Search This Blog

Jun 28, 2016

குறள் மேல்வைப்பு வெண்பா -3 ( the kural Stories )

குறள்  மேல்வைப்பு வெண்பா -3

Dear All ,

Thanks for the response to and the positive comments on  the first two posts  on Kural and the stories.

Now for the third in the series.

This one is from the Chapter titled   செங்கோன்மை -The Right Sceptre

The story referred to is that of the Chozha King  known as Manu Neethich Chozhan ( மனு நீதிச் சோழன் ).  The Kings son once ran over and killed a young calf and when the mother cow appealed to the King by ringing the Bell For Justice , the King ruled that justice will be served only when his son be killed in the same manner as the calf and implemented it. A fuller version of the story is given as a foot note.
A more detailed version of the story is  given as a foot  note.

Now for the poem in four lines, (குறள்  கருத்து மேல்வைப்பு வெண்பா ) with the Kural in original forming the third and fourth lines.

கன்றிழந்து கண்கலங்கும் தாய்ப்பசுவும் நீதிபெற   

கொன்றிட்டான் தேரேற்றி சோழமன்னன் - தன்மகனை .

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் அக்தே முறை.               

 


The English version by Suddhananda bharathiyar :

      Test and Attest impartially
      Consult and Act the laws justly.

The English version by Rev. Pope ;

       Searchout, to no one favour show
            With heart that Justice loves
       Consult, then act , this is the Rule
             that right approves

The meaning :

        To examine into (crimes which may be committed), to show no favour ( to anyone) , to desire to act with impartiality towards all and to inflict (such punishments) as maybe we wisely resolved on , constitute Rectitude.

I request you to  forward this to your friends so that they also may get exposed to / get reacquainted with the Tamil Classic Thirukkural.
V. Ramesh

The story  :

King Manuneethich chozhan was known for the proper dispensation  of justice to every one of his subjects, irrespective of their status , depending purely on the merits of the case. His name itself means ' the one who dispenses justice in accordance with the rules ordained by the scriptures .  He had installed, in front of his castle a bell which can be rung by anyone who wanted to  appeal for justice to the king. On hearing the bell , the King used to forthwith convene his court and hear the representation of the aggrieved and dispense justice.  
One day , the Kings only son , the Chozha Prince , was  riding in his chariot . He was being widely cheered by the crowd with drums and trumpets . A calf , upset by the loud noise , ran into the path  of the chariot and was run over  and killed . The story goes that The distressed cow, the mother of the calf, with tears in her eyes went and rang the bell. The surprised King learnt through his courtiers what has the caused the cow such distress and immediately ordered that his son also be run over by a chariot and killed so that , he , the father, is subjected to the  same  pain being suffered by the mother cow! Not for him the distinction between men and animals , for , the animals were as much the  subjects of his Kingdom as others !


                               

குறள் மேல்வைப்பு வெண்பா - ( Kural Stories )- 2

 Dear All
Thanks for the response for the first post on Kural and the stories. Enthused by the response , I am posting the second kural.
This one is from the Chapter entitled ' Honour "  ( Manam- மானம் ).The story referred to is that of the Pandiya king known as Korkaip Paandiyan. He was responsible for murdering Kovalan , the husband of Kannagi. The King wrongly orders Kovalan to be executed and when Kannagi proves to him that Kovalan is innocent, he is filled with remorse and dies on the spot saying -
" யானோ அரசன் ? யானே கள்வன் ! ' ( Am a a King ? No, I myself am the thief! )
A more detailed version of the story is in given as a foot  note. 
Now for the poem in four lines, with the Kural in original forming the third and fourth lines. 
Dr.Kanniappan, an avid tamil enthusiast and poet, tells me that this type of writing, where you superimpose your own creation on the top of an existing creation and create a Venba,  is called மேல் வைப்பு வெண்பா.
Accordingly I have titled this as  குறள் கருத்து மேல் வைப்பு வெண்பா.



கோணிற்றென் கோலென்று  கண்டுணர்ந்த பாண்டியனும்
வீணினிநான் .வாழ்வதென நாணியுயிர் விட்டான்.. 
மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.  
* கோணிற்றென் கோல் -- The scptre which I hold as a mark of Justice has got " bent " as I have erred.      
                              
The English version in poetic form :
The poetic English version given this time, is by the Tamil Poet Sutthanandha Bharathiaar.  I find his translation better and to the point than the much acclaimed version of Rev.Pope ! However the meaning is as given in the version by Rev.Pope and associates.
Honours Lost , the noble expire ,
Like the yak that looses its hair.
Meaning : Those who give up their life when their honour is at stake, are like the Yak ( kavari maan ) which kills itself at the loss of even one of its hair.
I request you to  forward this to your friends so that they also may get exposed to / get reacquainted with the Tamil Classic. 
V. Ramesh
The Kovaklan story :

Kovalan and his wife Kannagi, who had lost all their wealth and had fallen on bad times due to the wrong deeds of Kovalan come to Madurai from Thanjavur to make a living. Kovalan, in order to raise some money, tries to sell the anklets of Kannagi at the local market when the kings soldiers, searching for the missing anlklet of the queen, mistakenly arrest him and produce him before the King. The King, without proper enquiry, orders Kovalan to be executed. On hearing the death of her husband, Kannagi rushes to the Kings court and proves that her husband is not a thief. The King, overcome with remorse at his hasty action, dies on the spot.                                                 

Jun 25, 2016

தனி வீடொன்று தவமிருக் கிறது


நான் பல வருடங்களாக காலையில் நடைப் பயிற்சி செய்து வருகிறேன். கூட்டமில்லாத பல தெருக்கள் வழியாகச் செல்வதுண்டு.

ஏழெட்டு  வருடங்களுக்கு முன் தெருக்களில் இருக்கும் வீடுகள் கிட்டத்தட்ட எல்லாமே தனி வீடுகள் !

ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட, 99 சதவீத  வீடுகள்,  அடுக்கு மாடிக் கட்டிடங்களாக மாறிவிட்டு இருக்கின்றன.

ஆனால் , நான் நடந்து செல்லும் ஒரு விசாலமான தெருவில் , ஒரே ஒரு வீடு மட்டும் இதற்கு விதி விலக்காக, பல வருடங்களாக, மாறாமல் இருக்கிறது. நாளுக்கு நாள் சிதைபட்டுக் காட்சியளிக்கிறது.

தினமும் காணும் இந்தக் காட்சி மனதை ஏதோ செய்கிறது - உறுத்துகிறது.
காரணம் என்னவாக இருக்கும்?

இந்த உறுத்தல் சொல் வடிவில் , இதோ !

அன்புடன்

ரமேஷ்




தனி வீடொன்று தவமிருக் கிறது
 
அடுக்கி வைத்த பெட்டிகள் போலே  

அனைத்து திசையிலும்  முளைத் தெழுந்த

அடுக்கு மாடிக் கட்டுகட்  கிடையே

காலஇடமுரண்  பாட்டின் காட்டி யாய்

      தனி வீடொன்று தவமிருக் கிறது

 
தோழிய ரெல்லாம் திருமணம் முடித்து
குழந்தைகள் பெற்று வாழும் பொழுதும்,

தனக்கொரு வரனும் அமையா ததனால்

தனித் திருக்குமோர் கன்னியைப் போல

       தனி வீடொன்று தவமிருக் கிறது


 தேவேந்திரனின் கண்ணடி பட்டு

கௌதம முனிவனின் சொல்லடி பட்டு
 
ராமன் காலடி என்று படுமென

யுகம் பலகாத்த அகலிகை போல

       தனி வீடொன்று தவமிருக் கிறது

 
முகப்பொலி விழந்த மங்கையைப் போல

முகப்புகள் சிதைந்து சுவர்சிறி  திடிந்து
 
வட்ட மிடுகின்ற கழுகுகட் கிடையே

பட்ட அடியுடன் கிடக்கும் பறவைபோல் 

       தனி வீடொன்று தவமிருக் கிறது

 

துரு மிகப் பிடித்து உடைந்த  கதவில்

ஒருமூ லையிலே தொங்கும் பெட்டி

பொட்டை இழந்த நெற்றியைப் போல

வெற்றாய்க் கிடைக்கும் வாகனக் கொட்டில்

வெடிக்கும் சுவர்களில் முளைவிடும் வேர்கள்

செடிகள் மண்டி சிதைந்த தோட்டம்

அன்றொரு காலம் செல்வச் செழிப்புடன்

நன்றாய் வாழ்ந்த ஞாபகத்துடன்

       தனி வீடொன்று தவமிருக் கிறது

 
இதனுள் யாரும் இருக்கின்  றாரோ?
தனியொரு ஆளோ? ஆணோ, பெண்ணோ?
உதவிகள் வேண்டிய வயதா னவரோ?
உடல்நலம் குன்றிய வாலிபத் தாரோ?

நிதமிவ் வழியைக் கடந்து  நானும்

நடக்கும் போதும் யாரையும் காணேன்!

கதவின் பின்னால் மறைந்துள்ள கதையை
 
இதயத் துள்ளே பூட்டிக் கொண்டு

        தனி வீடொன்று தவமிருக் கிறது

 

 

 

 

 

 

 

 

 

 

Jun 23, 2016

குறள் மேல்வைப்பு வெண்பா - 1 ( the Kural with a story )- 1

குறள்  மேல்வைப்பு வெண்பா  -  1 ( the Kural with a story )- 1

Thirukkural is called Tamil Marai - meaning The Vedas in Tamil Language.
It contains 1330  Kurals.  Each Kural ,  as the name implies, is a small poem , in two lines.

The Kurals have a message for us to follow. There are stories of great men and women who have lived true to these messages.

I have taken a small step to bring out the beauty and lessons of Kurals to those who are not familiar with it / have lost touch with it.

I have composed a poem in the Venba format , in four lines. Reproducing the Kural , in its original form in the third and fourth line, in the first two lines I relate a well known story  which brings out the essence of the Kural.

Also appended is an English version of the Kural ,  in poetic form, written by Rev. Pope and others.

Here is the poem.
Hope you like it.
Ramesh.





தஞ்சமென வந்தடைந்த வெண்பறவை  யைக்காக்க 
அஞ்சாமல் தந்தான்   சிபிமன்னன்   - தஞ்சதையை  ;  !
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
The Meaning
 :
Lines 1 and 2 __The white dove,  (chased by the vulture ), sought refugee with King Sibi , who unhesitatingly , cut and gave his own flesh  (to the vulture and saved the Dove.)
Lines 3 and 4 - Those who are destitute of love , appropriate all they have to themselves ; But those who possess love consider even their bones to belong to others.

The Kural - in English -

The Loveless to themselves belong alone
the loving men are others' to the very bone.

Jun 19, 2016

எல்லைகள்



எல்லாவற்றிக்கும் எல்லைகள் உண்டு - ஒன்றினைத்து தவிர !
எது அது?
மேலே படியுங்கள்!

அன்புடன்

ரமேஷ்

எல்லைகள்

கனவின் எல்லை எது வரை ?
காலையில் விழித்து எழும்வரை. 
நினைவின் எல்லை எது வரை?
நித்திரை நம்மைத் தொடும்வரை.
ஒளியின்  எல்லை எது வரை?
கண்கள் மூடும் அதுவரை 
அன்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை.

வானின் எல்லை எது வரை?
கடலை வானம் தொடும்வரை?   
கடலின் எல்லை எது வரை ? 
அலைகள் தொடும் கரை அதுவரை.
உடலின் எல்லை எதுவரை?
சுடலையில் எரிந்தழி  யும்வரை.
அன்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை. 

பொய்யின் எல்லை எது வரை?
உண்மை வெளியில் வரும்வரை
வெய்யிலின் எல்லை எது வரை?
நிழல் தரும் தருவின் அடிவரை.
மையலின் எல்லை எது வரை?  
முப்பது நாள்முடி யும்வரை
அன்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை. 

வித்தையின் எல்லை எது வரை - அதன் 
உத்திகள் வெளியில் வரும் வரை 
கத்தியின் எல்லை எது வரை? அதன்
கூர்முனை கேடயம் தொடும்வரை 
புத்தியின் எல்லை எது வரை ? இறுதி 
புத்தகப் பக்கம்  அதுவரை 
அன்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை.     

Jun 11, 2016

குற்றாலத்தில் ஓர் காலை விடியல் !



குற்றாலத்தில் ஓர் காலை விடியல் !


ஜூன் மாதம் !
தென்கிழக்குப் பருவக் காற்று வீச ஆரம்பித்து விட்டது.  சில நாட்களாக இங்கும் மழை பெய்து வெய்யிலின் தாக்கம் சற்றே குறைந்தது.
ஒவ்வொரு ஜூன் மாதமும், இந்த சமயத்தில் குற்றாலம் நினைவுக்கு வருவது உண்டு.
நான் தூத்துக்குடியில் பணிபுரிந்து வருகையில், ஒவ்வோரு வருடமும்  குற்றாலம் செல்வது உண்டு.
அதிகாலைப் பொழுதில், அந்த அருவியின் சாரலில்  நனைந்தவண்ணம் , ஒரு புதிய நாளின் ஜனனத்தை அனுபவித்தல் ஒரு தனிச் சுகம்.!
அந்த சுகத்தை,  பல வருடங்களுக்குப் பின் நினைவு கூறுவதே இந்தப் பாடல்..

அன்புடன்
ரமேஷ்.



கரிநிகர் கருநிற இரவு  கழிந்து
வருபரு தியின்கிரணம் வானில் முளைக்க
சலசல சலவென் றோடிடும் சிறுநதி
நெடுநெடு  வான்தொடு முகட்டை  விடுத்து
படிவடி வத்தில் அமைமலைச் சரிவில்
இடைவரும் பாறைகள் பொடிபட விரைவில்
கிடுகிடு எனவிழும் அருவியும் போடும்
டமடம டமவெனும் மேளத்தின் தாளம்.


துளித் துளித் துளியாய் தெறிக்கு(ம்) நீர்த் திவலை 
விண்மண்  இடையே வெண்திரை விரிக்கும்.
பளபள வெனமி(ன்)னும் பருதியின் கதிர்கள்  
வெண்திரை ஊடே  நடமா டுகையில் 
எழுமெழு நிறம்நிறை வண்ணக் கலவை
கண்ணினைப் பறிக்குமிக் கவினுறு காட்சி
  வானவில் லொன்று வானம் விடுத்து 
விழுந்ததோ இங்கென  வியப்பை யளிக்கும்.    


சிறுசிறு பறவைகள் கூடுகள் விடுத்து
கீச்சுக் கீச்சென கூவிப் பறக்கும்.
கமகம கமவென மலர்களின் சுகந்தம்
சிலுசிலு சிலுவெனும்  காற்றை நிறைக்கும்.
பொலபொல பொலவென வானம் வெளுக்க 
கலகல கலவென நிலமகள் நகைக்க
செவ்வரிக் கரைகொண்டு மேகங்கள் தவழ 
இவ்வண்ணம் புலரும்  இன்றையப் பொழுதே !.

Jun 5, 2016

இலைகள் - , சில எண்ணங்கள்







இலைகள் - , சில எண்ணங்கள்

காலையில் , பூங்காவில் நடந்து செல்லும்போது , காலைக் காற்றில் காலில் வந்து மோதுகின்ற , உதிர்ந்த , பழுப்பு நிற இலைகளைப் பார்க்கிறேன்!

சற்று மேலே நோக்கினால், மரங்களின், செடிகளின் , கிளைகளில் அமர்ந்து ஆடும் பச்சை இலைகளைப் பார்க்கிறேன்.

கிளைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் இலைகள், பிறகு உதிர்ந்து கீழ்விழுந்த இலைகள் - இவை பற்றி , மனதிலிருந்து உதிர்ந்த சில எண்ணங்கள் - இதோ

அன்புடன்
ரமேஷ்

8888888888888888888888
8888888888888888888888888888


இலைகள் - இவை பற்றி , சில எண்ணங்கள்

8888888888888888888888 

1.

இலைகள் - இவைகள்

இருக்கும்போது சுற்றி இருக்கும் காற்றின் கருப்பை* சுவாசிக்கும்.

கரியு  அமில வாயுவை ** உண்டு சர்க்கரைப் பொருளாய் மாற்றிவிடும்.

இறந்தபின்னும் சருகாய் விழுந்து தரையில் புதைந்து உரமாகும்.

உரத்தை உண்டு வேறோர் செடியும் வளர்ந்து தழைத்து மரமாகும். 

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே இலைகள் உலகை வளமாக்கும்.

இருக்கும் போதும், இறந்த பின்னும் உலகுக் குதவும் இலைபோல 

இருகை  இருகால் இருக்கும் மனிதன் வாழும் வழியைக் கற்பானோ?

 

          காற்றின் கருப்பை*.. = காற்றிலிருக்கும் அசுத்த வாயுவை ; CO2

          கரியு  அமில வாயுவை ** = CO2

**************

******************

 

2.

மரங்களுக்குத் தெரிகிறது எப்போது இலைகளை உதிர்க்க வேண்டுமென்று .

ஆனால்

மனிதனுக்குத் தெரிவதில்லை எப்போது ஆசைகளை உதிர்க்க வேண்டுமென்று!

 

3. 

முதிர்ந்த இலைகள் உதிரும் போது

மரங்கள் அழுமா? கண்ணீர் விடுமா?

Jun 3, 2016

வாட்ஸ்அப் வெண்பாக்கள்


வாட்ஸ்அப் வெண்பாக்கள்
 
v gn9z&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true">
இது whatsapp யுகம் !

ஆளுக்கொரு ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு , ட்விட்டர்  என்ன, வாட்சப் என்ன, பிய்த்து உதறுகிறார்கள்.
ஏதோ தன்  சொந்த சரக்கு போல், தனக்கு வந்த எல்லா வற்றையும் , (அது உண்மையோ ,இல்லையோ என்ற ஒரு விசாரமமும் இன்றி ) மற்றவருக்கு பார்வோர்ட் செய்கிறார்கள்.
பாதிக்கு மேல் "உடான்ஸ்" செய்திகள்.
மீதி எல்லாம் போதனைகள்! போதி மரம் கெட்டது  போங்கள் !

இது பற்றி ஒரு மணிப்ரவாள நடையில் ( பிற மொழிச் சொற்கள் கலந்து )ஒரு பாடல்.

அன்புடன்
ரமேஷ்.

பி.கு ; வெண்பா என்று தலைப்பில் குறிப்பிடிருப்பது ஒரு "கெத்து"க்குத்  தான்! 75% தான் வெண்பா இலக்கணம் பொருந்தும். விஷயம் தெரிந்தவர்கள் பொருத்தருள்க!
பி.பி.கு : எனக்கு வாட்சப் அனுப்புபவர்களும் மன்னிக்க வேண்டும். உங்களைக் குறிப்பிடுவதல்ல இது. தொடர்ந்து அனுப்புங்கள்.


என்னாச்சு** தளத்திலே ஏராள மாகவே
கன்னா பின்னாவெனவே  நீயனுப்பும் முன்மொழிகள்^^  
சின்னாளில்*** மீண்டும்உன்  உள்வரவைச்^^^    சேர்ந்தடையும்
தன்வினை தன்னைச் சுடும்.                                                            (1)

           ** = whatsapp

           ^^  முன்மொழிகள்= forwards

           *** சின்னாளில்= சில நாளில்

           ^^^ உள்வரவு = inbox

 

தாக்கித் திரும்பிவரும் வளைதடிகள்*  மீண்டும் நமை

நோக்கிவந் தடைவுதுபோல் வாட்சப்பில் நாம் எழுதும்
வாக்கியங்கள்,போதனைகள் ,விகடங்கள் இவையனைத்தும் 
சீக்கிரமாய் திரும்பும்  நமக்கே                                                                                
             * boomerangs


நாசாவின்** பெயர்போட்டு நம்பவே முடியாத

நியூசையெல்லாம்  வாட்ஸ்அப்பில் முன்மொழிந்து அனுப்புகிறார்

கூசாமல் அவரனுப்பும் இத்தகைய செய்திகளை
பேசாமல் அழித்திடுதல் நன்று.                                   (3)

          ** = NASA


கணக்கின்றி வாட்சப்பில் நீயளிக்கும் "ஞானங்"கட்   

கிணங்காதோர் போதனைகள் பலஉனக்கே செய்திடுவார்!

இணையெதிர்ச் செயல்களுண்டு எல்லாச் செயல்கட்கும் **
உணர்வாய் இதையே இனி.                                      (4)

              ** all actions have an equal and opposite reaction