Search This Blog

Mar 29, 2018

பிரதோஷப் பாடல் - 5

பிரதோஷப் பாடல்- 5

இன்றைய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வணங்கி ஒரு வெண்பா .

அன்புடன்

ரமேஷ்







தில்லையில் நில்லாத  கூத்தாடும்  ஈசனை 
சொல்லிலும் சிந்தையிலும் கொள்ளாத  தேசனை
வில்(லு)வ இலைகொண்டு நாம்செய்யும்  பூசனை
வல்வினைகள் போக்கிடும் காண்.
                                                                                      (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)
கொள்ளாத = அடங்காத
தேசன் = ஒளிமயமானவன்
பூசனை = வழிபாடு, பூஜை 

Mar 28, 2018

திருவிளையாடல் பாடல்- 10 மலையத்துவசனை அழைத்த படலம்

திருவிளையாடல் பாடல்- 10 
மலையத்துவசனை அழைத்த படலம் 



சென்ற பாடலில் , கடலாடச் செல்ல விழைந்த தடாதகையின் தாயான காஞ்சனமாலையின் விருப்பததைத் தீர்க்கும் பொருட்டு, ஏழு கடல்களையும் மதுரைக்கு கொண்டுவந்து ஒரு குளத்தில் இட்ட இறைவனின் திருவிளையாடலைக் கண்டோம். அத்திருவிளையாடல் தொடர்கிறது :




பாடல் 

மணமுடித்த கணவன்கரம்  பற்றியே  கடலாடல் மெத்தவும்  சிறந்ததெனினும்
கணவனோ காலம்பல முன்னரே  உயிர்விடுத்து மேலுலகம் சென்றபடியால்
எங்கனமி தியலுமென மங்கை நல்லாளுமே  மதிமயங்கி நின்றநேரம் 
சங்கரரு மவள்துணையை  மீண்டும் உயிர்ப்பித்து கடலாடக்  கொண்டுவந்தார் .

பாடற்பொருள் :

கடலாடும்பொழுது கணவனின் கரம் பற்றி நீராடுதலே மிகவும் சிறந்தது என்பர் சான்றோர். ஆயினும், காஞ்சனமாலையின் கணவன் மலையத்துவச மன்னன் பல ஆண்டுகள் முன்னமே மேலுலகம் அடைந்துவிட்டபடியால் இது இயலாதென அவள் மனம் வருந்தி மயங்கியிருக்கையில், அவள் குறையைத் தீர்க்க சிவபெருமானும் மலையத்துவசனை உயிர்ப்பித்து மேலுலகிலிருந்து மதுரைக்கு மீண்டும் கொண்டு வந்து, காஞ்சனமாலையின்  கைபிடுத்து கடலாடச் செய்தான்.


Story in Tamil :


ஏழு கடல் நீரையையும் சிவபெருமான் மதுரைக்கு கொண்டுவந்த பின் அந்நீரில் நீராடத்  தயாரான காஞ்சனமாலை, நீராடும் விதிமுறைகளைப்  பற்றி நீதி நூல் கற்றறிந்தோரிடம் வினவினாள்.  அவர்களும் கணவன் கை , மகனின் கை  அல்லது பசுங்கன்றின் வால்  இவற்றில் எதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு கடலாடுதலே முறை எனக் கூறினர். கணவன் முன்னரே உயிர் நீத்து விட்டிருந்ததாலும் , மகன் இல்லாததாலும் கன்றின் வாலே கதி என்று வருத்தமுற்றாள் காஞ்சனமாலை. அவள் குறையை உணர்ந்த சிவபெருமான் இந்திரலோகத்தில் இருந்த மலையத்துவசனை புஷ்பகவிமானத்தில் ஏற்றி மதுரைக்கு கொண்டு வந்தார். மனைவியின் கரம் பிடித்து கடலாடுவாய் எனவும் பணித்தார். காஞ்சனமாலையும் கணவன் கரம் பிடித்து கடலாடிய பிறகு இருவரும் இவ்வுலகை விடுத்து கைலாசம் சென்று அடைந்தனர்.



Story in English

After Lord Shiva brought the seven seas to Madurai, Kanchanamaalai was readying herself to take the holy dip in the sea water. At that time she asked the sgaes about the procedure to be followed by her. She was told that according to the scriptures, the ritual of taking a bath in the holy waters of the Seas is most effective when the Lady does it holding her husbands hand. When that is not possible, she can either do that holding the hands of her son. When even that is not possible, she can take a dip holding the tail of a calf. 
As Malayaththuvasan, the husband of Kaanchanmaalai, had left the world long ago, and as she did not have have male offspring, kanchanamaala was disappointed and resigned herself to carry out the ritual holding the tail of a calf. 
Lord Siva, who understood the mind of His devotee, made Malayaththuvasan to descend from the SwargaLogam, in human form , to Madurai so that Kanchanamalai could take the holy dip in the sea holding the hands of her husband. After this was done, both of them left this world for Kailasam.

Mar 24, 2018

ஸ்ரீ ராமநவமி - ஸ்ரீராமன் தரிசனம்-




நாளை ஸ்ரீ ராம நவமி.
அந்த நாளன்று, ராமபிரானைத் துதித்து ஒரு சிறு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


ஸ்ரீராமன் தரிசனம்.




இலக்குமியின் மலர்க்கரம் பற்றி அவள் இடப்புறம்.
இளையநம்பி இலக்குவன் இருப்பதவன்  வலப்புறம். 
இலக்கென்றும்   இழக்காத கோதண்டம் தோளிலே. 
இலங்கையை எரித்திட்ட  அனுமந்தன் தாளிலே. 
வலக்கையை உயர்த்தியே   வரங்கள் வழங்குவான் !
கலக்கங்கள் விலக்கிடும் ஸ்ரீராமன் தரிசனம். 

Mar 18, 2018

நண்பகல் குறுந்துயில் - siesta

நான் பணியிலிருந்து ஒய்வு பெறுவதற்கு முன், வாரம் முழுவதும்  ஓடியாடி வேலை செய்து களைத்தபின், வாரக்கடைசியில், ஞாயிறன்று பகல் உணவை முடித்தபின் ஒரு சுகமான குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். எந்தக் காரணங்களாலோ அது முடியாமற் போனதென்றால், அந்த வாரமே வீணாகிப் போய்விட்டது போல் ஒரு எரிச்சல் ஏற்படும்.

இப்போது, பணியிலிருந்து ஒய்வு பெற்ற  பின், எல்லா நாளும் ஞாயிற்றுக் கிழமைதான். தினமும் மத்தியானம் "ஹாயாக" ஒரு தூக்கம் போடுவது வழக்கமாகிவிட்டது.

 வயதானவர்கள் எல்லோருக்குமே இந்த நண்பகல் குறுந்துயில் 
சுகமான ஒரு அனுபவம்.

இதை பற்றி ஒரு பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 


   
நண்பகல் குறுந்துயில் (அ )
 பகல்தூக்கம் -

இரவுநேரம்    இருட்டியபின்   உறங்கிடும்  பழக்கமே   
இயற்கையாக   எவருக்கும்  வருவதுதான் ஆயினும் 
பகல்நேர வேளையிலே பந்தியை முடித்தபின் 
சுகமான சிறுதூக்கம் சிலருக்கே வாய்த்திடும்!

நண்பகலின்  குறுந்தூக்கம் நற்பயனை  நல்குமோ
உண்டவுடன் உறங்குதலும் உடலுக்குத் தீமையே! 
உணவும் செரிக்காது எனப்பலரும்  கூறினும் 
உண்டகளைப் பாறும்சுகம்  தொண்டருக்கும் தேவையே!

பன்னிரண்டு மணியளவில் பகலுணவை முடித்தபின் 
சன்னல்திரைச் சீலைகளை நன்கிழுத்து  மூடியே  
மின்விசிறிக் கருவியுமே  மிதமாகச் சுழன்றிட   
கண்மூடிக் கட்டிலிலே கால்நீட்டித் துயில்வராம்.

சாய்வுநாற்  காலிதனில் சாய்ந்துகாலை நீட்டியே 
ஓய்வாக உட்கார்ந்து கண்கள்பாதி  மூடியே  
வாயோரம் நீர்வடிவது  மறியாமல் மென்மையாய்  
வாய்திறந்து குறட்டையோடு  உறங்குபவர்  ஒருவகை.

பகல்தூக்கம் தவறென்று போதனைசெய் பவருமே  
சொகுசாய்மெத்  திருக்கை*மேல்  சாய்ந்தே அமர்ந்தபின்          * sofa 
கைதாங்கி*  மேலேஓர்  கால்தூக்கி நீட்டியே                                        *arm rest 
மெய்மறந்து கண்மூடி தோளில்தலை   சாய்ப்பராம்.

மதியநேரத்   தூக்கத்தில் கண்கள்செருகி  இருக்கையில்  
சதிசெய்வோர்  சிலர்வந்து கதவுமணியை அழுத்துவார்.
இதயத்தில் ஈட்டியினை பாய்ச்சுதர்க் கிதுவொப்பென   
விதித்திதுவோர் குற்றமென சட்டமொன்று போடுவோம்.  .


உதயத்தில் மெய்குறுக்கி உடல்மூடி போர்வையுள்   
கதகதப்பாய்  துயிலுதற்கே   முதலிடம்பலர் அளிப்பினும்  
மதியநேர தூக்கமே  அதனினுமிகச்  சிறப்பென 
முதியோரின் ஓட்டுக்கள் முழுதாகக்  கிடைத்திடும்!


பின் குறிப்பு : 

அதிகாலை குளிரில் , அலறி எழுப்பும் அலாரத்தை அணைத்துவிட்டு, போர்வையை  மீண்டும் இழுத்துப் போர்த்து, முகத்தை அதனுள் புதைத்துக்கொண்டு தூங்கும் :செகண்ட் இன்னிங்ஸ் " தூக்கமும் சிறந்ததுதான்.  

அதிகாலைத் தூக்கத்தைப் பற்றி நான் எழுதிய ஒரு பாடலின் 'லிங்க்" இதோ.

http://kanithottam.blogspot.in/2016/05/blog-post_30.html

இதையும் படித்து எந்த வகைத் தூக்கம் சிறந்தது என்று நீங்களே முடிவு செய்யுங்களேன்!




Mar 10, 2018

திருவிளையாடல் பாடல் - 9 - ஏழு கடல் அழைத்த படலம்

திருவிளையாடல் பாடல் - 9 - ஏழு கடல் அழைத்த படலம் 



    
( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)




கூடல்மா நகர்விட்டு காஞ்சன மாலையாள்  கடலாடச் செல்ல விழைய
கூடாதென் அன்னையினைப் பிரியேன்நான் என்றுமகள் மீனாட்சி துயரமுறவும் 
கடல்தேடி அவள்செல்ல இயலாத நிலையாலே அவளுக் கருள்செய்யவே 
கடலேழை கொணர்ந்திங்கு குளமொன்றிலே வைத்தான் கடம்பவன நாதசிவனே 


பாடற்பொருள் :


தடாதகைப் பிராட்டியின் தாயும் , மலையத்துவச மன்னனின் மனைவியுமான  காஞ்சனமாலை ( பிறவிச் சுழலிலிருந்து விடுதலை அடையும் பொருட்டு ), கடலில் நீராட விழைந்தாள். இதன் பொருட்டு  அவள் மதுரையை விட்டுச் செல்ல வேண்டினாள். ஆனால் தன்  அன்னையைப் பிரிவதை விரும்பாத தடாதகை, தனது  கணவனான சிவபெருமானை அணுகி இதற்க்கு ஒரு வழி செய்யுமாறு வேண்ட, கடம்பவனத்தில் குடிகொண்டிருக்கும்  சிவபெருமானும், (காஞ்சனமாலை அங்கேயே கடல்நீராடும் விதமாக) ஏழு கடல்களையும் மதுரைக்கு கொண்டு வந்து  ஒரு குளத்தில் சேர்த்தார்.


The Story in Tamil :

தடாதகையைப் பிராட்டியின் திருமணம் இனிதே முடிந்து, அன்னையும் , சிவபெருமானும் , மதுரையில் குடிகொண்டு, மக்கள் மகிழும் வானம் பாண்டிய நாட்டல் அருளாட்சி செய்து வந்தனர். ஒரு நாள், அரண்மனைக்கு வந்த கௌதம முனிவரிடம், தடாதகையின் அன்னை காஞ்சனமாலை, பிறவித்  தளையை அறுக்க சிறந்த வழிகளை கேட்க, அவரும் அனைத்து நதிகளின் புண்ணிய தீர்த்தங்களும் சேர்ந்தடையும்  கடலில் நீராடுமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே செய்ய எண்ணிய காஞ்சனமாலை, அதன் பொருட்டு தான் மதுரையை விட்டுச் செல்ல விரும்பினாள் . ஆனால், தாயைப் பிரிய மாட்டாத தடாதகைப் பிராட்டியார், இது பற்றி சிவபெருமானிடம் முறையிட, அவரும் அருள் கூர்ந்து, ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்து, அவைகளின் நீரை மதுரையின் மேற்குப் பகுதியில் அமைந்த ஒரு குளத்தில் சேர்த்தார்.  

The story in English 

After the grand ceremonies of the marriage of Queen Thadaathagai with Lord Siva , they were ruling the Pandya Kingdom and showering their blessings  on the people of Madurai. One day, when the Sage Gowthama visited the palace, Kanchanamala, the mother of Thadaathagai, enquired of him the best way to shed the cycle  of birth and rebirth. The sage suggested  that she should  take bath in the seas, where waters of all the sacred rivers mix. Eager to perform this ritual, Kanchanamala expressed her desire to her daughter Thadaathagai. Thadaathagai did not want her mother to leave her and go off to a distant land for this purpose. She approached Lord Siva and requested him for a solution. Taking pity on her, the Lord , using his divine powers , brought all the seven seas to Madurai and contained them in a pond on the western corner of the city.




Mar 5, 2018

ராகுல் காந்தியின் லீவ் லெட்டர்

ராகுல் காந்தியின் லீவ் லெட்டர்





பாட்டிக்கு உடல்நிலை குறைவாக இருப்பதினால்
நாட்டைவிட்டு அவசரமாய் நான்போக வேண்டுவதால்
ஓட்டுக்கள் வடகிழக்கு மாநிலத்தில் எண்ணுகின்ற
ஆட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் இருக்கின்றேன்.
நாட்டுமக்கள் எனக்குஒரு நாலுநாட்கள் லீவ்தரவே
கேட்டுஇந்த கடிதத்தை எழுதுகிறேன்! கொடுத்திடுவீர் !
இட்டாலி போய்விட்டு இம்முறைநான் திரும்பியபின்
கட்டாயம் கர்நாடகா ஆட்டத்தில் கலந்துகொள்வேன்.


Mar 3, 2018

அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம் - திருவிளையாடல் பாடல்கள் - 8

அன்னக்குழியும்  வைகையும்  அழைத்த படலம் - திருவிளையாடல் பாடல்கள் - 8





( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது )



வருத்தவை  வெந்தவை அனைத்தையும் விழுங்கியும் பசியுமே தீராததால்    
பெருத்தவோர்  குழியிலே தருவித்த தயிரன்னம் தனையுண்டு தீர்த்தபிறகு   
செரிக்கவே குடிக்கநீர் குறைந்ததால் துடிக்குமவன் தாகம்  அடங்கவேண்டி 
விரித்த சடையிலே  தரித்த கங்கையை வைகையாய் கொண்டுவந்தான்

                                                                                                   (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
                                                                                                                              
பாடற்பொருள்:

சமைக்கப்பட்டிருந்த அத்தனை உணவு வகைகளையும் , மீதி இல்லாமல்  அள்ளி உண்ட பின்னும் , குண்டோதரனின் பசி தீராததால் , சிவபெருமான் ஒரு பெரிய குழி ஒன்றை உண்டாக்கி அதைத்  தயிரன்னத்தால் நிரப்பினார். அதை உண்டு பசியடங்கிய குண்டோதரன் , உணவை ஜீரணம் செய்ய ,நீர்நிலைகளில் இருந்த அத்தனை நீரையும் பருகியபின்னும் ,  தாகம்  அடங்காது தவித்தான். அப்போது சிவபெருமான் ஆணையின் பேரில்  அவர்  தலையில் இருக்கும் கங்கை நதி வைகை நதியாக உருவெடுத்து அங்கு வந்தது. அந்த நீரைப் பருகி குண்டோதரன் தாகம் தணிந்தான்.

The story in Tamil :

விருந்தினருக்காகச் சமைக்கப்பட்டு மிகுந்திருந்த  அத்தனை உணவு வகைகளையும் தின்று முடித்த பிறகும், பசி பசி என்று தவிர்த்தான் குண்டோதரன். என்ன செய்வது என்று அன்னை திகைத்திருக்கும் போது , சிவபெருமான் அன்னபூரணியை நினைக்க , அங்கு ஒரு மிகப்பெரிய குழியொன்று தோன்றி , அக்குழி முழுவதும்  தயிர் அன்னம் நிறைந்தது. மகிழ்ந்த குண்டோதரனும்,  பெருங்கைகளை அக்குழிக்குள் விட்டு , அன்னத்தை  எடுத்து விழுங்கி பசி தீர்ந்தான். அதன் பின்னே அவன் பெருந் தாகத்தால் பீடிக்கப்பட்டான். அங்கிருந்த நீரை முற்றும் குடித்தும் அது போதாததாள், தாகம், தாகம் என்று தவித்தான். மதுரையில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் உள்ள தண்ணீரைக்  குடித்து அவை அனைத்தும் வத்ரிவ்ய பின்னும் அவன் தாகம் அடங்கவில்லை. தாகத்தால் துடிக்கும் அவன் துயரத்தைத் தீர்க்க வேண்டிய சிவபெருமான், தன் தலையில் அணிந்திருக்கும் கங்கையை அழைத்து, " நீ இவனது தாகம் தணிக்கும் பொருட்டு , ஒரு நதியாக உருவெடுத்து இங்கு வருவாயாக" என்று ஆணையிட்டார். அவ்வண்ணமே , கங்கையும் வைகை நதியாக உருகிக்கொண்டு அங்கு பாயாத தொடங்கினாள். அந்த வைகை ஆற்று  நீரைக் குடித்து குண்டோதரனும் தாகம் தணிந்தான்.


The story in English :

Even after he ate up all the food remaining in the kitchen , Gundotharan's hunger  could  not be satiated and he was suffering from pangs of hunger. Thadaathagai was at a loss not knowing what to do. Smiling at this, Lord Shiva thought of Annapurni,  the goddess of Food , and she,  acting on His wish , created four huge pits and filled them with curd rice. Gundotharan greedily devoured this and finally his hunger was appeased. But he became very thirsty and drank up all the available water in the kitchen. As it was not sufficient, he drank up all the water in all the ponds and wells in and around Madurai. Still he continued to suffer from thirst. Seeing this , Lord Siva asked the river Ganges, who was adorning his head, to come to Madurai in the form of a river and provide water to Gundotharan. At His command, Ganges came down as River Vaigai with an unending supply of water. After drinking the water from river Vaigai, Gundathoran's thirst was contained.