Search This Blog

Mar 3, 2018

அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம் - திருவிளையாடல் பாடல்கள் - 8

அன்னக்குழியும்  வைகையும்  அழைத்த படலம் - திருவிளையாடல் பாடல்கள் - 8





( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது )



வருத்தவை  வெந்தவை அனைத்தையும் விழுங்கியும் பசியுமே தீராததால்    
பெருத்தவோர்  குழியிலே தருவித்த தயிரன்னம் தனையுண்டு தீர்த்தபிறகு   
செரிக்கவே குடிக்கநீர் குறைந்ததால் துடிக்குமவன் தாகம்  அடங்கவேண்டி 
விரித்த சடையிலே  தரித்த கங்கையை வைகையாய் கொண்டுவந்தான்

                                                                                                   (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
                                                                                                                              
பாடற்பொருள்:

சமைக்கப்பட்டிருந்த அத்தனை உணவு வகைகளையும் , மீதி இல்லாமல்  அள்ளி உண்ட பின்னும் , குண்டோதரனின் பசி தீராததால் , சிவபெருமான் ஒரு பெரிய குழி ஒன்றை உண்டாக்கி அதைத்  தயிரன்னத்தால் நிரப்பினார். அதை உண்டு பசியடங்கிய குண்டோதரன் , உணவை ஜீரணம் செய்ய ,நீர்நிலைகளில் இருந்த அத்தனை நீரையும் பருகியபின்னும் ,  தாகம்  அடங்காது தவித்தான். அப்போது சிவபெருமான் ஆணையின் பேரில்  அவர்  தலையில் இருக்கும் கங்கை நதி வைகை நதியாக உருவெடுத்து அங்கு வந்தது. அந்த நீரைப் பருகி குண்டோதரன் தாகம் தணிந்தான்.

The story in Tamil :

விருந்தினருக்காகச் சமைக்கப்பட்டு மிகுந்திருந்த  அத்தனை உணவு வகைகளையும் தின்று முடித்த பிறகும், பசி பசி என்று தவிர்த்தான் குண்டோதரன். என்ன செய்வது என்று அன்னை திகைத்திருக்கும் போது , சிவபெருமான் அன்னபூரணியை நினைக்க , அங்கு ஒரு மிகப்பெரிய குழியொன்று தோன்றி , அக்குழி முழுவதும்  தயிர் அன்னம் நிறைந்தது. மகிழ்ந்த குண்டோதரனும்,  பெருங்கைகளை அக்குழிக்குள் விட்டு , அன்னத்தை  எடுத்து விழுங்கி பசி தீர்ந்தான். அதன் பின்னே அவன் பெருந் தாகத்தால் பீடிக்கப்பட்டான். அங்கிருந்த நீரை முற்றும் குடித்தும் அது போதாததாள், தாகம், தாகம் என்று தவித்தான். மதுரையில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் உள்ள தண்ணீரைக்  குடித்து அவை அனைத்தும் வத்ரிவ்ய பின்னும் அவன் தாகம் அடங்கவில்லை. தாகத்தால் துடிக்கும் அவன் துயரத்தைத் தீர்க்க வேண்டிய சிவபெருமான், தன் தலையில் அணிந்திருக்கும் கங்கையை அழைத்து, " நீ இவனது தாகம் தணிக்கும் பொருட்டு , ஒரு நதியாக உருவெடுத்து இங்கு வருவாயாக" என்று ஆணையிட்டார். அவ்வண்ணமே , கங்கையும் வைகை நதியாக உருகிக்கொண்டு அங்கு பாயாத தொடங்கினாள். அந்த வைகை ஆற்று  நீரைக் குடித்து குண்டோதரனும் தாகம் தணிந்தான்.


The story in English :

Even after he ate up all the food remaining in the kitchen , Gundotharan's hunger  could  not be satiated and he was suffering from pangs of hunger. Thadaathagai was at a loss not knowing what to do. Smiling at this, Lord Shiva thought of Annapurni,  the goddess of Food , and she,  acting on His wish , created four huge pits and filled them with curd rice. Gundotharan greedily devoured this and finally his hunger was appeased. But he became very thirsty and drank up all the available water in the kitchen. As it was not sufficient, he drank up all the water in all the ponds and wells in and around Madurai. Still he continued to suffer from thirst. Seeing this , Lord Siva asked the river Ganges, who was adorning his head, to come to Madurai in the form of a river and provide water to Gundotharan. At His command, Ganges came down as River Vaigai with an unending supply of water. After drinking the water from river Vaigai, Gundathoran's thirst was contained.

















No comments:

Post a Comment