திறப்பு விழா
அன்புடன்
ரமேஷ்
வாழ்வைக் குலைத்திடும் போதை மதுக்கடைக்கு
வாழைக் குலையோடு மாவிலையில் தோரணங்கள்
தாழைச் சரம்சூட்டி தூப தீபங்களுடன்
நூழை* வாயிலிலே நீர்தெளித்துக் கோலமிட்டு
ஏழாம் தேதியின்று அரசும் அதனுடைய
பேழை நிரம்பவேண்டி பூட்டைத் திறக்கின்றார்!
கூழை மட்டும்உண்டு குடும்பம் நடத்துகின்ற
ஏழை பாழைகளின் பீழைகளை** எண்ணாது
ஊழோடும் உயிரோடும் ஆடுமிந்த ஆட்டத்தால்
பாழாகும் நாட்டுக்கு பாதுகாப்பு முண்டோ சொல் ?
* நூழை வாயில் = குறுகிய நுழை வாயில்
** பீழைகள் = பீடைகள், துன்பங்கள்
இன்றைய செய்தி -
இன்று திறக்கவிருக்கும் டாஸ்மாக் கடைகள் வாழை மரம், மாவிலைத்தோரணங்கள் கட்டி நன்கு அலங்கரிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் விளங்குகின்றன.
நாளை முதல் கூட்டம் அலைமோதப் போகிறது.
குடிமக்கள் போதையில் மிதக்கப் போகிறார்கள்.
பக்கத்தில் மிளகாய்ப் பஜ்ஜி, மசால் வடை கடைகள்தான் மிச்சம்!
அதையும் அரசே திறந்து வைக்கலாமே!
கஜானா இன்னும் கொஞ்சம் நிரம்பும்!
இல்லாவிட்டால் , இவைகள் இலவச இணைப்பாக அம்மா உணவகத்தில் கொடுக்கப்படுமோ?
இது பற்றி ஒரு பாடல்.
ரமேஷ்
திறப்பு விழா (photo in THE HINDU today) |
வாழைக் குலையோடு மாவிலையில் தோரணங்கள்
தாழைச் சரம்சூட்டி தூப தீபங்களுடன்
நூழை* வாயிலிலே நீர்தெளித்துக் கோலமிட்டு
ஏழாம் தேதியின்று அரசும் அதனுடைய
பேழை நிரம்பவேண்டி பூட்டைத் திறக்கின்றார்!
கூழை மட்டும்உண்டு குடும்பம் நடத்துகின்ற
ஏழை பாழைகளின் பீழைகளை** எண்ணாது
ஊழோடும் உயிரோடும் ஆடுமிந்த ஆட்டத்தால்
பாழாகும் நாட்டுக்கு பாதுகாப்பு முண்டோ சொல் ?
* நூழை வாயில் = குறுகிய நுழை வாயில்
** பீழைகள் = பீடைகள், துன்பங்கள்
True. It's a Hobson's choice for the Govts due to two reasons: a) illicit brewing/bootlegging and b) closure most of the usual channels of revenue generation for Govt.
ReplyDeleteInstead,Govt should seriously consider increasing cash resources by printing more currency, as practiced by countries like US & UK.
There is no choice . You can't ban it & it will not work . Better to educate people not to become addict . They need to have many rehabilitation centers
ReplyDeleteResources are spent on unnecessary freebies and then Govt turns to TASMAC for revenue
ReplyDeleteS'charayam kudichhathan Sangeetham thana varum. Be in realm of bliss..
ReplyDelete