திருவிளையாடல் பாடல் - 12
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திருவிளையாடல் புராணத்தைத் தொடருகிறேன் .
படித்து மகிழ்ந்து , கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
ரமேஷ்
உக்கிர பாண்டியருக்கு வேல், வளை , செண்டு கொடுத்த படலம்
மணப்பருவ மடைந்திட்ட மகனுக்ர வர்மர்க்கு மனவூரின் மன்னன் பெற்ற
குணவதியாம் கன்னி மகள் காந்திமதி என்பாளை கடிமணம் கட்டிவைத்து
செண்டோடு எரிவளையு மதன்கூட கூர்வேலும் கொடுத்தரி யணையி லமர்த்தி
விண்ணூர்தி மேலேறி உமையன்னை யுடன் சேர்ந்து கைலாசம் சென்றடைந் தார்
பாடற்பொருள்
சுந்தரபாண்டியராக பாண்டியநாட்டை ஆண்டு வந்த சிவபெருமான் , தன் மகனான முருகக் கடவுளின் அவதாரமாகிய உக்கிரவர்மனுக்கு ,மனவூரின் மன்னன் மகளான காந்திமதியை மனம் புரிவித்து அவனை மகுடம் சூட்டி மன்னனாக்கினார். அவ்வேளையில் உக்கிரவர்மனுக்கு , வளை , வேல் , செண்டு ஆகிய ஆயுதங்களை அளித்து அருள் புரிந்து தடாகைப் பிராட்டியோருடு தேவலோக விமானமேறி கைலாயம் அடைந்தார்.
The story in Tamil
பன்னெடுங்காலம் ஆட்சி செய்து வந்தபின், சுந்தரபாண்டியரான சிவபெருமான், தன் துணைவி தடாதகைப் பிராட்டியாரோடு கைலாசம் செல்ல விழைந்தார். அதற்கு முன் , தன மகனும், முருகப் பெருமானின் அவதாரமுமான தன மகன் உக்கிரவர்மனுக்கு மணமுடித்து , பின் முடிசூட்டிட விழைந்தார். மதுரையின் வடக்கே உள்ள மணவூரை ஆட்சி புரிந்து வந்த சோமசேகரன் என்னும் சூரிய குலா அரசனின் மகளான காந்திமதி என்பாளை தேர்ந்தெடுத்தார். குலவதியும் , திருமகளை ஒத்த அழகுடையாளுமான காந்திமதியை உக்கிரசேனர் மங்கலநாண் பூட்டி மணமுடித்தார்.
அதன் பின் ஓர்நாள் , சுந்தரபாண்டியர், தன மகனை அழைத்து, இந்திரன் , கடலரசுன் , மேரு ஆகியோரை வெல்ல வல்ல வளை , வேல், செண்டு ஆகிய மூன்று ஆயுதங்களையும் அளித்து அருளினார். பின் உக்கிரவர்மனுக்கு மகுடம் சூட்டி அரியணையில் அமர்த்தி, தன துணையோடு கைலாசம் சென்றடைந்தார்.
The story in English
Lord Siva, who ruled the Pandiya Kingdom , as King Sundarapandian, for a long , long, time, desired to hand over the reins of the kingdom to his son , Ukravarman,( who himself was a avthar of Lord Muruga) after getting him married. The search for a suitable bride followed and Kanthimathi, the daughter of Somasekaran, ruler of Manavoor, situated on the north of Madurai was chosen. Soon after the marriage celebrations, King Sundarapandian called his son , crowned him the as the Pandya King and gave him three armaments - a boomerang, a spear and a whip- which were to be used by him in the battles with Indra , Varuna and the Mount Meru. After completing his task, He ascended to Kailasam with his consort.
ஒப்புகை : இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள படம் shaivam.org தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.