Search This Blog

Nov 8, 2026

தீபாவளி வாழ்த்து

 தீபாவளி வாழ்த்து.

தீபாவளி என்றாலே கடைத்தெருக்கள் களை கட்டிவிடும். விலைத் தள்ளுபடிகள், ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்றெல்லாம் விளம்பரங்கள்! 

இதையே பின்பற்றும் வகையாக, இன்றைய வாழ்த்துக் கவிதைகள் இரண்டு - முதலாவது வெண்பா வடிவில்! மற்றது அதனோடு ஒட்டி வரும் இலவசம்! படித்து மகிழுங்கள்!

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்

அன்புடன்

ரமேஷ்

1.

வெள்ளி முளைக்கும் பொழுதிற்கு முந்தி{யே)

பள்ளி எழுந்து இறையை வணங்கி

வெளியிருள் நீஙக தீபங்கள் ஏற்றும்நம்

உள்ளத் திருள்நீங்க வாழ்த்து                                         

2. 

துலக்கிநம் வீடுகளைத் தூய்மை செய்து

இலக்குமியை வரவேற்க தீபம் ஏற்றி

உலகத்தோர் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து

நலம்காண நானின்று வாழ்த்துச் சொல்வேன்!



12 comments:

  1. Excellent! Happy Diwali!

    ReplyDelete
  2. Great, as usual. Happy Deepavali to you

    ReplyDelete
    Replies
    1. Thanks, Sundar. Hope you are keeping well. Best wishes.

      Delete
  3. கவிதைகள் நன்றாக உள்ளன. ஒன்றுக்கு ஒன்று இலவசம் பாணி அருமை.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, SNS.

      Delete
  4. இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Lovely. You are back with a bang.

    ReplyDelete
  6. எளிமையான சொற்களில் இனிய ஒரு தமிழ் வாழ்த்து.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, MN.

      Delete
  7. முதல் கவிதை சர்க்கரை பந்தல் (பொங்கல்) என்றால் இரண்டாவது இலவச கவிதை தேன்மாரி (பொழிந்தது) இரண்டு கவிதைகளும் திகட்டாத தெள்ளமுதம். அன்புடன் இரா. மாரியப்பன்.

    ReplyDelete
  8. பாராட்டுக்கு மிக்க நன்றி, மாரியப்பன்! உங்கள் பாராட்டே ஒரு கவிதை!

    ReplyDelete