இலைகள் - , சில எண்ணங்கள்
காலையில் , பூங்காவில் நடந்து செல்லும்போது , காலைக் காற்றில் காலில் வந்து மோதுகின்ற , உதிர்ந்த , பழுப்பு நிற இலைகளைப் பார்க்கிறேன்!
சற்று மேலே நோக்கினால், மரங்களின், செடிகளின் , கிளைகளில் அமர்ந்து ஆடும் பச்சை இலைகளைப் பார்க்கிறேன்.
கிளைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் இலைகள், பிறகு உதிர்ந்து கீழ்விழுந்த இலைகள் - இவை பற்றி , மனதிலிருந்து உதிர்ந்த சில எண்ணங்கள் - இதோ
அன்புடன்
ரமேஷ்
8888888888888888888888
8888888888888888888888888888
இலைகள் - இவை பற்றி , சில எண்ணங்கள்
8888888888888888888888
1.
இலைகள் - இவைகள்
இருக்கும்போது சுற்றி
இருக்கும் காற்றின் கருப்பை* சுவாசிக்கும்.
கரியு அமில வாயுவை ** உண்டு சர்க்கரைப் பொருளாய்
மாற்றிவிடும்.
இறந்தபின்னும் சருகாய்
விழுந்து தரையில் புதைந்து உரமாகும்.
உரத்தை உண்டு வேறோர்
செடியும் வளர்ந்து தழைத்து மரமாகும்.
இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டே இலைகள் உலகை வளமாக்கும்.
இருக்கும் போதும், இறந்த பின்னும்
உலகுக் குதவும் இலைபோல
இருகை இருகால் இருக்கும் மனிதன் வாழும் வழியைக்
கற்பானோ?
காற்றின் கருப்பை*.. =
காற்றிலிருக்கும் அசுத்த வாயுவை ;
CO2
கரியு
அமில வாயுவை ** = CO2
**************
******************
2.
மரங்களுக்குத் தெரிகிறது
எப்போது இலைகளை உதிர்க்க வேண்டுமென்று .
ஆனால்
மனிதனுக்குத் தெரிவதில்லை
எப்போது ஆசைகளை உதிர்க்க வேண்டுமென்று!
3.
முதிர்ந்த இலைகள் உதிரும்
போது
மரங்கள் அழுமா? கண்ணீர் விடுமா?
பருவகாலத்தினால் முதிர்ந்த இலைகள் தானே விழுகின்றன - மரத்தின் முயற்சியால் அல்ல ! ஆனால் மனிதன் முதிற்சியடைந்தும் உதறித்தள்ள முயற்சிப்பதில்லை பருவம் கடந்த ஆசைகளை !
ReplyDeleteமரத்திற்கு தெரியும் இலைகள் மீண்டும் துளிர்க்கும் என்று.அதனால் அது அழுவதில்லை.அழுவது மனிதன் மட்டுமே,எதை தொலைத்தாலும் , தன்னால் மீண்டும் அடையமுடியும் என்று தெரிந்தும் .இயற்க்கை தரும் பாடங்களை புரிந்துகொள்ளும் தேவையை மனிதன் மறந்து காலம் பல கடந்துவிட்டன நண்பா
ReplyDelete