Search This Blog

Apr 17, 2017

ஒரு மைல்கல் - என் நூற்றி ஐம்பதாவது பாடல்.

ஒரு மைல்கல் - என் நூற்றி ஐம்பதாவது பாடல்.


இது என்னுடைய  159 வது பதிவு. 
இதுவரை பதித்த பதிவுகளில் ஆங்கிலம்,உரைநடை,புதுக்கவிதை போன்றவை சார்ந்த  ஒன்பது பதிவுகளை விட்டுவிட்டால் , இது என்னுடைய 150 வது  தமிழ்க் கவிதைப் பதிவு !
இவைகளைப் படித்து , அவ்வப்போது கருத்தும் தெரிவித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி.
ஏதோ விளையாட்டாக எழுதத் தொடங்கி, ஒரு உந்துதலால் இதுவரை நீண்ட  இப்பயணம் இன்னும் தொடருமா?

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு : கருத்துத் தெரிவிப்பவர்கள் பலரும் என் மின்னஞ்சலுக்கே (email) கருத்தை அனுப்புகிறார்கள். இந்தப் பதிவிலேயே கருத்துத் தெரிவிக்க ஒரு பகுதி   இருக்கிறதே! அதில் தெரிவித்தால், மற்றவர்களும் அதைத் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமே!
ஒரு மைல்கல் - 150 பாடல்கள் 

சென்றசில மாதங்கள்
-----நான்புனைந்த கீதங்கள்
எண்ணிக்கை ஒருநூறு
-----ஐம்பத்தை* எட்டுகையில்                       * ஒரு நூறு ஐம்பத்து- 150

கனித்தோட்ட மரங்களிலே
-----காய்த்தஅக்  கவிதைகளை
நன்றென்று பாராட்டி
-----மன்றத்திலே பதித்த

நல்லோர்க்கு பன்முறையும்
-----நவிலுகிறேன்  நன்றியுரை.
எல்லோரும் இதையேற்று
-----எனைவாழ்த்த வேண்டுகிறேன்.

என்கவிதைப்  பாதங்கள்
-----இன்னும்பல காதங்கள்
சயனிக்கும் நாள்வரையில்
-----பயணிக்க நான்வேண்டி

மயனத்தில்* நின்றாடும்                    * " மயானத்தில்" என்று பொருள் கொள்க.
-----சிவநாதன்  இடம்உறையும்
கயல்விழித் தாயவளின்
-----கழற்பாதம் பற்றுவனே!






10 comments:

  1. ரமேஷ், உங்கள் 150, 1500, 15000....... என்று ஜியாமெட்ரிக் ப்ரோக்ரெஷன் போல் வளரட்டும்!

    ReplyDelete
  2. ரமேஷ், உங்கள் 150, 1500, 15000....... என்று ஜியாமெட்ரிக் ப்ரோக்ரெஷன் போல் வளரட்டும்!

    ReplyDelete
  3. Keep it going. I am sure your amazing progress will continue and you will publish more such fantastic poetry.

    ReplyDelete
  4. ரமேஷ் உனது பாடல் பயணம் பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ரமேஷ் உனது பாடல் பயணம் பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. I have always admired your Tamil lyrics which are refreshing and showcasing your Tamil proficiency a proof of the same was exhibited during inaugural function of Cuddslore Pvc plant.On this occaddion of publishing 150th I would like to request you to venture into English lyrics.I am sure you are not going to keep quite.Wishing you best of health to continue your good work
    Rgds

    ReplyDelete
  7. இனிய நண்பன் இரமேஷே

    தங்கள் கவிதை பிரவாகம் ஓடட்டும்
    அதை படிக்கும் எங்கள் மகிழ்ச்சி கூடட்டும்
    உங்களுக்கு நிறைய நிகழ்ச்சிகளை தர சரஸ்வதியை வேண்டிடுவோம்
    உங்கள் கவிதையை மழையை தொடர்ந்து படித்திடுவோம்

    உன் உற்ற நண்பன்
    இராம்மோகன்

    ReplyDelete
  8. தங்கள் கவிதைச் சிறகு விரியட்டும்
    கவிதை வானில் பறக்கட்டும்
    My BLOG maduraibabaraj.blogspot.com

    ReplyDelete
  9. May the Goddess guide and bless you always. Wife and I send our best wishes and congratulations.

    ReplyDelete