Search This Blog

Jun 19, 2016

எல்லைகள்



எல்லாவற்றிக்கும் எல்லைகள் உண்டு - ஒன்றினைத்து தவிர !
எது அது?
மேலே படியுங்கள்!

அன்புடன்

ரமேஷ்

எல்லைகள்

கனவின் எல்லை எது வரை ?
காலையில் விழித்து எழும்வரை. 
நினைவின் எல்லை எது வரை?
நித்திரை நம்மைத் தொடும்வரை.
ஒளியின்  எல்லை எது வரை?
கண்கள் மூடும் அதுவரை 
அன்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை.

வானின் எல்லை எது வரை?
கடலை வானம் தொடும்வரை?   
கடலின் எல்லை எது வரை ? 
அலைகள் தொடும் கரை அதுவரை.
உடலின் எல்லை எதுவரை?
சுடலையில் எரிந்தழி  யும்வரை.
அன்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை. 

பொய்யின் எல்லை எது வரை?
உண்மை வெளியில் வரும்வரை
வெய்யிலின் எல்லை எது வரை?
நிழல் தரும் தருவின் அடிவரை.
மையலின் எல்லை எது வரை?  
முப்பது நாள்முடி யும்வரை
அன்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை. 

வித்தையின் எல்லை எது வரை - அதன் 
உத்திகள் வெளியில் வரும் வரை 
கத்தியின் எல்லை எது வரை? அதன்
கூர்முனை கேடயம் தொடும்வரை 
புத்தியின் எல்லை எது வரை ? இறுதி 
புத்தகப் பக்கம்  அதுவரை 
அன்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை.     

10 comments:

  1. கற்பனையின் எல்லை எதுவரை?
    கவிதை உருவாகும் அதுவரை

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கருத்து!
      கருத்துக்கு நன்றி!
      கவிதை உருவாகும் விதம் பற்றி இன்னும் ஒரு கவிதை உருவாகிக் கொண்டு இருக்கிறது. விரைவில் பதிப்பேன்!

      Delete
    2. Kaadhal enbathu edhuvarai
      Kalyana Kaalam varum varai
      Kalyaam enbathu edhuvarai
      Kazhuthinil thaali vizhum varai

      Your sog reminded me of this Chandarababu song. Superb one VR.

      Delete
  2. Replies

    1. கருத்துக்கு நன்றி!
      கவிதை உருவாகும் விதம் பற்றி இன்னும் ஒரு கவிதை உருவாகிக் கொண்டு இருக்கிறது. விரைவில் பதிப்பேன்!

      Delete
  3. வாழ்க்கை மனதின் பயணம் என்று அறிஞர்கள் கூறுவர். வாழ்க்கை அன்பால் நிறைந்தது.வாழ்க்கையும் அன்பும் முடிவில்லாதவை .அன்பை மிக அழகாய் கோடிட்டு காட்டியதற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. Very nice poem. Suggest one more stanza :
    துன்பத்தின் யெல்லை எதுவரை?
    அண்பெனும் தேன் கிடைக்கும் வரை

    ReplyDelete
  5. Very nice poem. Suggest one more stanza :
    துன்பத்தின் யெல்லை எதுவரை?
    அண்பெனும் தேன் கிடைக்கும் வரை

    ReplyDelete
  6. அன்பின் எல்லை எதுவரை ? என்றதும் த. நா . குமாரஸ்வாமியின் நாவல் " அன்பின் எல்லை " பற்றி மனதில் எழாதவர்களே இருக்கமுடியாது . படிக்காதவர்கள் தேடி பிடித்து தாருங்கள் நானும் திரும்பவும் படிக்க வேண்டுகிறேன் 60 ஆண்டுகள் பிறகு !! .

    ReplyDelete