Search This Blog

Aug 27, 2016

கவிபுனையும் இவ்வாசை

கவிபுனையும் இவ்வாசை



இந்த ஆகஸ்ட் மாதத்துடன், நான் இந்த கனித்தோட்டம் பதிவை ஆரம்பித்து ஒரு ஆண்டு முடியப்போகிறது, ஆரம்பிக்கும்போது, இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்று நிச்சயமாக நான் நினைக்கவே இல்லை. மாதம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட எட்டு பதிவுகள் - இது நூறாவது பதிவு!இவற்றில் தொண்ணூறுக்கு மேல் கவிதைகள் !

இந்த கவி புனையும் ஆசை என்னுள் எப்படி முளைத்தது?

நினைத்துப் பார்க்கிறேன் - ஒரு கவிதை வடிவில் !

அன்புடன்

ரமேஷ்


தங்கத் தமிழில் கவிபுனையும் இவ்வாசை
எங்கிருந்து  என்னுள் முளைத்தது ?- கங்கில் *
முளைத்த  பொறிமற்றும்  தெங்கினுள்**        தோன்றும்  
இளநீர் இவைகளை ஒத்து.

அழியாத  பாடல்கள் பன்னூறு  பாடிப்
பழுத்த புலவர்கள்   நூலைப்  படித்தே
விழித்து  வெளிவந்த  ஆவலினால் நானும்
எழு(த்)தத்   தொடங்கினேன் இன்று.

பழுதின்றி பாடல்கள்  ஏதேனும்  ஓர்நாள்
எழுதாமல் போகின்ற   நாளில்  - விழிமூடி
தூங்கா   திடர்படும் பாட்டை இறைவாநான்  
தாங்கேன்   அதனையே   மாற்று.

உள்ளத்தின் ஆழத்தில்  உள்ளிருக்கும்  எண்ணத்தை 
அள்ளிநான்    பாக்கள் புனைவேன் - வளரும் 
கவியென என்தமிழ்ப்   பாடல்கள்   கேட்டு
புவியோர்  புகழும் வரை.

*கங்கு-- தீபொடித்த துரும்பு 
** தெங்கு -- தேங்காய் 







Aug 26, 2016

ஜன்மாஷ்டமி - கிருஷ்ணன் பிறப்பின் உட்பொருளும் அது தரும் சேதியும்

ஜன்மாஷ்டமி - கிருஷ்ணன் பிறப்பின் உட்பொருளும் அது தரும் சேதியும்




கிருஷ்ணன் பிறந்தவுடன் , நந்தகோபன் அடைக்கப்பட்டு இருந்த சிறைக்  கதவு  தானாகத்  திறந்தது ! அவரைப்  பிணைத்து இருந்த தளைகள் அறுந்தன !

அது போல, மனதில் ஞானம் பிறக்கும்போது , மனிதரைப்  பிணைத்திருக்கும் துர்க்குணங்கள் உடையும்  !  வேற்றுமைகளை ஒழித்து மனக் கதவுகள் திறக்கும் .
இதுவே ஜன்மாஷ்டமி நிகழ்வின் உட்கருத்தோ ?

அன்புடன்

ரமேஷ்



நிசிநேர  நள்ளிரவில் பூட்டிவைத்த பாழ்சிறையில் 
நீபிறந்த நேரத்தில் சிறைக்கதவும் தாள் திறக்க 
வசுதேவன் காலிருந்த விலங்குகளும் விலகிடவே 
சிசுவுன்னைத் தோள்சுமந்து செல்கையிலே யமுனையுமே
வகிடெடுத்து வழிவிடுக்க வல்லரவும் குடைபிடிக்க
விசுவாதி தேவர்களும் வணங்கியுனை வாழ்த்துரைக்க
பசுமேய்ந்து பால்சுரக்கும் கோகுலத்தை சென்றடைந்து 
யசுஓதை ஈன்றெடுத்த மகனாக வளர்ந்திட்டாய். 

அதுபோல  

மாசுற்ற வாசனைகள் மிகப்படிந்த மனச்சிறையில் 
இருள்விலகி ஞானஒளி பிறக்கின்ற நேரத்தில் 
பாசம் அகங்காரம் ஆணவங்கள் தன்முனைப்பு 
போன்ற விலங்கெல்லாம்  தெறித்துடைந்து   போய்விடுமே!
தேசங்கள் மதமினங்கள் தோல்நிறங்கள் என்றணிந்த 
வேஷங்கள் விட்டொழித்து மனக்கதவும் திறந்திடுமே!
நிசமான இஞ்ஞானம் உடைத்தாயின் எல்லோர்க்கும் 
வசமாகும் வைகுண்டம்கண்ணனவன் அருளாலே!

Aug 14, 2016

தமிழ்ப் புத்தக நண்பர்கள் குழு

தமிழ்ப் புத்தக நண்பர்கள் குழு 

நான் பணி ஓய்வு பெற்றபின்னே எனது தமிழ் ஆர்வத்தைத் தனித்துக்கொள்ள கனித்தோட்டம்
என்ற இந்த பதிவை (blog) தொடங்கினேன்.
கனவுகள், நினைவுகள், கவிதைகள், நிகழ்வுகள் என்பதின் சுருக்கமே இந்த கனித்தோட்டம்!
தொண்ணூறுக்கும் மேற்பட்ட பதிவுகள் ஆகிவிட்டாலும், எல்லாமே ( இரண்டைத் தவிர ) கவிதைகளாகவே அமைந்துவிட்டன. நூறு பதிவுகளை எட்டுமுன், நான் மாதம்  தோறும் பங்கெடுத்து வரும் ஒரு நிகழ்வைப்பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் புத்தக நண்பர்கள் குழு என்ற இந்த அமைப்பு, மாதந்தோறும் கடைசி செவ்வாய்க்கிழமைதோரும்ஒரு சிறந்த எழுத்தாளரின் புத்தகத்தைத்  தேர்ந்தெடுத்து , வேறு ஒரு தமிழ் ஆர்வலரை அதை விமர்சிக்கச் செய்கிறது. எழுத்தாளரும்  பங்கேற்கும் இந்த நிகழ்வில் ,  அவர் விமர்சனங்குளுக்கு தன் பதிலைக் கூறுவார். அதன் பிறகு கூடியிருக்கும் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்.

சென்ற இரண்டு ஆண்டுகளாக தவறாமல் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துபவர் நால்வர்.. அவர்கள் -

1.  TAG குழும நிறுவனங்களின் தலைவர் திரு. சாரி .
2. மணிமேகலைப் பிரசுரத்தின்  பதிப்பாளர் திரு. ரவி தமிழ்வாணன்.
3. விளம்பரத் துறை விற்பன்னர் திரு. ராஜன்
4. தமிழ் இலக்கிய, கர்நாடக இசைத் துறைகளில் பிரபலமான மூத்த பத்திரிகையாளர்  திரு. சாருகேசி.


இந்த மாதாந்திர நிகழ்வு , திரு. சாரி அவர்கள் நடத்தும் அறக்கட்டளையின் முழு ஆதரவில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு வருபவர்களை இன்முகத்ததோடு வரவேற்கும் ராஜன் , நிகழ்ச்சிக்கு முன் சிற்றுண்டி மண்டபத்தில் வரவேற்று அனைவருடனும் அளவளாவும் சாரி, ( செவிக்கு உணவு கிடைக்கு முன் இங்கு சற்று வயிற்றுக்கும் ஈயப்படும் ! ) , நிகழ்ச்சியைத் நேரம் தவறாமல் தொகுத்து வழங்கும் ரவி தமிழ்வாணன், , பின்னணியில் இருந்து, ஆராயப்படும் புத்தகத்தையும் , ஆராய்பவரையும் தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல், நறுக்கென்று நன்றியுரை நவிலும் சாருகேசி -- இவர்கள் அனைவரும் தொடர்ந்து செய்யும் இந்த நற்பணி நீண்டு தொடர வாழ்த்துக்கள்.

இந்தப் பணியைப் பாராட்டி ஒரு சிறு கவிதை - வெண்பா வடிவில்.

அன்புடன்
ரமேஷ்  -



சொல்லேர் உழுவோரின் சீரியநூல்  நூற்புகளை
பல்லோரு மேயறிய  மேடையிட்டுப்  பேசுதமிழ்*
நல்லுலகத் தோருக்குச்  சென்றடையச் செய்கின்ற
நால்வர்  பணியே  சிறப்பு


* பேசுதமிழ் நல்லுலகம்  - தமிழ்பேசும் நல்லுலகம் 

Aug 12, 2016

அண்ணலும் நோக்கினான் -----

அண்ணலும் நோக்கினான் -----

நாடெங்கிலும் இப்போது கௌரவக் கொலை" என்ற பெயரில் நடக்கும் சாதிக் கொலைகள்   , நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டு வருகின்றன.

மக்களின் முழு மனமாற்றம் என்று நிகழும் ?

ரமேஷ் ( கனித்தோட்டம் )


அவளோ  "மேல்குடி"
அண்ணலோ  'கீழ்க்குடி"

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்

அதை அவள்

அண்ணனும் நோக்கினான்
அரிவாளால் தாக்கினான்.

கெளரவம் பிழைத்ததாம்!
மானுடம் செத்ததே!


)

Aug 5, 2016

குறள் மேல்வைப்பு வெண்பா - 7

குறள் மேல்வைப்பு வெண்பா - 7

Of what use are wealth, valour and even piety if one deviates from the moral path?  Many a famous person has  tripped due to some shortcomings!
In the  chapter titled  பிறன் மனை நோக்காமை  Valluvar talks about one such evil -- coveting another man's wife and the ills that it will bring.

The story of Ravana is too well known to be elaborated. Ravana coveted Sita and took her away Lanka which act, ultimately led to the destruction of his Kingdom and his death.

He was a great warrior and is reputed to have been a scholar in his own right and also a fine singer to boot. His rendering of Sama Veds is said to have moved Lord Siva so muxcch that it made him forgegive manuy of ravana's transgressions and give boons to him. But inspite of  all that , today he is remembered only for his evil deed - of coveting Sita. ( See footnote for a more detailed version) .

The Saint poet Thiruvalluvar bringsout this aspect in Kural No.146 in the "adhikaaram" (chapter) tirtled ' Piran Manai Nokkaamai". People who covet another's wife, the poet says cannot escape the Hatred of others, Sin, fear and Disgrace, however great they may be otherwise.
Now for the Kural Melvaippu Venba , in which,  the third and fourth lines are from the original kural No. 148.

ராமனின் இல்லாள்மேல் காமமுற்ற தாலிழிந்த        
ஏமரா*  ராவணனின் காதைதரும் பாடம்     
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்இறப்பான்  கண் .
*ஏமரா--  பாதுகாப்பாற்ற- (இங்கு நல்லோர் அறிவுறுத்தல் என்னும் பாதுகாப்பாற்ற- எனக் கொள்ளவும்.)
Now for the English vpoetic ersions and the  meaning.
Rev Pope says :
Who home invades, from him paas nevermore
Hatred and Sin, foul disgrace: these four
In Suddhanantha Bhathiyaar’s words :
Hatred , Sin , fear and Shame
These four stain adulteres evwer more
Meaning :
Hatred, Sin, fear and disgrace  -- These four will never leave him, who covets another's wife.
அன்புடன் 
ரமேஷ் 
Foot Note :

In the Age of the Ramayana Epic, Ravana was the most powerful Tamil King of Lankapuri (Ceylon or Sri Lanka). He was a renowned devotee of Siva, who was pleased with his severe penances and austerities, granted him the boons of earthly fame and worldly might. Ravana was a very talented Veena (Indian music instrument)  player. Ravana used Veena picture on the country flag. Ravana is not a Hindu God but rather a demon given great powers by the Gods because of his worship. The Gods granted him immunity from Death by a God  and conferred super-powers upon him. Ravana set himself up as Tamil King of Lankapuri (Ceylon or Sri Lanka).     In the height of his sovereignity, imbued with the desire to have the Lord of Kailas, his tutelary Diety installed in Lanka, he exceeded the limits of disciplined discrimination, and attempted by his invincible strength to transfix Mount Kailas, the traditonal abode of Siva from the Himalayan region to that of Lanka. He was foiled in this feat by the Lord crushing him under His Feet; and finally it was his astonding act of penance that saved him from the wrath of Siva. Ravana ripped into his left thigh, removed the nerve fibres and turned it into a lyre, and sang praise of Siva. Then it was that Siva released him, pleased with his mortification. This episode of Ravana was constantly alluded by the Saiva psalmists to signify that piety and devotion alone without purity and humility, could not redeem man or give him peace. Ravana was a great Hindu Bhakta; yet his code of life violated the Hindu Dharma and he had to pay for it dearly.

Aug 4, 2016

எங்கே எனது கவிதை


"எங்கே எனது கவிதை ? கனவில் எழுதி மடித்த கவிதை !
கவிதை தேடித் தாருங்கள், இல்லையேல் 
கனவை மீட்டுத் தாருங்கள் "

மறக்க முடியாத திரைப்படப் பாடல் வரிகள் ! வைரமுத்துவின் வைர வரிகளுக்கு, ரஹ்மானின் இனிய இசை .

கனவுகள், கவிஞர்களுக்கு கவிதை சுரக்கும்  கேணிகள்! இதற்கு நானும் விலக்கல்ல!

விடிந்தும் விடியாத காலைப்  பொழுதில், விழித்தும்  விழிக்காத அரைத் தூக்கத்தில், நினைவின் கதவுகளைத் கனவுகள் தொட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் , பல கவிதைகள் உதிக்கின்றன. ஆனால் , முழித்தவுடன், நினைவில் நிற்பது சிலவே! பலவற்றை நான் தொலைத்து வருந்தியிருக்கிறேன் !

இதோ, எனது வருத்தம் பற்றி, கலி விருத்தத்தில் , ஒரு சிறு கவிதை!

படித்து மகிழுங்கள்

அன்புடன்

ரமேஷ்

எங்கே எனது கவிதை

காலைத் தூக்கம் கலைகிற நேரம்
கனவாய் வந்தது கவிதை ஒன்று
காற்றில் அதுவும் கரையும் முன்னே
கண்ணைத் திறந்து கணினியை எடுத்தேன்


லாகின்* செய்து கூகிளுள்** நுழையுமுன்
மின்கல  அழுத்தம் முற்றும் போனதால்
கணினியை விடுத்து காகிதம் எடுத்து
எழுத முனைந்தால் பேனா காணோம்!


என்ன செய்வது என்று பதைக்கையில்
சின்னக்  கலக்கல் அடிவயிற் றினிலே.
கவிதையின் கூவலை கொஞ்சம் தள்ளலாம்
இயற்கையின் கூவலை தள்ளல் இயலுமோ?


கடன்களை முடித்து வெளியே வருகையில்
கணினியின் மின்கல அழுத்தம் நிறைந்தது.
படுக்கையின் அடியில் பேனா கிடைத்தது !
கவிதை மட்டும் மறந்து போனது!



 *  Login

** கூகிள் உள்ளீட்டுக்  கருவி 

 

Jul 30, 2016

குறள் மேல் வைப்பு வெண்பா - 6

குறள்  கருத்து மேல் வைப்பு வெண்பா - 6


Thiruvalluvar has devoted a chapter for FRIENDSHIP . The 10 verses in this chapter talk about different aspects of friendship. The particular Kural I have chosen explains how in friendship  “emotional connect “ is more important than “physical closeness”. This aspect of friendship is exemplified by the story of King Koperunch chozhan and his friend poet Pissiraanthaiyaar. The King ruled the Chola Kingdom and the poet was living in the Pandiya Nadu,
The King himself was a learned poet . He had heard about the poetic prowess of Pisiraanthaiyar and had developed a deep respect for him . Likewise , the tamil loving and erudite king had found a place in the heart of the poet pissiraanthaiyaar. though both have not met each other,  a keen friendship  had blossomed between them, through their love for Tamil.
Due to differences with his son on matters of state, the King renounced his kingdom and also decided to renounce his life by
undertaking a fast. This custom was known as Vadakkiruththal. ( வடக்கிருத்தல்) When  he embarked on this, his friend Pisiranthaiyar  heard about it and as a mark of his friendship, he joined the king in this ritual and sacrificed his life too. This indeed, is true friendship.
I have captured the story of this friendship in the first two lines of the Kural Melvaippu Venba , with the Kural which enunciates  the concept of  emotional connect being more important than  physical closeness, forming the next two lines.



கோப்பெருஞ் சோழனைக் காணாதே  நட்பான 
பாப்புனையும்  ஆந்தையார் சோழனோ டேமாண்டார்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

Here are the English versions ---

 by Rev. Pope

Not association constant , not affections taken bind
Ties the unison of feeling friends, unites of kindred mind.

by Suddhanandha Bharathiyr

No close living, nor clasping grip
friendships’ feeling heart’s fellowship

 The Meaning 

Living together and holding constant interactions are not necessary (for friendship)
Mutual understanding alone can create a claim for it.


For a more detailed version of the story of Koperunchozhan and Pisiranthaiyaar, you can got to this link.
https://sangamtamilliterature.wordpress.com/friendship-koperuncholan-and-pisiranthaiyar/


Hope you like it.
Please share it and help propagate the beauty of Thiriukkural - the Veda in verse.
 
அன்புடன் 
ரமேஷ்