Search This Blog

May 8, 2020

சித்திரையின் முழு நிலவு

சித்திரையின் முழு நிலவு 

நேற்று சித்திரா பௌர்ணமி!

இந்த நாளில்  மாடியில் அமர்ந்து  நிலவின் அழகை ரசிக்காமல் அலைபேசியில் வரும் அலம்பல்களிலேயே  ஆழ்ந்திருக்கும்  மனிதர்களும் இருக்கிறார்கள்!

இவர்களைப் பற்றி இரு பாடல்கள்!

ஒன்று - வசனவழிக் குறும்பாடல் 
இரண்டு - மரபு வழிப் பாடல் 

எது பிடிக்கிறதோ, எடுத்துக்கொள்ளுங்களேன்!

அன்புடன்
ரமேஷ்





பாடல் ஒன்று

சித்திரா பௌர்ணமி 
மொட்டை மாடி 
விரிந்த வானம்
வட்ட நிலா
வீசும் தண்ணொளி  

----கையில் அலைபேசி !

பாடல் இரண்டு 

மொத்தமாக முழுவானை குத்தகைக்கு எடுத்திட்டு 
அத்தரியின் புத்திரனும்* சித்திரையின் பௌர்ணமியில் 
எத்திரையும் இல்லாமல் முத்திரையைப் பதிக்கையிலே 
சித்தத்தைச் சொக்கவைக்கும் பால்நிலவைப் பார்க்காமல் 
இத்தரைமேல் வாழுகின்ற பித்தர்கள் சிலபேரோ 
தத்தமது வீடுகளின் மாடிகளி லேயமர்ந்து 

விலைகொடுத்தும் கிடைக்காத நிலவழகை  நோக்காமல் 
அலைபேசி அலம்பல்களை அலுக்காமல் அலசுகிறார்!

  * புராணக் கதைகளின்படி  சந்திரன் அத்திரி என்ற முனிவரது புத்திரன். 

3 comments:

  1. "குரும்பு " பாடல் கண்டு மெச்சினேன்்நாங்க மொபைலாக இருந்த நிலை , நிலாவை விட பரிபூர்ணமாக காட்சி என்றால் அது மிகையாகாது!

    ReplyDelete
  2. Ramesh, this seemsto be from personal experience. Did you go to the terrace last night!!!ST

    ReplyDelete
  3. நன்றி . அருமை

    ReplyDelete