Search This Blog

May 31, 2019

பிரதோஷப் பாடல் - 19

பிரதோஷப் பாடல் - 19

பிஞ்செ ழுத்து என்னும் அகர  உகர மகர ஓமுடன் *
அஞ்செ ழுத்து மந்தி ரத்தை காலை மாலை வேளையில் 
நூறு எட்டு** தடவை சொல்லி  தியானம்  செய்து வருபவர்க் 
கீரு எட்டு*** செல்லு வங்கள் இனிது  வந்து சேருமே  

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 

 *அ, உ , ம  என்ற மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வரும் ஒளி ஓம் என்பது. இதை     பிஞ்செழுத்து என்று குறிப்பதுண்டு.
** - நூறு எட்டு = நூற்றியெட்டு 
*** - ஈரு எட்டு = ஈரெட்டு = பதினாறு.; 16 வகை செல்வங்களும் கிட்டும் 

அன்புடன் 

ரமேஷ் 

May 21, 2019

நிலவும் பேத்தியும் - 5

நிலவும் பேத்தியும் - 5

சந்திரனைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ளவேண்டுமென்றால் , சந்திராயன் திட்டங்கள் எதற்குத் தேவை? என் பேத்தி வாவென்று அழைத்தால் அந்த சந்திரனே வானம் விட்டு இறங்கி பூமிக்கு வந்துவிடாதோ ?

அன்புடன் 
ரமேஷ் 

நிலவும் பேத்தியும் - 5



சந்திர மண்டலம் சென்று சோதனைகள் செய்வ தற்கு
எந்திரங்கள் ஏவும் கணைகள் ஏதுமினித்  தேவை யில்லை
வந்துவிடு என்றென் பேத்தி வானத்து நிலவை யழைத்தால்
தொந்தரவு ஏதும் இன்றி தரைவந்து சேருமந் நிலவே!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )



May 16, 2019

பிரதோஷப் பாடல் - 18

இன்றைய பிரதோஷப்  பாடல் .

அன்புடன்

ரமேஷ்


பிரதோஷப் பாடல் - 18


தில்லைத்  தலத்தில்    திருநடம் செய்வோனை
எல்லை யிலாக்கருணை உள்ளானை - சொல்லால்  
நமசிவ என்றே   தினமும்  துதித்தால் 
எமபயம் எட்டாது காண்

(இரு விகற்ப நேரிசை வெண்பா )


May 14, 2019

நிலவும் பேத்தியும் -4

நிலவை வாவென்று அழைக்கும் பேத்திகளின் சார்பில், நிலவுக்கு தாத்தா-பாட்டிகளின் விண்ணப்பம்!

அன்புடன்

ரமேஷ்

 நிலவும் பேத்தியும் -4

மழலை மாறாக் குழவி அவள் 
அழகிய வாயால் அழைக்கும் குரல் 
உந்தன் காதில் விழவில்லையா?
வந்திடு உடனே வான் மதியே !

தாயின் மருங்கில் தான மர்ந்து 
சேயவள் உன்னை கரம் காட்டி 
வாவென வருந்தி அழைக்கையிலே 
நீயும் வருதல் முறை தானே! 


மூவெண்  திங்கள் முடிந்த அவள்  
வாயிங் கெனவே  அழைக்கின்றாள்,  
சோறுண் ணுகையில் உனக்கூட்ட!   
வேறென்ன வேலை வாநிலவே !

May 2, 2019

பிரதோஷப் பாடல் - 17


பிரதோஷப் பாடல் - 17

இன்றைய பிரதோஷத்தன்று சிவனைத் துதித்து ஒரு வெண்பா !

அன்புடன் 

ரமேஷ் 


பிரதோஷப் பாடல் - 17


 

கண்ணுதலால்* காமனைச்  சுட்டெரித்த   கைலையனை$
தண்ணிலவைத் * தன்தலையில் இட்டவனை  - எந்நாளும்
எண்ணுகின்ற மண்ணுலக மாந்தருக்கு இப்பிறவிப்
புண்ணியங்கள்  சேர்ந்துவிடும்     காண்

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா 


* -- நுதல் = நெற்றி 
      கண்ணுதல் = நுதற்கண் = நெற்றிக்கண் 
$- கைலையனை = கைலாசத்தில் வசிக்கும் சிவபெருமானை
** - தண்ணிலவு = குளிர்ந்த நிலவு XML வடிவில்

Apr 28, 2019

நிலவும் பேத்தியும் - 3

நிலவும் பேத்தியும் - 3

பேத்திகளைப்  பற்றிய இன்னொரு பாடல்.
எல்லா தாத்தாக்களுக்கும் , பாட்டிகளுக்கும்  சமர்ப்பணம்.

அன்புடன்
ரமேஷ்




மஞ்சில்* மறைந்த மதியுன்னை
பிஞ்சுக் கரங்கள் தமைநீட்டி
கொஞ்சிக் கொஞ்சி வாவென்று
கெஞ்சி அழைக்கும் என்பேத்தி
குஞ்சுக் குரலுன் காதுகளில்
கொஞ்சம் கூட விழவில்லையா?
இரங்கி அவள்குரல் நீகேட்டு
இறங்கி நீயும் வருவாயேல்
உறங்கி அவள் கண் மூடியபின்
திரும்பி நீயும் சென்றிடலாம்
                                                                                           ( வஞ்சி விருத்தம் )

                                                                               
* மஞ்சு = மேகம் 

Apr 23, 2019

நிலவும் என் பேத்தியும் -2

குழந்தையின் முக அழகுக்கு முன் , தன அழகு தோற்றுவிடும் என்றெண்ணி, "அவள் அழைக்கையில் இறங்கி வரமாட்டேன்" என்று அடம் பிடிக்காமல் இறங்கி வா, வெண்ணிலவே 

Second in my line of poems on " The moon and my Granddaughter". ( I have three!).

Dear Moon, You know that your beauty pales in comparison to the beauty of my Grand Daughter. But because of that do not refuse to come down and play with ther , when she is calling you" !


அன்புடன் 

ரமேஷ் 





நிலவும் என் பேத்தியும் -2



வட்ட நிலவேயென் பேத்தி அழகுக்கு
கிட்ட உனதழகு வாரா  தெனவெண்ணி
எட்டி இருக்காதென்  செல்லம்   அழைக்கையில்
அட்டி* புரியாமல்  வா 

(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

அட்டி = பிடிவாதம்