கவிபுனையும் இவ்வாசை
இந்த ஆகஸ்ட் மாதத்துடன், நான் இந்த கனித்தோட்டம் பதிவை ஆரம்பித்து ஒரு ஆண்டு முடியப்போகிறது, ஆரம்பிக்கும்போது, இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்று நிச்சயமாக நான் நினைக்கவே இல்லை. மாதம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட எட்டு பதிவுகள் - இது நூறாவது பதிவு!இவற்றில் தொண்ணூறுக்கு மேல் கவிதைகள் !
இந்த கவி புனையும் ஆசை என்னுள் எப்படி முளைத்தது?
நினைத்துப் பார்க்கிறேன் - ஒரு கவிதை வடிவில் !
அன்புடன்
ரமேஷ்
தங்கத் தமிழில் கவிபுனையும் இவ்வாசை
எங்கிருந்து என்னுள் முளைத்தது ?- கங்கில் *
முளைத்த பொறிமற்றும் தெங்கினுள்** தோன்றும்
இளநீர் இவைகளை ஒத்து.
அழியாத பாடல்கள் பன்னூறு பாடிப்
பழுத்த புலவர்கள் நூலைப் படித்தே
விழித்து வெளிவந்த ஆவலினால் நானும்
எழு(த்)தத் தொடங்கினேன் இன்று.
பழுதின்றி பாடல்கள் ஏதேனும் ஓர்நாள்
எழுதாமல் போகின்ற நாளில் - விழிமூடி
தூங்கா திடர்படும் பாட்டை இறைவாநான்
தாங்கேன் அதனையே மாற்று.
உள்ளத்தின் ஆழத்தில் உள்ளிருக்கும் எண்ணத்தை
அள்ளிநான் பாக்கள் புனைவேன் - வளரும்
கவியென என்தமிழ்ப் பாடல்கள் கேட்டு
புவியோர் புகழும் வரை.
*கங்கு-- தீபொடித்த துரும்பு
** தெங்கு -- தேங்காய்