blissful Darshan of the celestial abode of Shiva!

The story in Tamil: 



மதுரையை ஆண்டு வந்த வரகுண பாண்டியன் வேட்டையாடியபின் காட்டிலிருந்து திரும்பும்போது, அவனறியாமல் அவனது குதிரை வழியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஒரு அந்தணன் மீது ஏறி, அவன் உயிரிழக்க நேர்ந்தது. இது அவன் அறியாமல் நடந்ததெனினும், அரசனை ப்ரம்மஹத்தி தோஷம் வந்தடைந்தது. இறந்தவர் குடும்பத்திற்கு வேண்டிய பொருளுதவிகள் செய்தும், முறைப்படி செய்யவேண்டிய பரிகாரங்களை செய்தும் அந்த தோஷம் நீங்காது அவனை வாட்டியது. அறிஞர்கள் உரைப்படி, மன்னன் சோமசேகரர் திருக்கோவிலை தினமும் ஆயிரம் முறை வலம் வந்தான். பத்து நாட்கள் வலம் வந்தபின், வானிலிருந்து ஒரூ குரல்  " பாண்டியனே! இன்னும் சிலநாட்களில், சோழ மன்னன் உன்னோடு போர் தொடுப்பான். அவன் போரில் தோற்று ஓடுகையில் நீ அவனைத் துரத்தி திருவிடைமருதூர்த்தலம் வருவாய். அங்கு எம்மைத் தரிசனம் செய்தபின் உன் தோஷம் விலகும்" என ஒலித்தது!அவ்வாறே சில நாட்களுக்குப் பின் சோழன் மதுரை மீது போர் தொடுக்க, பாண்டியனும்  அப்போரில் சோழனை வென்று அவனைத் துரத்தி மருதூர்த் தலம் அடைந்து, கோவிலின் கிழக்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தான். அவன் கோயிலின் உள்ளே  நுழைகையில் அவனைப் பிடித்திருந்த ப்ரம்மஹத்தி அந்தப் புண்ணியத்தலத்தினுள் நுழைய முடியாமல் வெளியிலேயே நின்றது! பாண்டியன் இறைவனை வணங்க, தோஷம் நீங்கஅருள் செய்த இறைவனும் பாண்டியனை கோவிவிலின் மேற்கு வாசல் வழியே வெளியேறப் பணித்தான். பாண்டியனும் அவ்வாறே செய்து ப்ரம்மஹத்தி தோஷம் விலகப் பெற்றான். பின்பொரு சமயம். வரகுணபாண்டியன் சிவலோகத்தில் பெருமான் வீற்றிருக்கும் காட்சியைக்  காண விழைந்து அவரை வேண்ட, சிவபெருமானும் சிவலோகத்தை  மதுரையம்பதிக்கே வரவழைத்து, மன்னன் கண்குளிர தரிசிக்கச் செய்தான்.

4 comments:

  1. நல்ல கவிதை . விளக்கம் அருமை . உங்கள் பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  2. New story , I haven’t heard . But nice . Your poem is crisp and nicely worded.

    ReplyDelete