Search This Blog

Apr 27, 2018

பிரதோஷப் பாடல்- 6

பிரதோஷப் பாடல்- 6

இன்றைய பிரதோஷத்தன்று பிரதோஷத்தைப் பற்றிய கதையுடன் ஒரு பாடல்
அன்புடன்
ரமேஷ்

The Story In English


The Devas and Asuraas were churning the Ocean of Milk, using Mount Meru as the stick  and the snake Vasuki as the rope . At that time , the snake Vasuki spit out a venom called Aalam and another venom known as the Kaalam rose from the milky ocean . These combined to produce the dreaded AalaKaala venom.  Fearing the venom, the Devas ran to Mount Kailash and prayed to Lord Siva. Lord Siva took pity on them and drank the venom  and  thus saved them and the universe. To prevent the  highly potent poison form getting swallowed, Devi Parvathi held the throat of Siva and made the venom stay there, thus resulting in the blue colour of Lord Sivas throat. Due to the after effects of the Aalakaala poison, Lord Siva became tired and resting on Parvathi's lap, slept for a day. This happened on a Dwadasi day. The next day, on Thrayothasi the Lord woke up at Pradosham hour and performed the Thandavam dance . 

பாடல் :

அரவின்வாய் விடுத்த ஆலம் கடலினின் றெழுந்த காலம் 
இருவிடம்  சேர்ந்து திரண்ட கருநீல ஆல காலம் 
அருந்தியே அண்டம் காத்து அயர்ந்தோர்நாள் உறங்கிப் பின்னர்    
திரயோதசிப் பிரதோஷ நேரம் திருநடம் புரிந்தான் மாதோ!

Apr 24, 2018

திருவிளையாடல் பாடல் 11 - உக்கிர பாண்டியன் திருவவதாரப் படலம்


திருவிளையாடல் பாடல் 11 -  உக்கிர பாண்டியன் திருவவதாரப் படலம் 










பாடல் :

சுந்தரர்  செங்கோல் ஆட்சியின் பின்னரும் சந்ததி தொடர்ந்து தழைக்க
கந்தனே  தடாதகை அன்னையின் கருவிலே மகனாய்  உருவ  மெடுத்து
வந்து பிறந்து  உக்கிர வர்மன்  என்றதோர்   பெயரை ஏற்று
தந்தைதாய் மகிழ்ந்திட   தரணியோர் வியந்திட   பலகலை கற்றுத்                                                                                                                                           தேர்ந்தான்   
  


பாடல் பொருள் :

சோமசுந்தரனாருடைய நெறிதவறாத செங்கோல் ஆட்சிக்ருட்டு, தடாதகைப் பிராட்டியார் திருவயிற்றில், கந்தப்பெருமானே மகனாய் உருவெடுத்தார். அவ்வாறு பிறந்த குழந்தைக்கு, உக்கிரவர்மன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர்.  உக்கிரவர்மனும் சிறுவயதிலேயே,  பெற்றோர் மகிழவும், மற்றோர் வியக்கவும் , பல்வேறு கலைகளும் பயின்று தேர்ச்சி பெற்றான்.

The story in Tamil :

சோமசுந்தர பாண்டியனாகவும் , அன்னை தடாதகைப் பிராட்டியாகவும் உருவெடுத்த சிவபெருமானும், அன்னை மீனாட்சியும், மக்கள் மகிழ்வுறும் விதமாக செங்கோலோச்சி  அருள் புரிந்து வந்தனர்.  இப்பாண்டிய குலம் தழைத்தோங்கவும்,  மக்கள் தொடர்ந்து நல்லாட்சி பெறவும் விழைந்த சிவபெருமானின் திருவுளப்படி , கந்தபிரானே தடாதகைப் பிராட்டியின் கருவில் மகனாக உருவெடுத்து அவதரித்தார். முருகப்பெருமானே அவதாரம் செய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இச்சிறுவன் பிற்காலத்தில், வருணன், இந்திரன், மேரு என்ற மலையரசன் என்ற மூவரையும் கூட   கண்டவுடன் நடுங்கச் செய்யும்  வீரனாக விளங்குவான் என்பதால், அவனுக்கு உக்கிர வர்மன்  என்று பெயர் சூட்டினர். வேதநெறிப்படி செய்யவேண்டிய கிரியைகளை முடித்து, வியாழ பகவானையே குருவாகப் பெற்று வேதங்களிலும் , பல்வேறு கலைகளிலும் தேர்ச்சி பெற்றான்  உக்கிர சிம்மன். விற்போர், மற்போர், வாள்போர், யானையேற்றம், குதிரை ஏற்றம், தேரோட்டுதல் என்ற பல கலைகளிலும் வல்லுனன் ஆனான்.


The Story in Eglish :

Lord Shiva and Goddess Meenakshi , in the form of King Somasundara Pandiyan and Queen Thadaathagai were ruling the Pandya Kingdom and were showering their blessings on the subjects of the Kingdom. In order that this Pandya dynasty continuous to provide good governance to the subjects of the kingdom, Lord Siva willed for Lord Muruga to take birth as their son. As willed, Queen Thadaathagai  gave birth to a male child , who was none other than Lord Muruga himself. This event gave  great joy to the  subjects of the Pandya Kingdom. The child , who with his prowess, was destined to earn the respects of Varuna, ( King of Rains) ,  Indira ( King of Devas) and Meru ( King of mountains) was named Ukkaira Varman.  Ukkirvarman learnt the Vedas and various other scriptures under the direct tutelage of Vyaazha Bhagavaan. He also became expert in various martial arts like archery, sword fighting,  wrestling  and skills like horse riding, elephant riding and riding of chariots . 


Apr 18, 2018

உண்ணா விரதங்கள்


உண்ணா விரதங்கள் 

சமீப காலத்தில் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் இருப்பது என்பது அரசியல்வாதிகளுக்குப் பழக்கமாகிவிட்டது. மக்களுக்காக தாங்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, பெருந்தலைவர்கள் சென்ற காலங்களில் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது போய், இப்போது  காலையில் ஆரம்பித்து மாலை வரையில், ஏன், மதியம் வரையும் கூட உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இம்மாதிரியான போன்சாய் உண்ணாவிரதம் கூட இருக்க முடியாமல் , ஆரம்பத்திலும்,  நடு நடுவேயும், இவர்கள் சாப்பிடுவது அமபலத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது. சமீபத்தில் நடந்த சில உண்ணாவிரதக் கூத்துகள் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ்.

உண்ணா விரதங்கள் 








ராஜ கட்டின்* முன்னாலே                 * RajGhat in Delhi
-----சாதிப்  பிரிவைக் கண்டித்து
போஜனம் துறந்து சிலமணிகள்
-----போராட் டங்கள் செய்யுமுன்னே

காலை ஒன்பது மணியளவில்
-----சாலை யோரக்  கடையொன்றில்
சோலா பதுரா* சாப்பிட்டு              * Chole Bathura
-----மாலை வரையில் உண்ணா விரதம்

காவிரி நதிநீர் இல்லாமல்
-----பயிர்களும் உயிர்களும் வாடுவதால்
சாவினை நோக்கிடும் உழவர்க்காய்
-----வாரியம் அமைக்கக் கோரியிவர் 

வள்ளுவர் கோட்ட வளாகத்தில்
-----பட்டினிப்  போரை நடத்துகையில்
கள்ளத் தனமாய் திரைக்குப் பின்
-----பிரிப்பார் பிரியாணி பொட்டலத்தை .

உண்ணா விரதம் இருக்குமிவர்
-----மக்கள் நலன்பற்றி எப்போதும்
எண்ணா விரதம் எடுத்தவராம்
-----இவர்களை நம்பி ஏது பயன் ?

கடைகளை அடையெனக் கோஷமிட்டு
-----கல்லெறி வல்லவ ரானஇவர்  - தன்
வயிறை அடக்க முடியலையே - அவர்
-----வாயைநாம் அடைப்பது எப்போது?

Apr 14, 2018

விளம்பி வருட வாழ்த்துக்கள்

புத்தாண்டு விளம்பி வருட வாழ்த்துக்கள் 

ஹேவிளம்பி ஆண்டு முடிந்து , இன்று விளம்பி ஆண்டு ஆரம்பம்.

இது அறுபது வருடங்கள் கொண்ட  தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில், முப்பத்தி இரண்டாம் ஆண்டு!

இந்த நாளன்று அனைவரும் இன்புற்று இருக்க இறைவனை வணங்கி ஒரு பாடல்.


அன்புடன்
ரமேஷ்





ஹேவிளம்பி ஆண்டு  நிறைந்து 
-----விளம்பியும்  கிளம்பும் இந்நாள் 
தீவினை அனைத்து மகன்று 
-----நல்வினை நாளும் நிறைய  
காவிரியில் நீரும் பெருகி 
------ஆவரித் தந்நதி* ஓடி 
மூவகை போகம் பயிர்கள் 
-----விதைத்துநல்  அறுவடை செய்ய 
ஆவினம் ஆடவர் பெண்டிர் 
-----யாவர்க்கும் இன்பம் சிறக்க 
துயர்களும் துன்பமும் நம்மை 
------தீண்டாது தூரம் ஓட
கூவிளத் தருவடி அமர்வோன்* *
-----சேவடி போற்றி நானோர் 
பாவினை விளம்பிப் பணிந்து
----- போற்றியே வேண்டு கின்றேனே !


ஆவரித் தந்நதி -= ஆவரித்து அந்நதி 
   ஆவரித்து = ஆரவார ஒலியுடன் 
** கூவிளத்தரு= வில்வ மரம்  
     கூவிளத் தருவடி அமர்வோன் --= வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும்                 சிவபெருமான் 

Apr 10, 2018

சிலையுதிர் காலம்










பல்வேறு தலைவர்களின் சிலைகள் இன்று தாக்கப்பட்டும், பீடங்களிருந்து நீக்கப்பட்டும் வருகின்றன. இந்த " சிலையுதிர்காலம்" பற்றி ஒரு பாடல்.!


அன்புடன் 

ரமேஷ் 


சிலையுதிர் காலம்

கோடைக் காலம் போயதன்   பின்னே 
வாடைக்  காலம்  வருவதன்  முன்னே
இலையா டைகளை உடுத்த மரங்கள் 
களையும்   காலம் இலையுதிர் காலம்.

வடகிழக் கினிலே முதலில் தொடங்கி 
வங்கா ளம்முதல்  பற்பல ஊரில் 
சடசட  வென்று சிலைகள் சரிந்து
இன்று நம்நாட்டில்  சிலையுதிர் காலம் .

திரிபுரா மாநிலத்   தேர்தல் முடிவில்  
-----முதலில் உதிர்ந்தது லெனினின்   சிலையே!
வரிசை வரிசையாய் பின்னர்ப் பலவும்   
-----அதன்பின் அடைந்தன  பரிதாப நிலையே.

புதிய கோட்டையில்  பெரியார்   சிலையும்
-----கேரளக் கண்ணூர்   காந்தியின்  சிலையும்
மதியப் பிரதேச மாநிலந் தனிலே
-----நேதாஜி சந்திர  போஸின் சிலையும்

உத்தரப் பிரதேச  மீரட்  நகரில்
-----அம்பேத் காரின் சிலையும் அதன்பின் 
(கொல்)கத் தாவில் சியாமப்  பிரசாதும்  
-----ஒன்றன்பின் ஒன்றாய்   சிதறின சிலைகள்

இவர்தான்  செய்தார் முதலில் என்றவரும்  
-----இல்லை அவர்தான் என்றே இவரும் 
தவறை மற்றவர்  மேலே சுமத்தி 
-----தன்  செயலுக்கே நீதிகற் பிப்பார்  

மேலும் மேலும் இப்போர் தொடர
-----நாளும் புதிதாய் விதைகள்  விதைப்பார் 
நல்லோர் எல்லாம்  இதனைக் கண்டு  
-----உள்ளம் வருந்தி  மனம்பத  பதைப்பார் 

இன்றிங்கு தொடங்கும்   சிலையுதிர் காலம் 
-----நாட்டுக் கேதினி*  நல்லெதிர் காலம்                        * ஏது +இனி