திருவிளையாடல் பாடல் - 9 - ஏழு கடல் அழைத்த படலம்
( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)
கூடல்மா நகர்விட்டு காஞ்சன மாலையாள் கடலாடச் செல்ல விழைய
கூடாதென் அன்னையினைப் பிரியேன்நான் என்றுமகள் மீனாட்சி துயரமுறவும்
கடல்தேடி அவள்செல்ல இயலாத நிலையாலே அவளுக் கருள்செய்யவே
கடலேழை கொணர்ந்திங்கு குளமொன்றிலே வைத்தான் கடம்பவன நாதசிவனே
பாடற்பொருள் :
( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)
கூடல்மா நகர்விட்டு காஞ்சன மாலையாள் கடலாடச் செல்ல விழைய
கூடாதென் அன்னையினைப் பிரியேன்நான் என்றுமகள் மீனாட்சி துயரமுறவும்
கடல்தேடி அவள்செல்ல இயலாத நிலையாலே அவளுக் கருள்செய்யவே
கடலேழை கொணர்ந்திங்கு குளமொன்றிலே வைத்தான் கடம்பவன நாதசிவனே
பாடற்பொருள் :
தடாதகைப் பிராட்டியின் தாயும் , மலையத்துவச மன்னனின் மனைவியுமான காஞ்சனமாலை ( பிறவிச் சுழலிலிருந்து விடுதலை அடையும் பொருட்டு ), கடலில் நீராட விழைந்தாள். இதன் பொருட்டு அவள் மதுரையை விட்டுச் செல்ல வேண்டினாள். ஆனால் தன் அன்னையைப் பிரிவதை விரும்பாத தடாதகை, தனது கணவனான சிவபெருமானை அணுகி இதற்க்கு ஒரு வழி செய்யுமாறு வேண்ட, கடம்பவனத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானும், (காஞ்சனமாலை அங்கேயே கடல்நீராடும் விதமாக) ஏழு கடல்களையும் மதுரைக்கு கொண்டு வந்து ஒரு குளத்தில் சேர்த்தார்.
The Story in Tamil :
தடாதகையைப் பிராட்டியின் திருமணம் இனிதே முடிந்து, அன்னையும் , சிவபெருமானும் , மதுரையில் குடிகொண்டு, மக்கள் மகிழும் வானம் பாண்டிய நாட்டல் அருளாட்சி செய்து வந்தனர். ஒரு நாள், அரண்மனைக்கு வந்த கௌதம முனிவரிடம், தடாதகையின் அன்னை காஞ்சனமாலை, பிறவித் தளையை அறுக்க சிறந்த வழிகளை கேட்க, அவரும் அனைத்து நதிகளின் புண்ணிய தீர்த்தங்களும் சேர்ந்தடையும் கடலில் நீராடுமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே செய்ய எண்ணிய காஞ்சனமாலை, அதன் பொருட்டு தான் மதுரையை விட்டுச் செல்ல விரும்பினாள் . ஆனால், தாயைப் பிரிய மாட்டாத தடாதகைப் பிராட்டியார், இது பற்றி சிவபெருமானிடம் முறையிட, அவரும் அருள் கூர்ந்து, ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்து, அவைகளின் நீரை மதுரையின் மேற்குப் பகுதியில் அமைந்த ஒரு குளத்தில் சேர்த்தார்.
The story in English
After the grand ceremonies of the marriage of Queen Thadaathagai with Lord Siva , they were ruling the Pandya Kingdom and showering their blessings on the people of Madurai. One day, when the Sage Gowthama visited the palace, Kanchanamala, the mother of Thadaathagai, enquired of him the best way to shed the cycle of birth and rebirth. The sage suggested that she should take bath in the seas, where waters of all the sacred rivers mix. Eager to perform this ritual, Kanchanamala expressed her desire to her daughter Thadaathagai. Thadaathagai did not want her mother to leave her and go off to a distant land for this purpose. She approached Lord Siva and requested him for a solution. Taking pity on her, the Lord , using his divine powers , brought all the seven seas to Madurai and contained them in a pond on the western corner of the city.
No comments:
Post a Comment