கவிபுனையும் இவ்வாசை
இந்த ஆகஸ்ட் மாதத்துடன், நான் இந்த கனித்தோட்டம் பதிவை ஆரம்பித்து ஒரு ஆண்டு முடியப்போகிறது, ஆரம்பிக்கும்போது, இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்று நிச்சயமாக நான் நினைக்கவே இல்லை. மாதம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட எட்டு பதிவுகள் - இது நூறாவது பதிவு!இவற்றில் தொண்ணூறுக்கு மேல் கவிதைகள் !
இந்த கவி புனையும் ஆசை என்னுள் எப்படி முளைத்தது?
நினைத்துப் பார்க்கிறேன் - ஒரு கவிதை வடிவில் !
அன்புடன்
ரமேஷ்
தங்கத் தமிழில் கவிபுனையும் இவ்வாசை
எங்கிருந்து என்னுள் முளைத்தது ?- கங்கில் *
முளைத்த பொறிமற்றும் தெங்கினுள்** தோன்றும்
இளநீர் இவைகளை ஒத்து.
அழியாத பாடல்கள் பன்னூறு பாடிப்
பழுத்த புலவர்கள் நூலைப் படித்தே
விழித்து வெளிவந்த ஆவலினால் நானும்
எழு(த்)தத் தொடங்கினேன் இன்று.
பழுதின்றி பாடல்கள் ஏதேனும் ஓர்நாள்
எழுதாமல் போகின்ற நாளில் - விழிமூடி
தூங்கா திடர்படும் பாட்டை இறைவாநான்
தாங்கேன் அதனையே மாற்று.
உள்ளத்தின் ஆழத்தில் உள்ளிருக்கும் எண்ணத்தை
அள்ளிநான் பாக்கள் புனைவேன் - வளரும்
கவியென என்தமிழ்ப் பாடல்கள் கேட்டு
புவியோர் புகழும் வரை.
*கங்கு-- தீபொடித்த துரும்பு
** தெங்கு -- தேங்காய்

Congratulations on you 100th creation in Kani thottam.You are absolutely out of the ordinary and some of the poems match with the best.God bless you with even greater creativity.
ReplyDeleteSankarlingam

வியக்கிறேன் உம் திறமை கண்டு
ReplyDeleteவாழ்த்துகிறேன் உம் கவ்விதைத் தொண்டு
பல்கி பெருகவே
நமது பள்ளி தமிழ் ஆசிரியர் திரு. நடராஜன் அவர்களை நினைவு கூறுகிறேன். அவரின் தமிழ் ஆர்வமும் , தமிழ் கற்பித்த முறையும் உன் தமிழ் வளற்சிக்கு ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்
ReplyDelete