பிளாரென்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாள் செவிலியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் அவர்கள் சேவைகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வழியாக ஒரு பாடல்!
அன்புடன்
ரமேஷ்
செவிலியர் தினம்
வெள்ளை உடையணிந்து வைத்திய சாலைகளில்
பறந்து பணிபுரியும் காரிகைகள்!
அன்பே இறையென்று அகிலம் அறியும்வண்ணம்
உரத்து உரைக்கின்ற பேரிகைகள் !
விளக்கைக் கையேந்தி களத்தில் வலம் வந்த
நங்கை நைட்டிங்கேல் வாரிசுகள்!
எடுக்க எடுக்கவே என்றும் குறையாது
கொடுக்கும் கருணை வாரிதிகள்!
கொள்ளை நோய்தம்மை கொல்லும் என்றறிந்தும்
கருணை ஊற்றெடுக்கும் ஊருணிகள்!
நோய்வாய்ப் பட்டோர் நன்கு நலமடைய
தலையா யதான காரணிகள் !
புன்னகை யைப்பூட்டி பொறுமை மிகக்காட்டி
என்றும் பணிபுரியும் பூரணிகள்!
மன்றில் இவர்போல மனித ருண்டோசொல்?
இங்கிவர்க் கில்லை ஓரிணைகள்!
அன்புடன்
ரமேஷ்
செவிலியர் தினம்
வெள்ளை உடையணிந்து வைத்திய சாலைகளில்
பறந்து பணிபுரியும் காரிகைகள்!
அன்பே இறையென்று அகிலம் அறியும்வண்ணம்
உரத்து உரைக்கின்ற பேரிகைகள் !
நங்கை நைட்டிங்கேல் வாரிசுகள்!
எடுக்க எடுக்கவே என்றும் குறையாது
கொடுக்கும் கருணை வாரிதிகள்!
கொள்ளை நோய்தம்மை கொல்லும் என்றறிந்தும்
கருணை ஊற்றெடுக்கும் ஊருணிகள்!
நோய்வாய்ப் பட்டோர் நன்கு நலமடைய
தலையா யதான காரணிகள் !
புன்னகை யைப்பூட்டி பொறுமை மிகக்காட்டி
என்றும் பணிபுரியும் பூரணிகள்!
மன்றில் இவர்போல மனித ருண்டோசொல்?
இங்கிவர்க் கில்லை ஓரிணைகள்!
Cheers to you ! They do deserve every word expressed ! A selfless sacrificing profession !
ReplyDeleteThank YOU.
DeleteNice . They are all taking risk & helping others
ReplyDeleteVery good appreciation of the selfless services by the nurses👍🙏
ReplyDeleteமிக அருமை
ReplyDeletemikka nanri,Velayudam!
DeleteChoice of words is excellent. They deserve this appreciation.
ReplyDeleteThanks a lot for the appreciation which i value very much.
DeleteExcellent composition on excellent selfless service. SUNDER
ReplyDeleteThanks a lot for your appreciation.
DeleteWell said Ramesh!They deserve fullest credit and appreciation for their service and sacrifice!
ReplyDeleteA fitting tribute to the nurses.🙏🙏
ReplyDelete