நிலவும் பேத்தியும் - 5
சந்திரனைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ளவேண்டுமென்றால் , சந்திராயன் திட்டங்கள் எதற்குத் தேவை? என் பேத்தி வாவென்று அழைத்தால் அந்த சந்திரனே வானம் விட்டு இறங்கி பூமிக்கு வந்துவிடாதோ ?
அன்புடன்
ரமேஷ்
சந்திர மண்டலம் சென்று சோதனைகள் செய்வ தற்கு
எந்திரங்கள் ஏவும் கணைகள் ஏதுமினித் தேவை யில்லை
வந்துவிடு என்றென் பேத்தி வானத்து நிலவை யழைத்தால்
தொந்தரவு ஏதும் இன்றி தரைவந்து சேருமந் நிலவே!
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
No comments:
Post a Comment