Search This Blog

Mar 5, 2018

ராகுல் காந்தியின் லீவ் லெட்டர்

ராகுல் காந்தியின் லீவ் லெட்டர்





பாட்டிக்கு உடல்நிலை குறைவாக இருப்பதினால்
நாட்டைவிட்டு அவசரமாய் நான்போக வேண்டுவதால்
ஓட்டுக்கள் வடகிழக்கு மாநிலத்தில் எண்ணுகின்ற
ஆட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் இருக்கின்றேன்.
நாட்டுமக்கள் எனக்குஒரு நாலுநாட்கள் லீவ்தரவே
கேட்டுஇந்த கடிதத்தை எழுதுகிறேன்! கொடுத்திடுவீர் !
இட்டாலி போய்விட்டு இம்முறைநான் திரும்பியபின்
கட்டாயம் கர்நாடகா ஆட்டத்தில் கலந்துகொள்வேன்.


4 comments:

  1. நாட்டின் நிலை புரியாது கை
    நாட்டாக தாயின் நிழலாய் வந்தவரை
    வாட்டுகிறார் நாட்டு சனம் - அவருக்குக்
    காட்டும் சிறிது கரிசனம்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா! நல்ல கருத்து! அருமையான பாடல்.
      ஆனால் மக்களுக்கு "தரிசனம்" தராமல் இத்தாலிக்கு ஓடியவருக்கு " கரிசனம்"காட்டாது " பொது சனம்"!

      Delete
  2. Ramesh,
    You are excelling in நய்யாண்டி பாடல்கள்

    ReplyDelete