நிலவும் பேத்தியும் - 3
பேத்திகளைப் பற்றிய இன்னொரு பாடல்.
எல்லா தாத்தாக்களுக்கும் , பாட்டிகளுக்கும் சமர்ப்பணம்.
அன்புடன்
ரமேஷ்
மஞ்சில்* மறைந்த மதியுன்னை
பிஞ்சுக் கரங்கள் தமைநீட்டி
கொஞ்சிக் கொஞ்சி வாவென்று
கெஞ்சி அழைக்கும் என்பேத்தி
குஞ்சுக் குரலுன் காதுகளில்
கொஞ்சம் கூட விழவில்லையா?
இரங்கி அவள்குரல் நீகேட்டு
இறங்கி நீயும் வருவாயேல்
உறங்கி அவள் கண் மூடியபின்
திரும்பி நீயும் சென்றிடலாம்
பேத்திகளைப் பற்றிய இன்னொரு பாடல்.
எல்லா தாத்தாக்களுக்கும் , பாட்டிகளுக்கும் சமர்ப்பணம்.
அன்புடன்
ரமேஷ்
மஞ்சில்* மறைந்த மதியுன்னை
பிஞ்சுக் கரங்கள் தமைநீட்டி
கொஞ்சிக் கொஞ்சி வாவென்று
கெஞ்சி அழைக்கும் என்பேத்தி
குஞ்சுக் குரலுன் காதுகளில்
கொஞ்சம் கூட விழவில்லையா?
இரங்கி அவள்குரல் நீகேட்டு
இறங்கி நீயும் வருவாயேல்
உறங்கி அவள் கண் மூடியபின்
திரும்பி நீயும் சென்றிடலாம்
( வஞ்சி விருத்தம் )
* மஞ்சு = மேகம்
Super
ReplyDeleteThanks.
Deleteஅன்புள்ள ரமேஷ்
ReplyDeleteஉன்னுடைய நிலவும் பேத்தியும் வரிசையில் மூன்றாவது கவிதையும் படித்தேன்.
என் பேத்தியை மனதில் வைத்துக்கொண்டு உன் கவிதைகளை படிக்கும்பொழுது
நன்றாக ரசிக்க முடிந்தது .
அன்புடன் ராம்மோகன்