தீபாவளி வாழ்த்து.
தீபாவளி என்றாலே கடைத்தெருக்கள் களை கட்டிவிடும். விலைத் தள்ளுபடிகள், ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்றெல்லாம் விளம்பரங்கள்!
இதையே பின்பற்றும் வகையாக, இன்றைய வாழ்த்துக் கவிதைகள் இரண்டு - முதலாவது வெண்பா வடிவில்! மற்றது அதனோடு ஒட்டி வரும் இலவசம்! படித்து மகிழுங்கள்!
அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்
அன்புடன்
ரமேஷ்
1.
வெள்ளி முளைக்கும் பொழுதிற்கு முந்தி{யே)
பள்ளி எழுந்து இறையை வணங்கி
வெளியிருள் நீஙக தீபங்கள் ஏற்றும்நம்
உள்ளத் திருள்நீங்க வாழ்த்து
2.
துலக்கிநம் வீடுகளைத் தூய்மை செய்து
இலக்குமியை வரவேற்க தீபம் ஏற்றி
உலகத்தோர் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து
நலம்காண நானின்று வாழ்த்துச் சொல்வேன்!
Excellent! Happy Diwali!
ReplyDeleteGreat, as usual. Happy Deepavali to you
ReplyDeleteகவிதைகள் நன்றாக உள்ளன. ஒன்றுக்கு ஒன்று இலவசம் பாணி அருமை.
ReplyDeleteஇனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete