Search This Blog

Feb 3, 2026

காலைச் சிற்றுண்டி


காலைச்  சிற்றுண்டி 

சென்ற மாதம் என்னுடைய மகன் அமெரிக்காவிலுருந்து வந்திருந்த போது ஒரு காலைவேளையில் அருகிலுள்ள ராமேஸ்வரம் கஃபே யில் காலைச்  சிற்றுண்டி(?) சாப்பிடச் சென்றோம். ஒரு மாத்திட்க்குப் பிறகு அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது , இன்னும் அந்தச் சுவை அவன் நினைவில் மிதக்கிறது என்று கூறினான்! அதன் உந்துதலின்  பேரில் எழுதிய ஒரு சிறு பாடல்! சுவைத்து மகிழுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 





மிகமிக மிகமிக மெலிதாய் வார்த்த 

முரு முரு முறுவெனும் ரவையின்    தோசை 

கம கம கம வென வாசம் வீசி  

நெய்யில் மிதக்கும் நறுமணப் பொங்கல் 

சுறு சுறு சுறுவென உரைக்கும் ரசத்தில் 

மெது மெது மிருதுவாய் ஊறிய  ரசவடை 

சிவ சிவ சிவ சிவ சிவப்பு நிறத்தில் 

பொடி மேல் தடவிய  தட்டு இட்டலி 

தேங்காயத் துகளும் கொத்து மல்லியும் 

தூவித் தெளித்த  தோசை இவற்றை 

பல பல பல பல சட்டினி வகையுடன் 

சாம்பார் சேர்த்து சாப்பிட் டானபின்  

கொதி கொதி சூட்டில்  கொதித்திடும் பாலுடன் 

கரு கருக்  கொட்டை வடிநீர் கலந்து 

சர் சர் சர் என நுரை வர ஆற்றி 

சுடு சுடு சுடுவென டிகிரிக் காபி 

குடித்து முடிக்கையில் கூடிய  தின்பம் 



12 comments:

  1. கூடுதல் சுவை, இளைய மகனுடன்
    இணைந்து சுவைத்து, சுவைத்ததனை பகிர்ந்தளித்த
    தங்களுக்கும் எல்லாவிதமான
    சுவை களும் கூட்டும். கோ. ரா

    ReplyDelete
  2. பாடல் மிக மிக மிக மக சுவை

    ReplyDelete
  3. I am able to visualise and enjoy the tasty delicacies. Very nice 👌

    ReplyDelete
  4. ராமநாதன் சாலையில் உள்ளது தானே.நான் தினமும் அங்குதான் சாப்பிடுவேன்... திருமணத்திற்கு முன்பு.

    ReplyDelete
  5. Breakfast as well as your Kavidhai are very tasty

    ReplyDelete