பிரதோஷப் பாடல் - 17
இன்றைய பிரதோஷத்தன்று சிவனைத் துதித்து ஒரு வெண்பா !
அன்புடன்
ரமேஷ்
பிரதோஷப் பாடல் - 17
கண்ணுதலால்* காமனைச் சுட்டெரித்த கைலையனை$
தண்ணிலவைத் * தன்தலையில் இட்டவனை - எந்நாளும்
எண்ணுகின்ற மண்ணுலக மாந்தருக்கு இப்பிறவிப்
புண்ணியங்கள் சேர்ந்துவிடும் காண்
தண்ணிலவைத் * தன்தலையில் இட்டவனை - எந்நாளும்
எண்ணுகின்ற மண்ணுலக மாந்தருக்கு இப்பிறவிப்
புண்ணியங்கள் சேர்ந்துவிடும் காண்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
* -- நுதல் = நெற்றி
கண்ணுதல் = நுதற்கண் = நெற்றிக்கண்
$- கைலையனை = கைலாசத்தில் வசிக்கும் சிவபெருமானை
** - தண்ணிலவு = குளிர்ந்த நிலவு
No comments:
Post a Comment