ஜன்மாஷ்டமி - கிருஷ்ணன் பிறப்பின் உட்பொருளும் அது தரும் சேதியும்
கிருஷ்ணன் பிறந்தவுடன் , நந்தகோபன் அடைக்கப்பட்டு இருந்த சிறைக் கதவு தானாகத் திறந்தது ! அவரைப் பிணைத்து இருந்த தளைகள் அறுந்தன !
அது போல, மனதில் ஞானம் பிறக்கும்போது , மனிதரைப் பிணைத்திருக்கும் துர்க்குணங்கள் உடையும் ! வேற்றுமைகளை ஒழித்து மனக் கதவுகள் திறக்கும் .
இதுவே ஜன்மாஷ்டமி நிகழ்வின் உட்கருத்தோ ?
அன்புடன்
ரமேஷ்
நிசிநேர நள்ளிரவில் பூட்டிவைத்த பாழ்சிறையில்
நீபிறந்த நேரத்தில் சிறைக்கதவும் தாள் திறக்க
வசுதேவன் காலிருந்த விலங்குகளும் விலகிடவே
சிசுவுன்னைத் தோள்சுமந்து செல்கையிலே யமுனையுமே
வகிடெடுத்து வழிவிடுக்க வல்லரவும் குடைபிடிக்க
விசுவாதி தேவர்களும் வணங்கியுனை வாழ்த்துரைக்க
பசுமேய்ந்து பால்சுரக்கும் கோகுலத்தை சென்றடைந்து
யசுஓதை ஈன்றெடுத்த மகனாக வளர்ந்திட்டாய்.
அதுபோல
மாசுற்ற வாசனைகள் மிகப்படிந்த மனச்சிறையில்
இருள்விலகி ஞானஒளி பிறக்கின்ற நேரத்தில்
பாசம் அகங்காரம் ஆணவங்கள் தன்முனைப்பு
போன்ற விலங்கெல்லாம் தெறித்துடைந்து போய்விடுமே!
தேசங்கள் மதமினங்கள் தோல்நிறங்கள் என்றணிந்த
வேஷங்கள் விட்டொழித்து மனக்கதவும் திறந்திடுமே!
நிசமான இஞ்ஞானம் உடைத்தாயின் எல்லோர்க்கும்
வசமாகும் வைகுண்டம்கண்ணனவன் அருளாலே!

Touching!
ReplyDeleteநண்பா - உன் வெண்பாவை வெண்ணை போல் நுகர்ந்தோம் ! நல்ல செய்தி ( சேதி அல்ல )
ReplyDelete