Search This Blog

Jul 19, 2020

இலையுதிர் காலங்கள்


இலையுதிர் காலங்கள் 







மரம்விடுத்து மிதந்துவிழும் பழுப்புவண்ண  இலைகளே 
மனம்விடுத்து மிதந்துசெல்லும் எண்ணஅலைகள் போலவோ?
எண்ணஅலைகள் எழுதும்கவிதைக்  கருப்பொருளாய் ஆகும்போல்
மண்விழுந்த இலைகளுமே நல்லுரமாய் மாறுமே !


கடந்துபோன   கோடைகாலக்  கதிரவனின் கிரணங்களால்
சூடுபட்ட உடலின்வெப்பம் சற்றுக்குறைய வேண்டியே
ஆடையான இலைகளைந்து  அத்தனை  மரங்களும்
வாடைக்கால வருகைக்காக விழிகள்நோக்கி  நிற்குதோ?  


நேற்றுமாலை இலைகள்நிறைந்த கூந்தல்இருந்த  மரங்களே
முற்றும்இன்று ஓரிரவில் மொத்தமுடியும் இழந்ததே!
இன்றுமனிதன் அனுபவிக்கும் இன்பம்செல்வம் அனைத்துமே
நின்றுஎன்றும் நிலைப்பதல்ல என்றஉண்மை உணர்த்துதோ?


இலையைஇழந்து கிளைகள்வெறித்துக் காத்துநிற்கும் மரங்களும்
நாளைவசந்த வேளைவந்தால் மீண்டும்பூத்துக் குலுங்குமே !
நிலையும்இன்று குலைந்துபோன மனிதர்பலரின்  வாழ்வுமே
மலர்ந்துமீண்டும் மகிழ்ச்சிகூடும் ; இதுவும்வாழ்க்கைப் பாடமே! 


13 comments:

  1. சிறப்பு. தொடரட்டும் கவிப் பெருக்கு.

    ReplyDelete
  2. Really great composition. Enjoyed every single word.
    SUNDER

    ReplyDelete
  3. இலை உதிரும் முன்னே வண்ணக்கலை காண அலையும் மனிதர்களில் நானும் ஒருவன் ஒருகாலத்தில்.

    ReplyDelete
  4. மிக அருமையான கவிதை.நானும் ஒரு நாள் இலை உதிர்த்து வெறுமனே நிற்பேனோ என்பதை உணரவைக்கின்ற ஆற்றுக்கவிதை.நன்றி ரமேஷ்

    ReplyDelete
  5. பலே. கவிதையும் அதில் உள்ள கருத்தும் அருமை, அற்புதம்.
    இராம்மோகன்

    ReplyDelete
  6. அருமை . தொடரட்டும் தங்கள் கவிதை பயணம்

    ReplyDelete
  7. This is onlyeonly a testing.
    Ramki

    ReplyDelete
  8. வயது முதிர்ந்த வர்களுக்கு எது வசந்த காலம் நண்பா? தன் பிள்ளைகளும் தன் பேரப்பிள்ளைகளுமா தன்னை நடத்தும்அநடத்தும் விதமா?அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு அது வாய்க்கலாம். ஆன்மீகம் ஒரு சிறந்த மாற்று வழி என்பது நிதர்சனமான?

    ReplyDelete
  9. திருத்தம்
    நடத்தும் விதமா?
    நிதர்சனமா?

    ReplyDelete