பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து
முன் குறிப்பு:
இந்தப் புத்தாண்டின் பெயர் பரபாவ ஆண்டா அல்லது பராபவ ஆண்டா? நான் கீழே கொடுத்துள்ள தமிழ்ப்பெயர்கள் பட்டியலின் படி இதன் பெயர் பரபாவ ஆண்டு. பஞ்சாங்களில் குறிப்புட்டுள்ளபடி இது பராபவ ஆண்டு. நான் இந்தப் பாடலில் பரபாவ ஆண்டு என்றே குறிப்பிட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் , பாடலில் கூறப்பட்டுள்ள கருத்துகளும், எண்ணக்கிடக்கைகைகளும், எதிர்பார்ப்புகளும் மாறாதவையே!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரமேஷ்
உலக நிறை*வென்ற விசுவாசு ஆண்டிங்கு
கலகங்கள் பலநிறைந்த ஆண்டாக முடிவடைய
அருள்தோற்றம்* என்கின்ற பரபாவ ஆண்டின்று
தரையிறங்கும் வேளையிலென் புத்தாண்டு வாழ்த்துக்கள்
குறுகியதோர் கடலிடுக்குக் கால்வாயில் கப்பல்கள்
மறுபடியும் தடையின்றித் தவழ்ந்திடவே வாழ்த்துக்கள்
கால்வாயை விடமிகவும் குறுகிய மனமுடையோரின்
கோல்மால்கள் குறைந்தொழிய கவிஞன் என் வாழ்த்துக்கள்
டிரம்ப் போன்ற கோமாளித் தனத்தோரை விட்டெறிந்து
திறம்படைத்தோர் ஆட்சியினை அமெரிக்கர் பெற்றிடவும்
நடுகிழக்கு நாடுகளில் உக்ரேனில் ருஷ்யாவில்
நடக்கின்ற கடும்போர்கள் முடிந்திடவும் வாழ்த்துக்கள்
எரிவாயு எண்ணெய் கரி இவைசார்ந்த ஆலைகளை
சரிபாதி அளவேனும் குறைத்துஅணு சக்தியொடு
வளிஒளியைச் சார்ந்த உற்பத்தித் திறன்பெருக்கும்
வழிகண்டு நாம் விரைவில் வளம் பெறவும் வாழ்த்துக்கள்
சகோதரத் துவம்பெருகி சமதர்மம் நிலைத்திடவும்
விகாரங் கள்விலக்கி வாழ்வாங்கு வாழ்ந்திடவும்
பரபாவப் புத்தாண்டில் பாரதம்பெரும் வளம்பெறவும்
அரன்,அரி பிரம்மன்எனும் முத்தேவர் அருள்புரிக
* உலக நிறைவு= விசுவாசம் ; அருள்தோற்றம்= பிரபாவம் - இவை சென்ற, இந்த ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள். முழு அறுபது ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் இதோ!
Very nicely composed. Apt for the present global situation 👌.
ReplyDelete