உடனே மூட உத்தரவு
கோவில்கள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் ஆகியவைகளுக்கு அருகே டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது -- இது அரசு உத்தரவு . இதை மீறி பல கடைகள் இருப்பதை பார்க்கிறோம். அது போன்ற ஒரு கடையைப் பற்றி ஒரு கற்பனைக் கவிதை.
அன்புடன்
ரமேஷ்
உடனே மூட உத்தரவு
எங்கள் சொந்தக் கிராமத்தில்
பள்ளி இருக்கும் தெரு முனையில் ,
ஆளும் கட்சியின் ஆள் ஒருவர்
திறந்தார் ஓர்டாஸ் மாக் கடையை.
பள்ளியும் கள்ளுக் கடைகளுமே
தள்ளி இருத்தல் வேண்டுமன்றோ?
கொதித்து எழுந்தார் ஊர்மக்கள்
இதுமுறை அல்ல வெனச்சொல்லி.
பஞ்சா யத்தும் கூடியது
அஞ்சுமணி நேரம் அலசியது.
நிச்சய மாக மூடிடவே
அச்சம் இன்றி முடிவெடுத்தார்.
மறுநாள் உடனே மூடிவிட்டார்
---------
---------
சிறுவர் பள்ளிக் கூடத்தை!-
படித்துக் கிழிப்பவ ரைவிடவும்
குடித்துக் களிப்பவர் அதிகமன்றோ !
Good Satire (I could not the equivalent of Satire in Tamil) and hence appreciated in English
ReplyDeleteThe Tamil equivalent s "Angatham."
ReplyDelete