Search This Blog

Jun 3, 2016

வாட்ஸ்அப் வெண்பாக்கள்


வாட்ஸ்அப் வெண்பாக்கள்
 
v gn9z&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true">
இது whatsapp யுகம் !

ஆளுக்கொரு ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு , ட்விட்டர்  என்ன, வாட்சப் என்ன, பிய்த்து உதறுகிறார்கள்.
ஏதோ தன்  சொந்த சரக்கு போல், தனக்கு வந்த எல்லா வற்றையும் , (அது உண்மையோ ,இல்லையோ என்ற ஒரு விசாரமமும் இன்றி ) மற்றவருக்கு பார்வோர்ட் செய்கிறார்கள்.
பாதிக்கு மேல் "உடான்ஸ்" செய்திகள்.
மீதி எல்லாம் போதனைகள்! போதி மரம் கெட்டது  போங்கள் !

இது பற்றி ஒரு மணிப்ரவாள நடையில் ( பிற மொழிச் சொற்கள் கலந்து )ஒரு பாடல்.

அன்புடன்
ரமேஷ்.

பி.கு ; வெண்பா என்று தலைப்பில் குறிப்பிடிருப்பது ஒரு "கெத்து"க்குத்  தான்! 75% தான் வெண்பா இலக்கணம் பொருந்தும். விஷயம் தெரிந்தவர்கள் பொருத்தருள்க!
பி.பி.கு : எனக்கு வாட்சப் அனுப்புபவர்களும் மன்னிக்க வேண்டும். உங்களைக் குறிப்பிடுவதல்ல இது. தொடர்ந்து அனுப்புங்கள்.


என்னாச்சு** தளத்திலே ஏராள மாகவே
கன்னா பின்னாவெனவே  நீயனுப்பும் முன்மொழிகள்^^  
சின்னாளில்*** மீண்டும்உன்  உள்வரவைச்^^^    சேர்ந்தடையும்
தன்வினை தன்னைச் சுடும்.                                                            (1)

           ** = whatsapp

           ^^  முன்மொழிகள்= forwards

           *** சின்னாளில்= சில நாளில்

           ^^^ உள்வரவு = inbox

 

தாக்கித் திரும்பிவரும் வளைதடிகள்*  மீண்டும் நமை

நோக்கிவந் தடைவுதுபோல் வாட்சப்பில் நாம் எழுதும்
வாக்கியங்கள்,போதனைகள் ,விகடங்கள் இவையனைத்தும் 
சீக்கிரமாய் திரும்பும்  நமக்கே                                                                                
             * boomerangs


நாசாவின்** பெயர்போட்டு நம்பவே முடியாத

நியூசையெல்லாம்  வாட்ஸ்அப்பில் முன்மொழிந்து அனுப்புகிறார்

கூசாமல் அவரனுப்பும் இத்தகைய செய்திகளை
பேசாமல் அழித்திடுதல் நன்று.                                   (3)

          ** = NASA


கணக்கின்றி வாட்சப்பில் நீயளிக்கும் "ஞானங்"கட்   

கிணங்காதோர் போதனைகள் பலஉனக்கே செய்திடுவார்!

இணையெதிர்ச் செயல்களுண்டு எல்லாச் செயல்கட்கும் **
உணர்வாய் இதையே இனி.                                      (4)

              ** all actions have an equal and opposite reaction

                                                                            

 

 

9 comments:

  1. Very true but in a very humorous way ..............

    ReplyDelete
  2. நன்றாக அமைந்துள்ளது. சொல்வது போல பல முன்மொழிகள் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரிவதில்லை. ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். எப்படி இவ்வளவு பெரிய செய்திகளெல்லாம் தட்டி அனுப்புகிறார்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது, ஒரு இரண்டு வரி SMS அனுப்பவே முட்டி மோத வேண்டியிருக்கும்போது.

    ReplyDelete
  3. I tend to agree with the above comment in Tamil. While forwards are misleading and sometimes mischievous, they are useful sometimes not with standing.
    On the lighter vein, I used the term Watts -Up for my Solar projects.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய திரு.ரமேஷ் அவர்களுக்கு,

    தங்கள் ‘வாட்ஸ்அப் வெண்பாக்கள்’ பதிவை வாசித்தேன். நீங்கள் கருத்துகளைச் சொல்லும் பாணி ‘ஆகாசம்பட்டு சேஷாசலம்’ என்பவர் எழுதிய வெண்பாக்களில் உள்ளது போல எளிமையாக அமைந்திருக்கிறது. அவரது பாடல்கள் சிலவற்றையும், அவற்றைப் பின்பற்றி நானும் சில வெண்பாக்களையும் எழுத்து தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

    என் பங்குக்கு ஆகாசம்பட்டு வெண்பாக்கள் 6

    இரு விகற்ப நேரிசை வெண்பா

    ஆத்தோட பேசத்தான் கூழாங்கல் லுக்காசை!
    ஆத்துக்கோ பாறாங்கல் லோடுபேச! – ஆத்தாடி!
    அந்தக்கல் லுக்கோ கரையோரப் பூவோட
    அந்தரங்கம் பேச அவா! 11 - ஆசிரியர் சேஷாசலம்

    பல விகற்ப இன்னிசை வெண்பா

    ஐ.நா. சபையிலும் பாஸான தீர்மானம்
    நைனா சபையில் நவுராது! – பொய்சொல்லி
    பாட்டனி ரெக்கார்டுக் குன்னு பணம்வாங்கி
    மேட்டனிக்குப் போகமுடி யாது. 12 - ஆசிரியர் சேஷாசலம்

    சிம்புவை நம்பியே காதலிச் சாலுந்தான்
    நம்பிரபு தேவா வொடுசேர்ந்து வாழ்ந்தும்
    பிரிந்தினி யாரைத்தான் கல்யாணம் செய்து
    உரித்தாக வாழ்வார் நயன்? 1 - வ.க.கன்னியப்பன் (ஆகாசம்பட்டு பாணி வெண்பா)

    இரு விகற்ப நேரிசை வெண்பா

    வயதுதான் ஆயிற்றே முப்பதா னாலும்
    அயராது நாயகி யாக - தயங்காது
    வேடம்தான் கட்டினாலும் பேரிளம் பெண்நயன்,நீ
    நாடிபிள்ளை எப்போ பெற? 2 - வ.க.கன்னியப்பன் (ஆகாசம்பட்டு பாணி வெண்பா)

    தங்கள் பாடல்களில் கருத்து மாறுபாடின்றி வெண்பாக்களாக முயற்சித்தேன். நான்காவது பாட்டில் வெண்பா இலக்கணப்படி மாற்ற முடியவில்லை.

    மற்றவை கீழே!

    ஒரு விகற்ப நேரிசை வெண்பா

    என்னாச்சு யித்தளத்தில் ஏராள மாகவே
    கன்னாபின் னாவெனவே நீயனுப்பும் - முன்மொழிகள்
    சின்னாளில் மீண்டுமுன் உள்வரவைச் சேர்ந்தடையும்
    தன்வினை தன்னைச் சுடும். 1

    ^^ முன்மொழிகள்= forwards
    *** சின்னாளில்= சில நாளில்
    ^^^ உள்வரவு = inbox

    கலித்துறை

    தாக்கித் திரும்பிவரும் வளைதடிகள் மீண்டும் நம்மையே
    நோக்கி வந்தடைவ துபோலவாட் சப்பில் நாமெழுதும்
    வாக்கி யங்களும், போதனைகள், விகடங் களனைத்தும்
    சீக்கி ரமாய்த்திரும்பி சேர்ந்திடும் நமக்கே இங்குதானே! 2
    * boomerangs

    பலவிகற்ப இன்னிசை வெண்பா

    நாசாவின் பேர்போட்டு நம்பமுடி யாத
    நியூசையெல்லாம் வாட்ஸ்அப்பில் வேண்டியே முன்மொழிந்து
    கூசா மலேயவர னுப்புமித்த கையசெய்தி
    பேசாமல் நீக்கிடுதல் நன்று. 3

    ** = NASA
    அன்புடன்,
    வ.க.கன்னியப்பன்

    ReplyDelete
    Replies
    1. வெண்பாக்களாக மாற்றிய விதம் அருமை. நன்றி.
      சில சமயங்களில் பாட்டு எழுதுகையில், வெண்பா இலக்கணங்களில் தளை மட்டும் முற்றும் வராமல் போகிறது. எழுதும்போது மனதில் ஒரு சந்தத்தை நினைத்துக் கொண்டுவிட்டால் , சந்தம் கெடாமல் , தளைகளை வெண்டளைகளாக மாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. சற்று மெனக்கெட்டால் சில சமயங்களில் முடிகிறது.சில சமயங்களில் முடிவதில்லை.

      Delete
    2. கிண்டல் , நையாண்டி நிறைந்த பாடல்கள் அருமை.

      Delete
    3. what are Aagaasampattu venbaakkal?

      Delete
    4. வெ.சேஷாசலம், ஆகாசம்பட்டு, ஆரோவில் வழி,

      சரளமான நவீன விஷயங்களை மரபுக் கவிதைகளில் சொல்ல வல்லவர்.

      ‘ஆகாசம்பட்டு’ என்ற சுவாரசியமான கவிதைத் தொகுதி வெண்பாக்கள் கொண்டது. அதன் ஆசிரியர் கவிஞர் சேஷாசலம். ஆகாசம்பட்டு சேஷாசலம் என்று அழைக்கப்படுகிறார். ஆகாசம்பட்டு, உலக நகரமான ஆரோவில்லின் அருகே உள்ள பேரூர். இயல்பான எதார்த்தமான வெண்பாக்களை எழுதுவதிலும், ‘நக்கல்’ அடிப்பதிலும் வல்லவர்.

      Delete