பிரதோஷப் பாடல் - 30
இன்றைய பிரதோஷப் பாடல் - எல்லோருக்கும் தெரிந்த ஒரு திருவிளையாடல் பற்றியது.
படித்து மகிழ்ந்து இறையருள் பெறுக!
அன்புடன்
ரமேஷ்
விறகு விற்ற படலம்
ஏமநா தனென்னும் பெயரான் வடதிசைப் பாணன் அவன்தன்
மாமதச் செருக்கை யழித்து மதுரையின் மானம் காக்க
மாமரம் வெட்டி விற்கும் பாமரன் வடிவில் வந்து
சோமனின் அடியான் பாண பத்ரனின் சீடன்நான் என்றுரைத்து
தேமதுர இன்னிசை பாட ஏழுலகும் அசைவைத் துறக்க
நாமிதற்கு நிகரிலை யெனவே நாணிய ஏம நாதன்
தாமதம் ஏதும் இன்றி தன்பரி வாரம் சூழ
சாமநள் ளிரவோ டிரவாய் மாநகர் விடுத்தான் மாதோ!