Search This Blog

Oct 21, 2017

ஆதார் இணைப்பு.

ஆதார் இணைப்பு



இன்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இடைவிடாது பேசப்படும் ஒரு தலைப்பு
 "ஆதார் இணைப்பு."கணினியைத் திறந்தாலும், கை  பேசியைத் திறந்தாலும் ,எல்லா 
வங்கிகளிருந்தும், தொலைபேசி நிறுவனங்களிலிருந்தும் ஆதார் எண்ணை இணைக்குமாறு 
அறிவுறுத்தல்!  
கொஞ்ச நாட்களாக, இந்த அறிவுறுத்தலும் மிரட்டலாக மாறி வருகிறது!
நீதி மன்றங்கள் இது பற்றி என்ன சொல்லப் போகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்!
இந்த "ஆதாரை"விட முக்கியமான ஒரு "ஆதாரத்தை" நம்முடன் இணைப்பதைப்  பற்றி  நாம் 
சிந்திக்கிறோமா?

அன்புடன்

ரமேஷ்

ஆதார் இணைப்பு 



வங்கிக் கணக்கு  முடங்கா  திருக்க
-----ஆதார் சீட்டைஅதனுடன்  இணைத்தார் .
சங்கட மின்றி வரிகள் கட்டிட
-----ஆதா  ருடன்பேன் கார்டை* இணைத்தார்.        * PAN CARD

பங்குக் கூறுச் சீட்டோ  டாதார்                                     * பங்குக் கூறுச் சீட்டு =ரேஷன் 
----இணைத்து  எரிவா யுருளை பெற்றார்.             * எரிவாயுருளை = GAS CYLINDER
வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பால் 
----எரிவாய் விலையில்  சலுகைபெற்றார்.

ஆயுள் ஈட்டு உறுதி ஆவணம் *                                                * Life Insurance Policies
-----வருங் காலத்து  வைப்பு நிதிகள்,*                                          * Provident Fund
கையில் ஏந்திய அலைபே சிகள்பின்     
-----கிரெடிட் கார்டுகள்*  அனைத்தையும்  இணைத்தார்   * Credit Cards

ஆனால்

ஆதார் அட்டையை அரசு கொடுத்த 
-----ஆவணம் அனைத்திலும் இணைத்தல் மட்டும் 
போதா திப்பிற  விப்பயன் எய்த !
-----பாரோர் இதனை எப்போ துணர்வார்?

உலகில் உள்ள எல்லாப் பொருட்கும்
-----ஆதா ரம்இறை வன்இதை  மறந்தார்!
மூலா தாரம் அவனோ டின்றே
-----மனதை இணைப்போம்; மேன்மை அடைவோம்.

3 comments:

  1. Excellent ! Thought provoking !

    ReplyDelete
  2. அன்புள்ள நண்பன் ரமேஷுக்கு

    மிஉன்னுடைய ஆதார் கவிதை பிரமாதம்க்க நன்றி ஞாபக படுத்தியதட்காக.
    உடனே என்னை இறைவனுடன் இணைத்துவிட புட்டபர்த்தி செல்லுகிறேன்.
    உன் தாயிடம் எங்கள் அன்பு வணக்கத்தை சொல்லவும்.

    உன் உயிர் நண்பன் ராம்மோகன்

    ReplyDelete
  3. simply superb. Is this what is called lateral thinking

    ReplyDelete