Search This Blog

Aug 14, 2016

தமிழ்ப் புத்தக நண்பர்கள் குழு

தமிழ்ப் புத்தக நண்பர்கள் குழு 

நான் பணி ஓய்வு பெற்றபின்னே எனது தமிழ் ஆர்வத்தைத் தனித்துக்கொள்ள கனித்தோட்டம்
என்ற இந்த பதிவை (blog) தொடங்கினேன்.
கனவுகள், நினைவுகள், கவிதைகள், நிகழ்வுகள் என்பதின் சுருக்கமே இந்த கனித்தோட்டம்!
தொண்ணூறுக்கும் மேற்பட்ட பதிவுகள் ஆகிவிட்டாலும், எல்லாமே ( இரண்டைத் தவிர ) கவிதைகளாகவே அமைந்துவிட்டன. நூறு பதிவுகளை எட்டுமுன், நான் மாதம்  தோறும் பங்கெடுத்து வரும் ஒரு நிகழ்வைப்பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் புத்தக நண்பர்கள் குழு என்ற இந்த அமைப்பு, மாதந்தோறும் கடைசி செவ்வாய்க்கிழமைதோரும்ஒரு சிறந்த எழுத்தாளரின் புத்தகத்தைத்  தேர்ந்தெடுத்து , வேறு ஒரு தமிழ் ஆர்வலரை அதை விமர்சிக்கச் செய்கிறது. எழுத்தாளரும்  பங்கேற்கும் இந்த நிகழ்வில் ,  அவர் விமர்சனங்குளுக்கு தன் பதிலைக் கூறுவார். அதன் பிறகு கூடியிருக்கும் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்.

சென்ற இரண்டு ஆண்டுகளாக தவறாமல் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துபவர் நால்வர்.. அவர்கள் -

1.  TAG குழும நிறுவனங்களின் தலைவர் திரு. சாரி .
2. மணிமேகலைப் பிரசுரத்தின்  பதிப்பாளர் திரு. ரவி தமிழ்வாணன்.
3. விளம்பரத் துறை விற்பன்னர் திரு. ராஜன்
4. தமிழ் இலக்கிய, கர்நாடக இசைத் துறைகளில் பிரபலமான மூத்த பத்திரிகையாளர்  திரு. சாருகேசி.


இந்த மாதாந்திர நிகழ்வு , திரு. சாரி அவர்கள் நடத்தும் அறக்கட்டளையின் முழு ஆதரவில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு வருபவர்களை இன்முகத்ததோடு வரவேற்கும் ராஜன் , நிகழ்ச்சிக்கு முன் சிற்றுண்டி மண்டபத்தில் வரவேற்று அனைவருடனும் அளவளாவும் சாரி, ( செவிக்கு உணவு கிடைக்கு முன் இங்கு சற்று வயிற்றுக்கும் ஈயப்படும் ! ) , நிகழ்ச்சியைத் நேரம் தவறாமல் தொகுத்து வழங்கும் ரவி தமிழ்வாணன், , பின்னணியில் இருந்து, ஆராயப்படும் புத்தகத்தையும் , ஆராய்பவரையும் தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல், நறுக்கென்று நன்றியுரை நவிலும் சாருகேசி -- இவர்கள் அனைவரும் தொடர்ந்து செய்யும் இந்த நற்பணி நீண்டு தொடர வாழ்த்துக்கள்.

இந்தப் பணியைப் பாராட்டி ஒரு சிறு கவிதை - வெண்பா வடிவில்.

அன்புடன்
ரமேஷ்  -



சொல்லேர் உழுவோரின் சீரியநூல்  நூற்புகளை
பல்லோரு மேயறிய  மேடையிட்டுப்  பேசுதமிழ்*
நல்லுலகத் தோருக்குச்  சென்றடையச் செய்கின்ற
நால்வர்  பணியே  சிறப்பு


* பேசுதமிழ் நல்லுலகம்  - தமிழ்பேசும் நல்லுலகம் 

1 comment: